என்றும் நட்புடன் - பாபு


பிளாக்ஸ் படிக்க ஆரம்பிச்சு சுமார் 6 மாசம்தான் ஆகுது.. ஆக்சுவலா பதிவுலகம் இருக்கறதே எனக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் தெரியும்.. திரை விமர்சனங்கள் படிக்கறதுக்காக படப்பெயரைத் தேடறப்போ பிளாக்ஸ் கிடைச்சது.. அப்படியே படிக்க ஆரம்பிச்சேன்.. அப்புறம் அதுவே பழக்கமாயிடுச்சு.. அப்படிப் படிக்கறப்போ பதிவுலக நண்பர்கள் 50 வது பதிவு, 100 வது பதிவு அப்படின்னு போஸ்ட் போட்டிருப்பாங்க.. என்ன பெரிய 50,100னு படத்துல நடிக்கற மாதிரியில விளம்பரப்படுத்திட்டு இருக்காங்க.. அப்படின்னு நினைச்சுப்பேன்.. ஆனால் 50 பதிவுகள் எழுதினதுக்கு அப்புறம்தானே தெரியுது அதுல இருக்கற சந்தோசமே..

பதிவுகள் படிச்சுட்டு இருந்து ஒரு மாசத்துக்குள்ளாகவே எல்லாருக்கும் மாதிரி எனக்கும் ஆசை வந்து.. நானும் பதிவு எழுதத் தொடங்கிட்டேன்..

முன்ன எல்லாம் கால்ரேட்ஸ் ரொம்ப அதிகமாக இருக்கப்போ.. பசங்க எல்லாம் மெயில் பண்ணுவானுங்க.. போன் பேசறது மலிவானதுக்கு அப்புறம் எல்லாம் யார் மெயில் பண்ணிட்டு இருக்கா.. எனக்கு நண்பர்கள்கிட்டயிருந்து பெர்சனல் மெயில்ஸ் வந்தே ஒரு 3 வருசம் இருக்கும்.. அதுக்கப்புறம் நிறைய ஃபார்வேர்டு மெயில்கள் வந்திட்டு இருக்கும்.. மொபைல்ல இருந்தே மெசேஜஸ் அனுப்பறது வாடிக்கையானதுக்கு அப்புறம் நிறைய ஸ்பம் மெயில்ஸும்.. வேலை தேடறப்போ நாக்ரி மாதிரியான சைட்கள்ல இருந்து ஜாப் ஓப்பனிங்ஸ் மட்டும்தான் வந்திட்டு இருக்கும்..

இப்போ தினமும் எக்கச்சக்கமான மெயில்கள்.. நண்பர்களோட பதிவுகளைப் படிச்சுட்டு ஃபாலோஅப் பண்ணிட்டு வந்திட்டு.. அவங்களுக்கு வர்ற கமெண்டுகளைப் படிச்சு.. அதுக்கு திரும்ப ரிப்ளை பண்ணிக்கிட்டுன்னு ஒரு புதிய அனுபவமாயிருக்கு.. இந்த அனுபவத்தைக் கொடுக்கற பதிவுலக நண்பர்களுக்கு எனது நன்றிகள்..

முதல்ல தைரியமாக எல்லாம் பதிவு எழுத ஆரம்பிச்சுடல.. ரமேஷ் (பிரியமுடன் ரமேஷ்) எப்பவும் பதிவுகள் படிச்சுட்டே இருப்பார்.. எதையோ படிச்சுட்டு இருக்கார்னு கண்டுக்கவே இல்ல.. ரெண்டு பேரும் மதராசப்பட்டினம் படம் பார்த்துட்டு வந்துட்டு அதைப் பற்றிய விமர்சனத்தை எழுதனும்னு.. அன்னைக்கே ஒரு பிளாக் கிரியேட் பண்ணி.. விமர்சனமும் எழுதி போஸ்ட் பண்ணிட்டார்.. ரொம்ப சந்தோசமா இருந்தது.. அட நம்ம கூடவே ஒரு பிளாக்கரா.. அப்படின்னு ஆச்சரியமா இருந்தது.. அப்புறம் கொஞ்ச நாள்ல உனக்கும் ஒரு பிளாக் கிரியேட் பண்ணிட்டேன்.. நீ கண்டிப்பா எழுதனும்.. அப்படின்னுட்டார்.. சரி ரொம்ப தொல்லை பண்றாரேன்னு ஒரு அறிமுகத்தை மட்டும் கொடுத்துட்டு கலண்டுக்கலாம்னு நினைச்சேன்.. ஆனால் அதுக்கு ஒரு பத்து கமெண்ட் வந்ததுன்னு நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்.. வரவேற்கிறோம்னு.. ஒருமாதிரி ஜிவ்வுன்னு இருந்தது.. எதாவது எழுதனும்னு நானும் எழுத ஆரம்பிச்சிட்டேன்..

பதிவுகள் எழுதறதுக்கு முன்னாடி ரமேஷ்.. எனக்கு ஏதாவது கவிதைகள்.. கதைகள் எழுதிக் காமிச்சுட்டே இருப்பார்.. இந்தப் பதிவே ரமேஷ்னாலதான் எழுத ஆரம்பிச்சேன்.. அதனால நண்பர்கள் தினத்திற்கு அவர் எனக்கு எழுதிய கவிதை ஒன்றை இங்கே பப்ளிஷ் பண்றேன்..

நண்பன் இல்லாத வாழ்க்கை
நரம்புகளற்ற வீணைக்கு சமம்
நரம்பில்லாத வீணை
விறகிற்கு சமம்

நான் விறகாய் எரிந்துவிடாமல்
வீணையாய் மாற்றிய நண்பனே
உனக்காய் நான் தருவேன்
என்னிடம் இருக்கும்
மகிழ்வான ராகங்களை
இதுல முதல்ல வர்ற நாலு லைன் ஒரு பழைய ஆனந்த விகடன்ல ரமேஷ் படிச்சாராம்.. அப்போ நண்பர்கள் தினமா இருந்ததால.. அடுத்து வர்ற ஐந்து வரிகளை எழுதி எனக்குக் கொடுத்தார்.. மெமரபில் ஒன்..

என்னுடையப் பதிவுகளைப் படிச்சு.. ஓட்டுகள், கருத்துகளிட்டும்.. வாசித்தும் ஆதரவளிச்சுட்டு இருக்கற நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..64 Responses So Far: