மொபைல் மோசடிகள்புதுசா காஸ்ட்லி மொபைல் வாங்கப்போறீங்களா.. இதைப் படிங்க முதல்ல..

நம்மவர்களுக்கு இப்போ மல்ட்டி மீடியா மொபைல் யூஸ் பண்ற மோகம் முழுவதும் பரவிக்கிடக்கு.. ஒரு லேப்டாப் வாங்கற பணத்துக்கு ஐபோன், ஹெச்.டீ.சி போன்ற மொபைலகள் மார்கெட்ல கிடைக்குது..

இந்த பதிவு எழுதறதுக்காக காஸ்ட்லியஸ்ட் மொபைல் லிஸ்ட் தேடிப்பார்த்தேன்.. ஒரு ஆப்பிள் ஐஃபோன் விலை 100000 ரூபாய், ஒரு ஹெச்.டீ.சி மாடல் 1,20,000ரூபாய் (அப்புறம் வைரத்துல செய்தது, தங்கத்துல செய்ததுன்னு நிறைய மொபைல்ஸ் 25,00,000, 1,00,00,000 அப்படின்னு எல்லாம் இருந்தது).. இவ்வளவு காஸ்ட்லி மொபைல் வாங்கி என்ன பண்றதுன்னு தெரியல.. ஆனாலும் நம்ம மக்களுக்கு மல்டி மீடியா மொபைல்ஸ் வைச்சிருக்கறது ஒரு கெளரவப் பிரச்சினையாகவே நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க.. ஊர்ல நிறையப் பேர் 20000, 25000 ரூபாயிக்கு மொபைல்ஸ் வாங்கி வைச்சிருக்காங்க.. அவங்களுக்கு அதுல கால் பண்றது தவிர வேற எதுவுமே தெரியல.. அடப்பாவிகளான்னு இருக்கும்.. கேட்டால்.. இந்த மாதிரி மொபைல்ஸ் வைச்சிக்கிட்டாத்தான் கெளரவம்னு சொல்றாங்க..

அப்புறம் காலேஜ் போற பசங்க அதிகமாக மல்டி மீடியா மொபைல்ஸ் யூஸ் பண்றாங்க.. இங்கே மேட்டர்.. இவ்வளவு விலையில் மொபைல் எதுக்கு வாங்கறாங்கன்னு இல்ல.. இந்தமாதிரி மொபைல்ஸ் வாங்கினதுக்கு அப்புறம் எப்படிப் பாதுக்காக்கறாங்க அப்படிங்கறதுதான்..

நோக்கியாவுல 1100, 1110 மாதிரி மொபைல்ஸ் எல்லாம் 2000 ஆம் ஆண்டுவாக்குல ரொம்ப பிரபலமாக இருந்தது.. ரஃப் யூஸுக்கு ஏத்த மொபைல்.. தூக்கி எறிந்து விளையாடலாம்.. எல்லாம் அவ்வளவு உறுதியாக இருந்துச்சு.. நான் உபயோகப்படுத்திட்டு இருந்த ஒரு 1100 மொபைல்.. ஒருமுறை கை தவறி ரெண்டாவது மாடியில் இருந்து விழுந்தது.. அப்போ விழுந்திடுச்சேன்னு ஒரு பதட்டமும் இல்ல.. பேட்டரியும் பேனலும் தனித்தனியே கிடந்துச்சு.. எல்லாத்தையும் சேர்த்ததுக்கு அப்புறம் கும்முன்னு ஒர்க் ஆயிடுச்சு.. அவ்ளோதான்..

இப்போ நிறைய மல்டி மீடியா மொபைல்ஸ்.. நமக்கு தகுந்த விலைகள்ல இருந்து.. ரொம்பக் காஸ்ட்லியாகவும் கிடைக்குது.. ஹேண்டி, சிலிக்கி, பெரிய சைஸ்னு எல்லா மாதிரியும் கிடைக்குது.. எல்லா மொபைல்களிலுமே.. பிச்சர் கிளாரிட்டிக்காக எல்.சி.டி. ஸ்கிரீன் போட்டுத்தான் வருது.. ஏதாவது சிறிய பிரசர்.. மொபைல் மேல விழுந்தாலும் ரொம்பக் கேர்புல்லாகப் பார்த்துக்க வேண்டியிருக்கு.. தப்பித்தவறி டிஸ்ப்ளே உடைந்ததுன்னா.. அவ்ளோதான்.. 2000, 3000 ரூபாயிக்கு வேட்டுதான்.. சில மொபைல்களோட ஒரிஜினல் விலையே அவ்ளோதான் இருக்கும்.. அதனால ரொம்பக் கேர்புல்லாகப் பார்த்துக்க வேண்டியிருக்கு..

