.

Saturday, December 18, 2010

பெண்ணுக்குள் இருக்கும் கடவுள்

பெண்கள் மனசுல என்ன இருக்கு?.. அவங்க என்ன விரும்பறாங்க.. இதெல்லாம் என்ன பி.எச்டி படிச்சுட்டு வந்தாலும் தெரிஞ்சுக்க முடியாது.. ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மனசுல ஆயிரம் இரகசியங்களையும் விருப்பங்களையும் குறைகளையும் மறைச்சு வைச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க.. மிகவும் சந்தோசமாக இருக்கறதால நினைச்சுட்டு இருக்கற பெண்ணுக்குக்கூட அவங்க ஆழ்மனசுல நிறைய விருப்பங்களும்.. தன்னுடைய இணையின் மீது குறைகளும் இருக்கத்தான் செய்கிறது..

ஒரு ஆண்.. பெண் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு.. அவங்களோட விருப்பங்களை நிறைவேற்ற ஆரம்பித்தால்.. அந்தப் பெண் பாக்கியசாலிதான்.. இங்க நான் சொல்றது அவங்களுக்கு நகை, புடவை வாங்கிக் கொடுப்பதைப் பற்றில்ல..

ஒரு ஆண்.. பெண்ணை விட உடல் அளவில் பலம் கொண்டவனாக இருந்தாலும்.. மனதளவில் பெண்களே மிகவும் பலம் கொண்டவங்களாக இருக்காங்க.. சிறுவயதில் இருந்தே.. உடலளவில் மிகுதியான வலிகளை அனுபவிச்சுட்டு இருக்கறதால்கூட மனதளவில் மிகுந்த தைரியத்தைக் கொண்டிருக்காங்கன்னு நினைக்கிறேன்..

உலகத்துல ஆண்களே.. பெண்களை ஆள்கிறவர்களாக நமக்குள்ள இல்லூசன் இருக்கு.. ஆனால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆயிட்டாலோ.. இல்ல காதலிக்க ஆரம்பிச்சிட்டாலோ.. முதல்ல பெண்தான் இதுக்குண்டான காரியங்கள்ல இறங்கறாங்க.. ஆணைத் தன் வசப்படுத்தி ஆளனும்ங்கறதுக்கு முதல் ஸ்டெப் என்னன்னா.. "ஏங்க நீங்க கரெக்டாக 9 மணிக்கு சாப்பிட்டுடுங்க, உங்க போன் காலை 6 மணிக்கு எதிர் பார்த்துட்டு இருப்பேங்க, 8 மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடுங்க" அப்படின்னு அன்பாகக் கட்டளையிடுவாங்க.. பெரும்பாலான ஆண்களுக்கு அந்த வார்த்தைகள் ஆரம்பத்துல அப்படியே உருகிப்போய்.. சொல்றதை அப்படியே செய்வாங்க.. உண்மையைச் சொல்லப்போனால்.. அந்தப் பெண் குறிப்பிட்ட நேரம் எப்போ வரும்னு.. 2 மணிநேரம் அல்லது 3 மணிநேரம்னு அவங்க வசதியைப் பொருத்து காத்திட்டு இருக்க ஆரம்பிச்சுடறாங்க.. ஆனால் அது ரியாலிட்டி இல்லவே..

தினமும் சொல்ற நேரத்தைக் கடைபிடிப்பது என்பது முடியாத காரியமாயிடுது.. ஒரு மாதமோ அல்லது அவர்களுக்கு முடியற வரைக்குமோ கேட்பாங்க.. அப்புறம்தான் இந்தப்பெண் தன்னை டாமினேட் பண்றாளோன்னு எண்ணம் வரத்தொடங்கியவுடன் முரண்டு பண்ண ஆரம்பிப்பாங்க.. உடனே பொண்ணுக்கு பொசசிவ்நெஸ் வந்திடும்.. நான் சொன்னதை முன்ன எல்லாம் கேட்டுட்டு இருந்தீங்க.. இப்ப என்ன வந்ததுன்னு சண்டை ஆரம்பிக்கும்..

இந்த அன்புக் கட்டளைகளை பெண்கள் இடும்போதே.. இல்ல அந்த நேரங்கள்ல எனக்கு வேற வேலை இருக்குன்னு ஆண் சொல்லும் போது.. பெண்ணோட முதல் முயற்சி தோல்வியடையுது.. ஆனாலும் மீண்டும் மீண்டும் அதற்குண்டான முயற்சி செய்துட்டேதான் இருப்பாங்க.. அவங்களோட எண்ணம் வெற்றியடையும் வரையோ.. அந்த ஆணிடம் இருந்து அடக்குமுறைகள் கையாளப்படும் வரையோ அந்த முயற்சி தொடர்ந்துட்டேதான் இருக்கும்.. பலர் தனது அன்பைக் கொண்டு இந்த முயற்சியில் ஜெயிச்சிடறாங்க.. சிலர் தோல்வியடையறாங்க..

ஆண் ஆரம்பித்துல இருந்தே தன்னுடைய ரியாலிட்டியை மீறி செயல்படாம இருந்தால்.. எந்த சண்டையும் வராதுன்னுதான் நினைக்கிறேன்.. இதுதான் நான்.. இப்படி நான் இருப்பேன்.. இப்படி உன்னிடம் எதிர்பார்க்கறேன்னு ஒருவருக்கு ஒருவர் பேசிக்கிட்டாங்கன்னா ஒரு புரிதல் வந்திடும்..

காதல் பண்றவங்ககிட்டயும்.. புதியதாக கல்யாணம் நிச்சயம் ஆனவங்ககிட்டயும்தான் இந்த ரியாலிட்டி பிரச்சினை அதிகமாக இருக்கு..

அவர்கள் காதல் மயக்கத்துல ஒருவருக்கொருவர்.. அப்படி இப்படின்னு பீலா விட்டுக்கறதும்.. நைட் முழுக்க தூங்காம பேசிக்கிட்டே இருக்கறதையும் பல இடங்கள்ல பார்க்க முடியுது.. ஆனால் இதே நிலைதான் எப்பவும் தொடருமா?.. கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் நிலைமை மாறுது.. வேறு வேறு இடங்களில் இருந்து கொண்டு காதல் பண்ணிட்டு இருந்தவங்க.. இப்போ பக்கம் பக்கம் ஒரே அறையில்.. கொஞ்ச நாட்கள்ல அவங்க முன்பு செய்துட்டு இருந்த விசயங்கள் போலியாகத் தோன்ற ஆரம்பிக்குது.. அதை ஆண் வெளிப்படையாகக் காட்டறான்.. பெண் அப்படிக்காட்டறது இல்ல.. அதனால் நீங்க முன்ன மாதிரி இல்ல.. அப்போ மட்டும் என்னை அப்படி..இப்படின்னு கொஞ்சத் தெரிஞ்சதான்னு சண்டை ஆரம்பிக்குது.. அதனால் காதல் பண்றவங்களும் சரி.. புதியதாக நிச்சயம் ஆனவங்களும் சரி ரியாலிட்டியை மனசுல வைச்சுக்கிட்டு பழகினாங்கன்னா இந்தப் பிரச்சினை கண்டிப்பாக ஏற்படாது.. மிகைப்படுத்தி நடந்து கொண்ட பிறகு.. உண்மையான நடவடிக்கையைக் காமிச்சாதான் ஒத்துவராது..


நான் தொடக்கத்தில் சொல்லியிருந்தது போல ஒரு பெண்.. ஆணை ஆளமுடியாம தோல்வியடைந்தால்.. அவர்களோட முயற்சி எப்பவும் நின்று போயிடறதில்ல.. அடுத்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்கிட்ட அந்த எண்ணத்தை செயல்படுத்த ஆரம்பிக்கறாங்க.. அப்படின்னா.. கொடுமைப்படுத்த ஆரம்பிக்கறாங்கன்னு சொல்ல வரல.. அன்பால் கட்டளையிட ஆரம்பிக்கறாங்க.. உதாரணத்துக்கு.. பார் உன் தகப்பன்தான் நான் சொல்றது எதையுமே கேக்கல.. நீயாவது கேள்டா அப்படின்னு சொல்ல ஆரம்பிப்பாங்க.. பிள்ளைக்கு அப்போது என்ன தோனும்.. தனது அப்பா மேல் நல்ல மரியாதையும் அன்பும் இருந்தாலும்.. அம்மா சொல்றதைத்தான் முதல்ல கேக்கனும்னு ஒரு விதை விழுந்திடும்..

பெண்ணின் எண்ணங்கள் ஆரோக்கியமாக இருக்கறவரை அந்தப் பெண்ணுக்கும் சரி.. அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் சரி.. நல்லதாக அமையும்.. பெண்ணின் எண்ணங்கள் தவறாக இருக்கும்போது.. இந்த முயற்சி வெற்றி அடைந்தாலும்.. தோல்வி அடைந்தாலும் கஷ்டம்தான்..

நான் மேல் சொன்ன விசயங்கள்ல.. ஆணோ பெண்ணோ.. யாராவது தன்னுடைய விருப்பங்களில் சிலவற்றைத் தன்னுடைய இணைக்காக விட்டுக் கொடுக்கறதுலதான் வெற்றிகரமான தாம்பத்தியம் அமையுது..

கடவுள் 
உலகைப் படைத்தார்
பெண்
உயிர் கொடுத்தாள்
அம்மா
இவர்தான் என் கடவுள்!

டிஸ்கி: இது ரொம்ப சென்சிட்டிவான மேட்டர்.. இதுல நான் ஆணைதான் அல்லது பெண்தான் உயர்ந்தவங்கன்னு சொல்ல வரல.. இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட முதல் காரணம் என்னவாக இருக்கும்னு யோசிக்கும்போது இப்படியெல்லாம் தோனுச்சு.. சோ இதெல்லாம் கரெக்டாக இருந்தால்.. தப்பிச்சேன்.. தப்பாக இருந்தால் ரொம்பவும் திட்டீடாதீங்க.. நான் கொஞ்சம் பயந்த சுபாவம்.. :-)


படம்: நன்றி கூகுள்