.

Thursday, December 9, 2010

THE OTHERS - திரை விமர்சனம்

இரண்டாம் உலகப்போர் காலக் கட்டத்துல இந்தப் படத்தோட கதை ஸ்டார்ட்டாகுது..

கிரேஸ் ஸ்டீவர்ட் (நிக்கோல் கிட்மேன்) இந்தப் படத்தோட கதாநாயகி.. கிரேஸுக்கு அன்னே அப்படின்னு ஒரு பொண்ணும், நிக்கோலஸ் அப்படின்னு ஒரு பையனும் இருக்காங்க.. இவங்க மூன்று பேரும் ஒரு ஒதுக்குப் புறமான பெரிய மாளிகையில வாழ்ந்துட்டு இருக்காங்க.. கிரேஸோட ஹஸ்பண்ட் சார்லஸ் இரண்டாம் உலகப்போருல கலந்துக்கப் போனவர் வீடு திரும்பவே இல்ல..

கிரேஸோட பசங்க இரண்டு பேருக்கும்.. சன்லைட் அலர்ஜி இருக்கு.. அவங்க ரெண்டு பேருக்கும் சூரிய வெளிச்சத்தை தாங்கற சக்தி கிடையாது.. அதனால அந்த பெரிய மாளிகையோட எல்லா அறைகளும் திரைச்சீலைகள் போட்டு மூடப்பட்டு எப்பவுமே இருட்டாவேதான் இருக்கும்..

அந்தப் பெரிய மாளிகையில வேலைக்காரங்களாக இரண்டு வயசான ஆளுங்களும்.. அவங்களோட சேர்ந்து ஒரு பொண்ணும் வர்றாங்க.. கிரேஸ் அவங்களோட வேலைகளை அசைன் பண்றார்..

கிரேஸ் தன்னோட குழந்தைகள்கிட்ட எப்பவுமே கொஞ்சம் கடுமையாகவே நடந்துக்கறாங்க.. அது அவரோட மகள் அன்னேவுக்குப் பிடிக்கல.. சில நிகழ்வுகளுக்குப் பிறகு.. அந்த மாளிகையில தங்களைத் தவிர வேறு யாரோ இருக்கற மாதிரி உணர்றாங்க கிரேஸ்.. ஒருமுறை அங்கே இருக்கற பியானோ ரூம்ல இசை கேக்குது.. உள்ளே போய் பார்த்தா யாருமே இல்ல.. குழம்பி நிக்கற கிரேஸோட முகத்துல அந்த அறையோட கதவு அறைந்து சாத்தப்படுது.. அதனால அவங்க ரொம்பக் குழம்பிப் போறாங்க.. வேலைக்காரங்ககிட்ட மாளிகையில வேற யாராவது இருக்காங்களான்னு தேட சொல்றாங்க..

அந்த வீட்ல விக்டர்னு ஒரு பையனையும்.. அந்தப் பையனோட அம்மா, அப்பா அப்புறம் ஒரு வயசான பாட்டி ஒன்னையும் அடிக்கடி பார்க்கறதா கிரேஸோட மகள் அன்னே சொல்றாங்க.. ஆனால் அதை கிரேஸ் நம்ப மறுக்கறாங்க.. பேய் மேல எல்லாம் தனக்கு நம்பிக்கை இல்லைன்னு சொல்லி அன்னேயை ரொம்பத் திட்டறாங்க..

அந்த மாளிகையில யாரோ ஒழிஞ்சு இருக்காங்கன்னு.. கிரேஸும், வேலைக்காரங்களும் ஒவ்வொரு அறையாத் தேட ஆரம்பிக்கறாங்க.. அந்தத் தேடுதல்ல அவங்களுக்கு ஒரு பழைய ஆல்பம் கிடைக்குது.. அந்த ஆல்பத்துல இருக்கற எல்லாரும் பெட்ல படுத்து தூங்கிட்டு இருக்கமாதிரி ஸ்டில்சா இருக்கு.. அதைப் பார்த்த வேலைக்காரம்மா.. இவங்க எல்லாரும் செத்துப் போனவங்க.. அப்படின்னு சொல்லி கிரேஸுக்கு கிலியை ஏற்படுத்தறாங்க..


இந்த மாதிரியெல்லாம் நடக்கறதால.. சிட்டிக்குப் போய் யாராவது பாதிரியாரைக் கூப்பிட்டு வந்து வீட்டுல என்ன இருக்குன்னு பார்க்க சொல்லலாம்னு காட்டு வழியா நடக்க ஆரம்பிக்கறாங்க கிரேஸ்.. அப்போ காட்டுப்பகுதியில தன்னோட கணவன் நடந்து வர்றதைப் பார்த்து.. அவரைக் கூட்டிட்டு மாளிகைக்குத் திரும்பறாங்க..

கிரேஸோட கணவர் சார்லஸ் அடுத்த நாளே அந்த மாளிகையை விட்டுப் போயிடறார்.. ஏன் போனார்னு ஒன்னும் புரியாம கிரேஸ் ரொம்ப தவிச்சுப் போயிடறாங்க..

ஒருநாள் காலையில கிரேஸுக்குத் தன்னோட பசங்க அலர்ற சத்தம் கேக்குது.. அவங்களோட அறைக்குப் போயி பார்த்தா.. அங்கே இருந்த திரைச்சிலைகள் அகற்றப்பட்டு இருக்கு.. அந்த அறையில மட்டுமில்லாம அந்த மாளிகை முழுவதும் திரைச்சீலைகள் அகற்றப்பட்டு இருக்கு.. தன்னோட பசங்களை ஒரு கட்டிலுக்கு அடியில ஒழிச்சு வைச்சுட்டு.. வேலைக்காரங்களைக் கூப்பிட்டு கன்னாபின்னான்னு கத்தறார்.. வேலைக்காரங்கதான் இந்தக் காரியத்தை செய்திருக்கனும்னு நினைச்சிட்டு அவங்களை வேலையை விட்டு அனுப்பிடறார்..

ஒரு இரவு.. அன்னேவும், நிக்கோலஸும் தன்னோட அப்பாவைத் தேடறேன்னு மாளிகையை விட்டு வெளியே போய் அந்த வேலைக்காரங்களைப் பற்றி ஒரு உண்மையைத் தெரிஞ்சுக்கறாங்க.. அதுக்கப்புறம் அந்த மாளிகையில நடக்கற மர்மமான விசயங்கள் கிரேஸுக்குத் தெரிய வருது..

இந்தப் படத்துல நிக்கோல் கிட்மேனோட ஆக்டிங்.. சான்ஸே இல்ல.. தி அதர்ஸ் பார்த்துட்டு.. நிக்கோல் கிட்மேன் நடிச்ச பெரும்பாலான படங்களை டவுன்லோட் பண்ணிப் பார்த்துட்டேன்.. அவ்வளவு ஃபேன் ஆயிட்டேன் அவருக்கு.. இந்தப் படத்துல நடிச்சதுக்காக நிக்கோல் கிட்மேனுக்கு சிறந்த நடிகைக்கான பல அவார்டுகள் கிடைச்சது..

இந்தமாதிரி ஒரு திரைக்கதையை அமைச்சதுக்கு இயக்குனருக்கு கண்டிப்பாக சல்யூட் அடிச்சே ஆகனும்.. படம் ஆரம்பித்தில இருந்து முடிவு வரை ஒரு பேயையும் காமிக்காமலே நம்மளை பயங்கரமா பயப்படுத்தியிருக்காங்க.. வேலைக்காரங்களா வர்றவங்களோட மர்மமான செய்கைகள் மேலும் கிலியை ஏற்படுத்தியது..

பியானோ இசை கேக்கற சீன்லையும், குழந்தைகள் அலர்ற சத்தம் கேட்டு கிட்மேன் ஓடறப்பவும்.. ஹார்ட்பீட்டை பயங்கரமா அதிகரிக்க வைச்சிருக்காங்க..

கோரமான பேய், அதுஇதுன்னு காட்டாம.. திரைக்கதையோட்டத்துலயும், பின்னணி இசை மூலமாகவும் ரொம்ப பயப்படுத்தியிருக்காங்க.. கதைக்குத் தோதான பிரமாண்டமான மாளிகை.. கிளைமாக்ஸ் சான்ஸே இல்ல.. அடப்பாவிகளான்னு நாம வாயைப் பிளந்து பார்க்கறது உறுதி.. படம் பார்க்கற ஐடியா இருந்தா.. இதோட கிளைமாக்ஸைப் பற்றி தெரிஞ்சுக்காமப் பாருங்க.. கண்டிப்பாக உங்களுக்கு இது ஒரு மிரட்டலான படமாக இருக்கும்..