தமிழ்மிண்ட் அராஜகங்கள்..


இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பதிவர் இம்மாதிரி பதிவிட்டிருந்தார்.. தமிழ்மிண்ட்ல ஜாயின் பண்ணுங்க.. உலக நடப்புகள் மற்றும் உங்களுக்கு எந்த விசயங்களில் விருப்பம் இருக்கோ.. அந்த விசயங்களை எல்லாம் உங்க மொபைலுக்கு மெசேஜ் அனுப்பி உடனுக்கு உடனே தெரிவிப்போம்.. உங்களுக்கு எந்த டைம்ல மெசேஜஸ் வரவேண்டாம்னு நினைக்கறீங்களோ.. அந்த டைம் மென்சன் பண்ணிட்டால்.. அந்த சமயங்களில் உங்களுக்கு எந்த மெசேஜும் அனுப்ப மாட்டோம்.. அதுபோல உங்களுக்கு எங்க சேவை பிடிக்கலைனா "NO MINT" அப்படின்னோ என்னவோ டைப் பண்ணி அனுப்பினா.. இந்த சேவையில் இருந்து நீங்க விலகிடலாம்னு இருந்தது..

நான் நண்பர்கள் அனுப்பியிருக்கும் ஃபார்வேர்டு மெசேஜையே படிக்க மாட்டேன்.. ஆனால் அந்த பிளாக்கர் எழுதிய விதமோ என்னவோ.. நான் அதில் இம்ப்ரஸ் ஆகி.. அவர் குடுத்திருந்த லிங்கிற்குப் போய் பார்த்தேன்.. விளையாட்டு, அரசியல், உலக செய்திகள் அப்படி இப்படின்னு.. நூற்றுக்கு மேல வகைகள் அதில் இருந்தது.. சரி இப்போதைக்கு இருக்கட்டுமேன்னு.. உலக செய்திகள் மற்றும் இன்றைய கருத்துக்கள் அப்படிங்கற இரண்டு தலைப்புகளை தேர்வு செய்து சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்..

சப்ரைப் பண்ணின கொஞ்சம் நேரத்தில் ஒரே ஒரு மெசேஜ் வந்தது.. மெசேஜை ஓப்பன்கூட பண்ணாம டெலிட் பண்ணிட்டேன் அப்போ.. அன்னைக்கு நைட் 10 மணிக்கு ஆரம்பித்தது தொல்லை.. தொடர்ந்து 5 செகண்டுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிட்டே இருந்தாங்க.. என்னடா இது வம்பாப் போச்சுன்னு.. சேவையை கேன்சல் பண்ண அவங்க குறிப்பிட்டிருந்த நம்பருக்கு.. மெசேஜ் பண்ண.. எங்களால இப்ப உங்க சேவையை கேன்சல் பண்ண முடியல.. கொஞ்ச நேரம் கழிச்சு ட்ரை பண்ணுங்கன்னு மெசேஜ் வந்தது.. சரி காலையில் ட்ரை பண்ணலாம்னு.. மொபைலை சைலண்ட்ல போட்டுட்டு தூங்கிட்டேன்.. அடுத்த நாள் காலையில் பார்த்தால் 89 மெசேஜ் வந்திருந்தது.. ரொம்பக் கம்மியாதான் அனுப்பியிருக்காங்கன்னு நினைச்சுட்டு.. திரும்பவும் ட்ரை பண்ணேன்.. பண்ணேன்.. பண்ணேன்.. அன்னைக்கு முழுக்க நிறைய முறை ட்ரை பண்ணிட்டேன்.. அப்புறம் கொஞ்ச நாளைக்கு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ட்ரை பண்ணிட்டே இருந்தேன்..

அந்த பிளாக்கோட பேர் தெரியாததால அங்கேயும் போய் திட்ட முடியல.. வேற எப்படி ட்ரை பண்றதுன்னு தெரியல.. ரீசண்டா ஒரு பதிவர்.. தமிழ்மிண்ட்ல ஜாயின் பண்ணுங்க.. நான் அனுப்புற மெசேஜ் மட்டும்தான் வரும்.. உங்களுக்கு தொந்திரவு இருக்காதுன்னு எழுதியிருந்ததைப் படிச்சேன்.. ஆபிஸ்ல வேலை அதிகம் இருந்ததால.. அந்த விண்டோவை அப்படியே ஓப்பன் பண்ணி வைச்சுட்டு.. வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.. அப்படியே மறந்து "Shutdown" பண்ணிட்டேன்..

இன்ஸ்ட்ரக்சன்ல குறிப்பிட்டிருந்த முறைப்படி என்னால் அந்த சேவையை நிறுத்த முடியல.. உங்களுக்கு ஏதும் தெரிந்தால் சொல்லுங்க..

இதில் நிறைய விளம்பரங்கள் வருது.. அதனால நிறையப்பேர் இதை கூகுள்கிட்ட இருந்து அவுட்சோர்ஸ் எடுத்துப் பண்றாங்களான்னு தெரியல.. இந்த சேவையைக் குறை சொல்லல.. எனக்கு வேண்டாம்னுதான் சொல்றேன்.. :-)..

"9870807070" இந்த நம்பர்ல இருந்துதான்.. தினமும் குறைந்தது 20 மெசேஜாவது வருது.. யாருக்கும் வழி தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ்..

டிஸ்கி: இதை ஒரு பதிவாகப் போடனும்ங்கறது என் எண்ணம் இல்ல.. ஆனால் இந்த சேவையைப் பயன்படுத்தச் சொல்லி இரண்டு பதிவுகளை நான் படிச்சிருக்கறதால.. அதை உபயோகப்படுத்திய என்னுடைய நிலையையும் தெரியப்படுத்தவே இந்தப் பதிவு..


41 Responses So Far: