சிக்கு புக்கு - கொரியன் இரயில்


இந்தப் படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துலயே தெரிஞ்சு போச்சு முழுக்கதையும்..

ஆர்யாவும், ஸ்ரேயாவும்.. லண்டன்ல இருக்காங்க.. ரொம்ப ஸ்டைலிஸான கேரக்டர்ஸ்.. ஆர்யா, ஸ்ரேயாவோட அறிமுகக் காட்சிகளைப் பல படங்கள்ல பார்த்தாச்சு.. ரெண்டு பேரும் சில காரணங்களால இந்தியாவுல அவங்க சொந்த ஊருக்கு வரவேண்டியிருக்கு.. அப்போ ஏதேச்சையா இரண்டு பேரும் சந்திச்சு.. சண்டை போட்டுக்கிட்டு.. இரயில்ல இருந்து இறக்கிவிடப்பட்டு.. அப்புறம் லாரி, பஸ், சைக்கிள்னு அவங்க ஊருக்குப் பயணப்படறாங்க.. அப்போ ரெண்டு பேருக்குள்ள நடக்கற சண்டைகளை கமெடியாகக் காமிக்க முயற்சி பண்ணியிருக்கார் இயக்குனர்..

இந்தப் பயணத்தின் போது ஆர்யா தன்னோட அப்பாவோட டைரியைப் படிக்கறார்.. அந்த பிளாஸ்பேக் காட்சிகள்தான் இடைவேளை வரைக்கும் நமக்கு ஆறுதல்.. பிளாஸ்பேக்குல ஆர்யாவோட அப்பா ஆர்யாவின் காதல் கதை.. ஆர்யா போலீஸாகறதுக்கு எக்ஸாம்ல பாஸ் பண்ணிட்டு ஊருக்கு வர்றார்.. அங்கே பள்ளிக்கூட வாத்தியார் மகளை லவ் பண்றார்.. அவங்களும் ஆர்யாவை லவ் பண்றாங்க.. ஆர்யா வீடு ஊர்லயே பெரிய பணக்காரங்க.. அதனால ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடிப்போறதா முடிவு பண்றாங்க.. ஆனால் ஆர்யா குறிப்பிட்ட நேரத்துக்கு அவங்க வராததால.. தன்னோட போலீஸ் ட்ரைனிங்கைத் தொடர்றதுக்காக கிளம்பிடறார்..

போலீஸ் ட்ரைய்னிங் கேம்ப்ல ஒருத்தர் நண்பர் ஆகறார்.. அவர் தன்னோட அத்தை பொண்ணை லவ் பண்றார்.. ஆர்யாவோட லவ்வர் படிக்கறேன்னு சொல்லிட்டு.. அவரைத் தேடி அங்கே வந்திடறார்.. இதுல இருந்தே ரெண்டு பேரும் லவ் பண்றது ஒரே ஆளைத்தான்னு தெரிஞ்சு போயிடுது.. ஆர்யா விட்டுக் கொடுத்திடறார்.. அவங்க ஸ்டோரி ஓவர்..

பிரசண்ட்ல.. சண்டை போட்டுட்டு இருந்த ஆர்யாவும்.. ஸ்ரேயாவும் நண்பர்கள் ஆயிடறாங்க.. ஒரு வழியா ஊர் வந்து சேர்ந்திடறாங்க.. ஸ்ரேயாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கார் அவரோட அப்பா.. மாப்பிள்ளை வந்து பார்க்கற வரைக்கும் ஸ்ரேயாவுக்கு ஆர்யா மேல இருக்கற காதல் இருக்கறது தெரியல... ஒரு செகண்ட்ல காதல் வந்துடுது.. சேர்ந்திடறாங்க.. படம் முடிஞ்சது..

ஜீவாவோட அசிஸ்டெண்ட் மணிகண்டன் இயக்கிய படம்கறதாலவும்.. ஆர்யா மேல இருக்கற நம்பிக்கையாலும்.. படத்துக்குப் போயாச்சு.. டிராமா ஆர்டிஸ்ட்ஸ் நடிக்கற மாதிரி அவங்க அவங்க டயலாக் வர்ற சமயத்துல மட்டும் நடிச்சுட்டு எல்லாரும் அமைதியா இருந்திடறாங்க.. ஸ்ரேயா ரொம்ப ஓவர் ஆக்டிங்..

இயக்குனர் நடிகர்கள்கிட்ட சரியான நடிப்பை வாங்கத் தவறிட்டார்.. காட்சிகளுக்குத் தேவையான பலத்தைக் கொடுக்கல.. ஏதோ ஒரு காட்சிக்கு அப்புறம் இன்னொரு காட்சி.. அப்புறம் இன்னொன்னு காட்சிகள் நகர்ந்து போகுது.. இடைவேளைக்கு முன்பு படத்தோட மிகப்பெரிய பலமா இருந்த பிளாஸ்பேக் காட்சிகளும் இடைவேளைக்கு அப்புறம் போரடிக்க ஆரம்பிச்சிடுது..

படத்தோட குறைகள்ல.. பெரிய குறை பின்னணி இசைதான்.. முக்கியமான காட்சிகள்ல சப்பையான பின்னணி இசையைப் போட்டு பிரவீன்மணி காட்சிகளோட வேல்யூவை ரொம்பக் குறைச்சிட்டார்.. ஹரிஹரனோட பாடல்கள் எதுவுமே தேறல.. 

ஸ்ரேயாவை விட பிளாஸ்பேக்குல வர்ற கதாநாயகிக்கு நல்ல வெயிட்டான கேரக்டர்.. அவர் முகமும் சரி.. நடிப்பும் சரி படத்துக்கு ஒட்டவே இல்ல.. வேற யாராவது சாந்தமான முகம் இருக்கற பொண்ணைப் போட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்.. தன்னொட நண்பனோட அத்தை பொண்ணுதான் தன்னோட காதலின்னு தெரிஞ்சுக்கிட்டு அவரோட பேசறதைப் பார்க்கறதைத் தவிர்க்கறார் ஆர்யா.. அப்புறம் சில காட்சிகளுக்கு அப்புறம் போய் பார்க்கப் போறார்.. அவர்கிட்ட என்னமோ ரொம்ப நாளாக் கடைக்கு வராத கஸ்டமர்கிட்ட கேக்கறமாதிரி ஏன் என்கிட்ட பேசலன்னு உணர்ச்சியே இல்லாம பேசறாங்க.. அவரோட நடிப்பு முழுக்க அப்படித்தான் இருக்கு.. கூட ஆர்யா இருக்கறதால அவர் வர்ற காட்சிகள் எல்லாமே ஒப்பேறிருது..

சந்தானம் சில காட்சிகள்ல வந்து சிரிக்க வைக்கனும் ட்ரை பண்றார்.. அவர் வர்ற ஒன்னு ரெண்டு காட்சிகள் நல்லாயிருக்கு.. படத்துல அவர் கேரக்டர் ஒட்டவும் இல்ல.. தேவையும் இல்ல.. அவரும் நடிக்கனும் நடிக்க வைச்சிருக்காங்க..

பிளாஸ்பேக் காட்சிகள்ல வர்ற ஆர்யாவோட கதையும் கிளைமாக்ஸ்ல வர்ற திருப்பமும்.. கிளாஸிக்னு ஒரு கொரியன் திரைப்பத்தோட கதை.. முதல் படத்துலயே காப்பி அடிக்கனுமா..

படம் பார்க்கறப்போ உங்களுக்கு ஆர்வம் குறையாம இருக்கனும்ங்கறதுக்காக படத்தோட முக்கியமான விசயத்தை நான் இங்கே சொல்லல.. ஏன் டைரக்டர்கூட அதை ஒரு பெரிய விசயமாகவே சொல்லல.. படம் முடிய நேரமாச்சேன்னு அவசர அவசரமா காட்சிகளை எடுத்தமாதிரி இருக்கு.. டிக்கெட் காசுக்கு ஒர்த் இல்ல படம்.. எந்த எக்ஸ்பெக்டேசனும் இல்லாம போனாலும் முன்னாடியே கிளாஸிக் படத்தைப் பார்க்காம இருந்தாலும் கொஞ்சம் பார்க்கலாம்னு நினைக்கறேன்..

ஏற்கனவே வந்த ஒரு அற்புதமான காதல் படத்தைப் பார்த்து எடுத்தும்.. இந்தப் படத்தை நன்றாக எடுக்காம விட்டுட்டார் இயக்குனர்.. உயிரோட்டமே இல்லாமல்..

கிளாஸிக் = சிக்கு புக்கு கிளாஸிக்50 Responses So Far: