பெங்களூர்ல இருந்து நம்ம ஊருக்குப் போறதுக்கு கரெக்டா 10 மணி நேரத்துல இருந்து 11 மணி நேரமாயிடுங்க.. பெங்களூர் டூ சேலம்.. அப்புறம் அங்கேயிருந்து பழனிக்கு வண்டிகள் ஒரு மணி நேரத்துக்கு ஒன்னுன்னு இருக்கும்.. நான் எப்பவும் இந்த மாதிரி மாறி மாறி போறதை விரும்பறதில்லை.. ஏன்னா பஸ்ல ஏறி உட்கார்ந்து கண்டக்டர் டிக்கெட் கொடுக்கற வரைக்கும்தான் முழுச்சிருப்பேன்.. அப்புறம் அடுத்து வண்டி எங்கெங்க நிக்குதுதோ அங்கே மட்டும்தான் முழிப்பு வரும்.. அதனால எப்பவும் பிரைவேட் பஸ்களைத்தான் விரும்பறது.. பஸ் ஏறி தூங்கினமா.. ஊர்ல வந்து கண்ணு முழிச்சமா.. இப்படி இருக்கறதுதான் பிடிக்கும்.. நிறையப் பேரைப் பார்த்து இருக்கேன்.. நைட் முழுக்க கொட்டக் கொட்ட கண் முழிச்சிட்டே வருவாங்க... நமக்கு அதெல்லாம் சரிபட்டு வராது...
சாதாரண பேருந்துகளை நான் விரும்பாதததுக்கு இன்னொரு காரணம்.. அம்மாதிரியான பேருந்துகள்ல 3 மூன்று பேர் உட்கார்ற மாதிரி ஒரு வரிசையிலயும்.. ரெண்டு பேர் உட்கார்ற மாதிரி ஒரு வரிசையிலும் சீட்கள் அமைச்சிருப்பாங்க.. எந்தப் பக்கம் உட்கார்ந்தாலும் சரி.. கூட உட்கார்றவங்க கொஞ்சம் குண்டா இருந்துட்டாங்கன்னா.. ரொம்ப அசெளரியமாகப் போயிடும்.. காரணம் நம்ம அரசாங்கப் பேருந்துகள்ல சீட் அவ்வளவு அசெளரியமாக இருக்கும்.. இதுல பக்கத்துல உட்கார்ந்து வர்றவங்க தூங்கி நம்ம மேல விழ ஆரம்பிச்சிட்டாங்கன்னா.. அப்புறம் நாம் இறங்கற வரைக்குமோ இல்ல அவங்க இறங்கற வரைக்குமோ அவங்க தலைப் பிடிச்சு தூக்கி விட்டுட்டேதான் இருக்கனும்.. அவங்களோட பாரத்தையும் சுமந்துட்டே.. ஒரே எரிச்சலாய் போயிடும்..
இதுல சிலர் பஸ் ஏர்றதுனாலே தண்ணியடிச்சுட்டுதான் ஏறுவாங்க.. பயங்கரமாக நாறித்தொலைக்கும்.. தலைவலி வந்துடும்.. இதனால ஊருக்குப் போறதுனாலே எப்பவுமே பிளான் பண்ணி.. டிக்கெட் புக் பண்ணிப் போயிடுவேன்.. சில நேரங்கள்ல திடீர்னு ஊருக்கு கிளம்ப வேண்டியிருக்கும்.. இல்லன்னா.. பிரைவேட் பஸ்கள்ல டிக்கெட் கிடைக்காமப் போயிடும்.. அந்த சமயங்கள்ல மேல் சொன்னமாதிரி ஏதாவது பிரச்சினைகளைத் தாங்கிக்கிட்டுத்தான் போக வேண்டியிருக்கும்..
இந்தமாதிரி எதிர்பாராத பயணங்கள்ல பெரும்பாலும் SETC கிடைக்குதான்னு பார்ப்பேன்.. ஏன்னா.. SETC பஸ் புல்லாயிடுச்சுன்னா.. இடையில இருக்கற எந்த ஊர்களுக்குள்ளயும் நுழையாம நேரா பைபாஸ் ரோட்ல போயிட்டே இருப்பாங்க..
ஒருமுறை ஊருக்குப் போறதுக்கு பஸ்ஸுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தப்போ.. ஒரு SETC வந்தது.. உள்ளே சீட் எல்லாம் இல்லப்பா.. டிரைவர் சீட் பின்னாடி உட்கார்ந்துகறதுனா ஏறிக்கோ அப்படின்னார் கண்டக்டர்.. சரி.. நார்மல் பஸ்ல போனாலும் ரொம்பக் கஷ்டம்தான்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயிடலாம்னு ஏறிட்டேன்.. ஒசூர் தாண்டி கொஞ்சம் நேரம் இருக்கும்.. எப்பவும் போல தூங்க ஆரம்பிச்சிருந்தேன்.. திடீர்னு எண்ணன்னே தூங்கீட்டிங்க அப்படின்னு ஒரு வாய்ஸ்.. லைட்டா முழிச்சுப் பார்த்தா.. டிரைவர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லிக்கிட்டு இருக்கார்.. எப்படி இருந்திருக்கும்.. தூக்கமெல்லாம் காணாமப் போச்சு.. டிரைவருக்கு எப்படியும் 55 வயசுக்கு மேல இருக்கும்.. ரொம்ப டயர்டா இருந்தாராம்.. அதான் கண்ணு சொக்கிடுச்சாம்.. எப்படிப் பாருங்க.. கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்த கண்டக்டரும் தூங்கிட்டார்.. அதுக்கப்புறம் ஊர் வந்து சேர்ற வரைக்கும் நான்தான் அவரோட ஏதாவது பேசிக்கிட்டே வந்துட்டு இருந்தேன்..
டிரைவர் வேலைங்கறது கண்டிப்பாக ரொம்பக் கடுமையான வேலைதான்.. சும்மா எப்பவாவது லாங் டிரைவ் போனாலே நமக்கு வீடு திரும்பறதுக்குள்ள சலிப்பாயிடும்.. பாவம்தான் இவங்க.. ஆனால் இவ்வளவு வயசானவராக இருந்துட்டு 500 கிலோமீட்டருக்கு தொடர்ந்து ஓட்டற மாதிரி லாங் ட்ரிப்பை எல்லாம் எதுக்கு ஏத்துக்கனும்.. கண்டிப்பாக குறைந்த தூரங்கள்ல ஓட்டறதுக்கும் அவங்களால பர்மிசன் வாங்க முடியும்னுதான் நினைக்கிறேன்.. இல்ல அப்படியெல்லாம் இல்லையான்னும் தெரியல..
மற்றொரு முறை.. நானும் ரமேஷும்.. சேலம் பஸ்ல உட்கார்ந்திருந்தோம்.. திடீர்னு ரொம்ப சத்தம் கேட்டு முழிச்சேன்.. ரமேஷ்கிட்ட என்னாச்சுங்க. ஏன் பஸ்ல எல்லாரும் சண்டை போட்டுட்டு இருக்காங்கன்னு கேட்டேன்.. அதுக்கு அவர்.. அது ஒன்னும் இல்லடா.. டிரைவர் தண்ணி போட்டுட்டு தாறுமாறாக ஓட்டிக்கிட்டு இருக்கார்.. கண்டக்டர் சொன்னாலும்.. பயணிகள் சொன்னாலும் கண்ட்ரோல்டாக ஓட்ட மாட்டேங்கறார்.. அதான் சத்தம் அப்படின்னு கூலா சொல்றார்.. நான் அப்போ இருந்து பேந்தப் பேந்த முழிச்சுக்கிட்டு ரோட்டையே பார்த்துட்டு உட்கார்ந்துருந்தேன்.. அவர் கரெக்டாக ஓட்டறாரா இல்லை.. தாறுமாறாக ஓட்டறாரான்னே தெரியல..
எனக்கு முன் சீட்ல உட்கார்ந்திருந்த ஒருத்தர்.. மிலிட்டரி ரிட்டனாம்.. இப்போதான் சர்வீஸ் முடிஞ்சு ஊருக்குப் போறேன்.. என்னைய ஊர் கொண்டு சேத்தமாட்டான் போல இவன்னு சொல்லி... நான் போலீஸுக்கு போன் பண்றேன்னுட்டு அவசர போலீஸுக்கு போன் பண்ணிட்டார்.. அவங்களும் பஸ் எந்த இடத்துல வந்திட்டு இருக்குன்னு கேட்டுக்கிட்டு.. கிருஷ்ணகிரி எண்டர் ஆகிறப்போ பஸ்ஸை மடக்கறோம்னு சொன்னாங்க போல.. பஸ்ஸும் கிரிஷ்ணகிரிகிட்ட வந்துடுச்சு.. திடீர்னு டம்முனு ஒரு சத்தம்.. போச்சுடா இன்னைக்கு காலின்னு நினைச்சு கண்ணை இருக்க மூடினா.. ஒன்னும் ஆகலை.. ஆனால் டிரைவர் ஒரு பைக்காரரை இடிச்சுத் தள்ளிட்டார்.. நல்லவேளை பக்கம் ஒரு வைக்கப்போரு இருந்ததால பைக் அதுமேல போய்தான் சொருகிச்சு.. ஓட்டினவருக்கும் ஒன்னும் இல்ல.. இது ஆகாதுன்னு இறங்கியும் போகமுடியல.. நடுவழியில நிக்கறோம்.. சரின்னுட்டு பயணத்தை தொடர்ந்தோம்.. சொன்னமாதிரி போலீஸ் பஸ்ஸை மடக்கி டிரைவரைத் திட்டினாங்க.. உள்ளே இருக்கற உயிர்கள் எல்லாம் உங்க கையிலதான இருக்கு.. ஏன் தண்ணி போட்டிங்கன்னு கேட்டதுக்கு.. ரொம்ப ஒடம்பு வலிசார் அதான்.. அப்படின்னார் டிரைவர்.. அவருக்கு போலீஸே டீ வாங்கிக் கொடுத்து.. சேலம் போய் சேர்ந்துட்டு போன் பண்ணுங்கன்னு சொல்லி அனுப்பி வைச்சிட்டாங்க.. நாங்க ரெண்டு பேரும்.. பஸ்ல இருந்த நிறையப் பேரும் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டுலயே எஸ்கேப்.. நீ எப்படியோ போய் போன் பண்ணிக்க சாமின்னு திட்டிட்டு இறங்கிட்டோம்..
உடம்பு வலியாக இருந்தால்.. லீவு எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே.. ரொம்ப அசால்டாக உடம்பு வலின்னு சொல்லுது அந்த பக்கி.. இங்கே நமக்குத்தான் பஸ் ஏறி இறங்கறதுக்குள்ள கருக் கருக்குன்னே உட்கார்ந்துக்க வேண்டியிருக்கு..
இந்த இரண்டு இரவுகளுமே.. மறக்க முடியாத பயணங்கள்.. திக் திக்னு தாங்க.. தூங்காமயே போச்சு..
//3 மூன்று பேர் உட்கார்ற மாதிரி ஒரு வரிசையிலயும்.. ரெண்டு பேர் உட்கார்ற மாதிரி ஒரு வரிசையிலும் சீட்கள் அமைச்சிருப்பாங்க.. எந்தப் பக்கம் உட்கார்ந்தாலும் சரி.. கூட உட்கார்றவங்க கொஞ்சம் குண்டா இருந்துட்டாங்கன்னா.. ரொம்ப அசெளரியமாகப் போயிடும்//
ReplyDeleteஆமாமா அந்தக் கொடுமை சொல்லிப் புரியாது !!
//இதுல சிலர் பஸ் ஏர்றதுனாலே தண்ணியடிச்சுட்டுதான் ஏறுவாங்க.. பயங்கரமாக நாறித்தொலைக்கும்.. தலைவலி வந்துடும்.. //
ReplyDeleteபாபு நீங்களா சொல்வது...
நல்ல அனுபவம்..... நான் உன் ரசிகன் ஆகிவிட்டேன்...
உடம்பு வலியோடு இந்த மாதிரி கருக் கருக்ன்னு போறது இன்னும் நம்மை எரிச்சலாக்கும். ஆனா அதையும் நீங்க ரசிச்சு எழுதி இருக்கீங்க!
ReplyDelete///டிரைவருக்கு எப்படியும் 55 வயசுக்கு மேல இருக்கும்.. ரொம்ப டயர்டா இருந்தாராம்.. அதான் கண்ணு சொக்கிடுச்சாம்.. எப்படிப் பாருங்க.. ///
ReplyDeleteபடு பயங்கரமான பயணம் தான்
@ஜீ..
ReplyDeleteவாங்க ஜீ..
Renu said...
ReplyDelete//இதுல சிலர் பஸ் ஏர்றதுனாலே தண்ணியடிச்சுட்டுதான் ஏறுவாங்க.. பயங்கரமாக நாறித்தொலைக்கும்.. தலைவலி வந்துடும்.. //
பாபு நீங்களா சொல்வது...
நல்ல அனுபவம்..... நான் உன் ரசிகன் ஆகிவிட்டேன்... /////
நன்றி ரேணு.. :-)
எம் அப்துல் காதர் said...
ReplyDeleteஉடம்பு வலியோடு இந்த மாதிரி கருக் கருக்ன்னு போறது இன்னும் நம்மை எரிச்சலாக்கும். ஆனா அதையும் நீங்க ரசிச்சு எழுதி இருக்கீங்க! ///
நன்றிங்க..
nis said...
ReplyDelete///டிரைவருக்கு எப்படியும் 55 வயசுக்கு மேல இருக்கும்.. ரொம்ப டயர்டா இருந்தாராம்.. அதான் கண்ணு சொக்கிடுச்சாம்.. எப்படிப் பாருங்க.. ///
படு பயங்கரமான பயணம் தான் /////
வாங்க nis...
உடம்பு வலியாக இருந்தால்.. லீவு எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே.. ரொம்ப அசால்டாக உடம்பு வலின்னு சொல்லுது அந்த பக்கி..
ReplyDelete.....கொஞ்சம் கூட யோசிக்காமல் - பொறுப்பில்லாமல் தந்து இருக்கும் பதில் இது. ஏதோ அன்னைக்கு எல்லோரும் கடவுள் அருளால தப்பிச்சிட்டீங்க..... இன்னும் எத்தனை பேரு, இப்படி ஓட்டிக்கிட்டு இருக்காங்களோ? :-(
என்னங்க பண்றது...
ReplyDeleteநல்லா எழுதி இருக்கீறிங்க.
உங்களுடைய பயண அனுபாவங்கள் சுவாரஸ்யமாக இருந்தது... தினமலருக்கு மெயில் அனுப்பினீர்களா...
ReplyDeleteஉங்களது பயண அனுபவங்களை சுவாரசியமாக பகிர்ந்துள்ளீர்கள் அருமை,
ReplyDeleteதொடருங்கள்......
அரசு பேருந்தில் பயணம் செய்யும் அனைவருக்குமே இதுபோல பல அனுபவங்கள் பாபு! இதை தவிர்க்கமுடியாது! நம் தலைவிதி அது! இதையும் பாருங்கள் http://unmai-sudum.blogspot.com/2010/11/blog-post_18.html
ReplyDeleteஇதே மாதிரி அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்குங்க...
ReplyDeleteநல்ல பகிர்வு.
உயிரை கையில் பிடிசுகிட்டு தான் வந்திருக்கீங்க போல...
ReplyDeleteநல்ல பயணக்கட்டுரை
ReplyDeleteChitra said...
ReplyDeleteஉடம்பு வலியாக இருந்தால்.. லீவு எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே.. ரொம்ப அசால்டாக உடம்பு வலின்னு சொல்லுது அந்த பக்கி..
.....கொஞ்சம் கூட யோசிக்காமல் - பொறுப்பில்லாமல் தந்து இருக்கும் பதில் இது. ஏதோ அன்னைக்கு எல்லோரும் கடவுள் அருளால தப்பிச்சிட்டீங்க..... இன்னும் எத்தனை பேரு, இப்படி ஓட்டிக்கிட்டு இருக்காங்களோ? :-( ////
உண்மைதாங்க சித்ரா.. அன்று பஸ்ஸில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் திக் திக்னுதான் இருந்தது..
பாலகுமார் said...
ReplyDeleteஎன்னங்க பண்றது...
நல்லா எழுதி இருக்கீறிங்க. ////
நன்றிங்க..
philosophy prabhakaran said...
ReplyDeleteஉங்களுடைய பயண அனுபாவங்கள் சுவாரஸ்யமாக இருந்தது... தினமலருக்கு மெயில் அனுப்பினீர்களா... ///
இதோடு மூன்று முறை மெயில் தினமலருக்கு மெயில் அனுப்பிட்டேங்க.. ரிப்ளை ஏதும் இல்ல.. மனசு புலுங்கிக்கிட்டே அடுத்த வேலைக்குப் போயாச்சு..
மாணவன் said...
ReplyDeleteஉங்களது பயண அனுபவங்களை சுவாரசியமாக பகிர்ந்துள்ளீர்கள் அருமை,
தொடருங்கள்...... ////
நன்றிங்க..
வைகை said...
ReplyDeleteஅரசு பேருந்தில் பயணம் செய்யும் அனைவருக்குமே இதுபோல பல அனுபவங்கள் பாபு! இதை தவிர்க்கமுடியாது! நம் தலைவிதி அது! இதையும் பாருங்கள் http://unmai-sudum.blogspot.com/2010/11/blog-post_18.html ///
உண்மைதாங்க.. உங்களுடைய அனுபவக்கட்டுரையையும் படித்தேன்.. சேம் பிளட்.. :-)
அன்பரசன் said...
ReplyDeleteஇதே மாதிரி அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்குங்க...
நல்ல பகிர்வு. ////
நன்றிங்க அன்பரசன்..
வெறும்பய said...
ReplyDeleteஉயிரை கையில் பிடிசுகிட்டு தான் வந்திருக்கீங்க போல... ///
ஆமாங்க ஜெய்ந்த்.. ஒரே திகில் பயணம்தான் அன்னைக்கு..
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteநல்ல பயணக்கட்டுரை ///
நன்றிங்க செந்தில்குமார்..
. கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்த கண்டக்டரும் தூங்கிட்டார்.. அதுக்கப்புறம் ஊர் வந்து சேர்ற வரைக்கும் நான்தான் அவரோட ஏதாவது பேசிக்கிட்டே வந்துட்டு இருந்தேன்.///
ReplyDeleteரொம்ப கஷ்டம்தாங்க.
நெடுதூர பயணமே சலிப்பு தரக்கூடிய ஒரு விசயம்தான். அதுல இப்படி பயந்துட்டே போகணும்னா நம்மளால முடியாதுப்பா.
ReplyDeleteரொம்ப சுவாரஸ்யமாக இருந்துச்சுங்க
ReplyDeleteபஸ் பயணம் ஒரு கஷ்டமான விஷயம்தான்!
ReplyDeleteநல்லா சுவாரசியமா எழுதியிருக்கீங்க!
அருமையான கட்டுரை ...
ReplyDeleteநல்ல சுவராசியமா சொல்லிருக்கிங்க..
உண்மைதான் இது போல் நிறைய நடக்குது நண்பா...
தொடரட்டும் உங்கள் பயணம்...
திட்டி விடுடாங்களா? அட பாவமே, தண்ணி அடிச்சிட்டு 2 வீல் வண்டி ஒட்டினாலே 1000 ரூபா, 6 வீல் க்கு 3000 வாங்கிருக்க வேணாம்?
ReplyDeleteசே.. ஜஸ்ட் மிஸ்சு....
ReplyDeletekarthikkumar said...
ReplyDeleteநெடுதூர பயணமே சலிப்பு தரக்கூடிய ஒரு விசயம்தான். அதுல இப்படி பயந்துட்டே போகணும்னா நம்மளால முடியாதுப்பா. ////
உண்மைதாங்க.. பயங்கர சலிப்பாகத்தான் இருக்கும்.. ஆனால் ஊருக்குப் போகனுமே.. வேற வழியில்ல..
VELU.G said...
ReplyDeleteரொம்ப சுவாரஸ்யமாக இருந்துச்சுங்க ////
நன்றிங்க..
எஸ்.கே said...
ReplyDeleteபஸ் பயணம் ஒரு கஷ்டமான விஷயம்தான்!
நல்லா சுவாரசியமா எழுதியிருக்கீங்க! ////
நன்றிங்க எஸ்.கே..
அரசன் said...
ReplyDeleteஅருமையான கட்டுரை ...
நல்ல சுவராசியமா சொல்லிருக்கிங்க..
உண்மைதான் இது போல் நிறைய நடக்குது நண்பா...
தொடரட்டும் உங்கள் பயணம்... ////
நன்றிங்க அரசன்..
Arun Prasath said...
ReplyDeleteதிட்டி விடுடாங்களா? அட பாவமே, தண்ணி அடிச்சிட்டு 2 வீல் வண்டி ஒட்டினாலே 1000 ரூபா, 6 வீல் க்கு 3000 வாங்கிருக்க வேணாம்? ////
நானும் அப்படித்தாங்க நினைச்சுட்டு இருந்தேன்.. போலீஸ் வந்து நல்லா அந்த ஆளைப் பின்னப்போறாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. பார்த்தால் அவங்களே டீ வாங்கிக்கொடுத்து அட்வைஸ் பண்ணி அனுப்பிட்டாங்க..
மனிதர்கள் உயிர்மேல அவ்வளவு அக்கறை..
அருண் பிரசாத் said...
ReplyDeleteசே.. ஜஸ்ட் மிஸ்சு.... ////
ஆஹா!!.. நான் எஸ்கேப்பு..
தண்ணி மட்டுமா அடிச்சிட்டு வரானுங்க, கூடவே பாக்கும் போட்டுகுராங்க, ஜ்ன்னல் ஓரத்துல நாம உட்கார்ந்திருந்தா போச்சு, எச்ச துப்பரேன்னு நம்மளை நாறடிச்சிருவாங்க, எதுக்கும் பார்த்து போங்க பாஸ், நீங்க போற பஸ்சு டிரைவருங்கதான் இப்படி இருப்பாங்க போல :-)
ReplyDeleteஇரவு வானம் said...
ReplyDeleteதண்ணி மட்டுமா அடிச்சிட்டு வரானுங்க, கூடவே பாக்கும் போட்டுகுராங்க, ஜ்ன்னல் ஓரத்துல நாம உட்கார்ந்திருந்தா போச்சு, எச்ச துப்பரேன்னு நம்மளை நாறடிச்சிருவாங்க, எதுக்கும் பார்த்து போங்க பாஸ், நீங்க போற பஸ்சு டிரைவருங்கதான் இப்படி இருப்பாங்க போல :-) ////
ஒருவேளை அப்படி இருக்குமோ.. நீங்க சொன்னமாதிரி கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்துக்கறேன்..
ஒவ்வொரு முறையும் உயிரை கைய்ல பிடிச்சுட்டு போகணும் போல........
ReplyDeleteஇது போல கசப்பான அனுபவம் எனக்கும் நடந்துருக்கு!!!
இதுக்காக தான் ட்ரைனில் போய்டுரது :)
//ஏன்னா பஸ்ல ஏறி உட்கார்ந்து கண்டக்டர் டிக்கெட் கொடுக்கற வரைக்கும்தான் முழுச்சிருப்பேன்.. அப்புறம் அடுத்து வண்டி எங்கெங்க நிக்குதுதோ அங்கே மட்டும்தான் முழிப்பு வரும்.. //
ReplyDeleteஹி ஹி ஹி ., நானும் அப்படித்தாங்க ..௧!
/மற்றொரு முறை.. நானும் ரமேஷும்.. சேலம் பஸ்ல உட்கார்ந்திருந்தோம்.. திடீர்னு ரொம்ப சத்தம் கேட்டு முழிச்சேன்.. ரமேஷ்கிட்ட என்னாச்சுங்க./
ReplyDeleteஇந்த பிரியமுடன் ரமேசுங்களா ..?
கோமாளி செல்வா said...
ReplyDelete//ஏன்னா பஸ்ல ஏறி உட்கார்ந்து கண்டக்டர் டிக்கெட் கொடுக்கற வரைக்கும்தான் முழுச்சிருப்பேன்.. அப்புறம் அடுத்து வண்டி எங்கெங்க நிக்குதுதோ அங்கே மட்டும்தான் முழிப்பு வரும்.. //
ஹி ஹி ஹி ., நானும் அப்படித்தாங்க ..௧! ////
சூப்பர்..
கோமாளி செல்வா said...
ReplyDelete/மற்றொரு முறை.. நானும் ரமேஷும்.. சேலம் பஸ்ல உட்கார்ந்திருந்தோம்.. திடீர்னு ரொம்ப சத்தம் கேட்டு முழிச்சேன்.. ரமேஷ்கிட்ட என்னாச்சுங்க./
இந்த பிரியமுடன் ரமேசுங்களா ..? ///
ஆமாங்க பிரியமுடன் ரமேஷேதான்..
உங்க பயண அனுபவம் நல்லாத்தான் இருக்கு .,
ReplyDeleteநானும் சில சமயங்களில் அனுபவச்சிறுக்கேன் . அந்த தண்ணியப் போட்டு பஸ்ல வரவங்க தான் ரொம்ப கொடுமை .. பேசினா போதும் ஐயோ என்ன கொடுமை அது ..?!
ஆமினா said...
ReplyDeleteஒவ்வொரு முறையும் உயிரை கைய்ல பிடிச்சுட்டு போகணும் போல........
இது போல கசப்பான அனுபவம் எனக்கும் நடந்துருக்கு!!!
இதுக்காக தான் ட்ரைனில் போய்டுரது :) ////
நல்ல ஐடியாதாங்க.. :-)
payanam romba kadumaiya thaan irundhurukku... aana adhaiyum romba comedya solli irukkenga..
ReplyDeleteமதுரை பாண்டி said...
ReplyDeletepayanam romba kadumaiya thaan irundhurukku... aana adhaiyum romba comedya solli irukkenga.. ////
பாராட்டுக்கு நன்றிங்க..
அரசு பேருந்து பயணம் பரலோக பயணம்
ReplyDeleteTHOPPITHOPPI said...
ReplyDeleteஅரசு பேருந்து பயணம் பரலோக பயணம் /////
வாங்க தொப்பிதொப்பி..
உடம்பு வலியாக இருந்தால்.. லீவு எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே.. ரொம்ப அசால்டாக உடம்பு வலின்னு சொல்லுது அந்த பக்கி.. இங்கே நமக்குத்தான் பஸ் ஏறி இறங்கறதுக்குள்ள கருக் கருக்குன்னே உட்கார்ந்துக்க வேண்டியிருக்கு
ReplyDeleteயப்பா கேக்கவே நடுங்குது
FARHAN said...
ReplyDeleteஉடம்பு வலியாக இருந்தால்.. லீவு எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே.. ரொம்ப அசால்டாக உடம்பு வலின்னு சொல்லுது அந்த பக்கி.. இங்கே நமக்குத்தான் பஸ் ஏறி இறங்கறதுக்குள்ள கருக் கருக்குன்னே உட்கார்ந்துக்க வேண்டியிருக்கு
யப்பா கேக்கவே நடுங்குது ////
எனக்கும் அப்படித்தாங்க இருந்தது..
வருகைக்கு நன்றிங்க..
//உடம்பு வலியாக இருந்தால்.. லீவு எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே.. ரொம்ப அசால்டாக உடம்பு வலின்னு சொல்லுது அந்த பக்கி.. இங்கே நமக்குத்தான் பஸ் ஏறி இறங்கறதுக்குள்ள கருக் கருக்குன்னே உட்கார்ந்துக்க வேண்டியிருக்கு..//
ReplyDeleteசரியா சொல்லி இருக்கீங்க,
டிரைவர் இப்படி சொல்லி இருக்க கூடா எல்லா உயிரும் அவர் கையில் இல்லையா இருக்கு.
Jaleela Kamal said...
ReplyDelete//உடம்பு வலியாக இருந்தால்.. லீவு எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே.. ரொம்ப அசால்டாக உடம்பு வலின்னு சொல்லுது அந்த பக்கி.. இங்கே நமக்குத்தான் பஸ் ஏறி இறங்கறதுக்குள்ள கருக் கருக்குன்னே உட்கார்ந்துக்க வேண்டியிருக்கு..//
சரியா சொல்லி இருக்கீங்க,
டிரைவர் இப்படி சொல்லி இருக்க கூடா எல்லா உயிரும் அவர் கையில் இல்லையா இருக்கு. /////
ஆமாங்க.. நம்ம உயிர் அவங்களுக்கு ரொம்ப லேசா போயிடுச்சு போல.. அதான் இப்படி அக்கறை இல்லாம் நடந்துக்கறாங்க..
அவங்க இதை உணர்ந்து திருந்தனும்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
எங்க ஊர்ப்பக்கம் செல்போன் பேசிக்கிட்டே ஒரு படுபாவி பள்ளிக் குழந்தைகளை ஏரியில தள்ளிட்டான். இவனுக அக்கிரமம் தாங்க முடியல பாபு.
ReplyDeleteசிவகுமாரன் said...
ReplyDeleteஎங்க ஊர்ப்பக்கம் செல்போன் பேசிக்கிட்டே ஒரு படுபாவி பள்ளிக் குழந்தைகளை ஏரியில தள்ளிட்டான். இவனுக அக்கிரமம் தாங்க முடியல பாபு. ////
ம்ம்ம்.. கஷ்டம்தாங்க.. :-(
நகைச்சுவையாக இருந்தாலும் அப்போது உங்கள் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ள முடிகின்றது....
ReplyDeleteடக்கால்டி said...
ReplyDeleteநகைச்சுவையாக இருந்தாலும் அப்போது உங்கள் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ள முடிகின்றது.... ////
ஆமாம் நண்பா.. இங்கே நகைச்சுவையோட எழுதியிருந்தாலும்.. அந்த இரவுகள் மறக்க முடியாதவை.. :-)