இந்த மல்டிமீடியா மொபைல்கள்ல வாங்கக்கூடாத ஒரு மாடல் ஃபிளிப் டைப்.. அதாவது ஸ்கீரினை உந்தி பிரஸ் பண்ணினா.. அது மேலே போய்.. மொபைல் கீபோர்டு இருக்கறதைக் காட்டும்.. ஏதாவது கால் வந்தால் அப்படியே அட்டெண் பண்ணலாம்.. அப்படி மாடல்.. இந்த மொபைல்ல ஏதாவது சின்ன ஸ்டார்ட் அப் பிரச்சினை ஏற்பட்டால் கூட.. மொபைலை அப்படியே மறந்திட வேண்டியதுதான்.. ஏன்னா அந்த மாதிரி மாடல்கள்ல சர்வீஸ் பார்க்கறதுக்காக கழட்டும்போது ஸ்க்ரீன் இருக்கற பார்ட்டைக் கலட்டனும்னா.. அப்படியே ஒரு ஸ்க்ரூ டிரைவர் வைச்சி நெம்பிதான் எடுப்பாங்க.. கண்டிப்பாக வளைஞ்சுபோயிடும்.. திரும்பவும் பிக்ஸ் பண்றப்போ பினிஷிங் வராது.. அதனால மொபைலை சர்வீஸ் குடுக்கும் போதே.. சார் ஆபரேசன் சக்ஸஸ் ஆயிடும்.. ஆனால் பேசண்ட் செத்துடுவாங்க.. உங்களுக்கு ஓகேன்னா.. எடுத்துக்கறோம்னு சொல்வாங்க.. அடப்பாவிங்களா!! இந்த விசயங்களை மொபைல் வாங்கறப்போ ஏண்டா சொல்லலைன்னு கேட்டால் பதில் இருக்காது.. அதனால நண்பர்களே!!.. ஃபிளிப் மாடல்ல ஆசை வைச்சிருக்கறவங்க கொஞ்சம் உஷார்..

சரி இப்போ நாம மொபைல் பாதுகாப்பு பிரச்சினைக்கு வருவோம்.. 10000 ரூபாயிக்கு மேல வாங்கற மொபைல்களுக்கு எல்லாம் இப்போ.. இன்ஸூரன்ஸ் கவர் பண்றாங்க.. மொபைல்ல ஏதாவது பிரச்சினைனா.. சரி பண்ணிட்டு இந்த இன்ஸூரன்ஸ் கிளைம் பண்ணிக்க முடியும் (அப்படின்னு சொல்வாங்க..:-) ).. அப்போ கேரண்டி வாரண்டி எல்லாம் தர்றாங்களே.. அதெல்லாம் எதுக்குன்னு இப்போ கேக்காதீங்க.. :-)

என் நண்பன் ஒருவன்.. தனக்கு மொபைல் வாங்கறதுக்கு என்னையும் கூப்பிட்டிருந்தான்.. போய் நிறைய மாடல்ஸ் பார்த்தோம்.. அவனுக்கு ஃபிளிப் டைப்னா ரொம்ம்ம்பப் பிடிக்குமாம் (:-D).. நிறைய ஃபிளிப் டைப் மாடல்ஸ் பார்த்தான்.. அவன் வாங்கியது சோனி எரிக்சன்ல ஒரு ஃபிளிப் மாடல்.. அப்போ அந்த மொபைலின் விலை 14000ரூபாய்.. 10000ரூபாயிக்கு மேலே மொபைல்ஸ் வாங்கினால்.. இன்ஸூரன்ஸ் கவரேஜ் இருக்கு சார்.. அதுக்கு நீங்க எக்ஸ்ட்ரா 1000ரூபாய் பே பண்ணினால் போதும்.. லைஃப் டைம் கவரேஜ் சார்.. அப்படின்னு கடைக்காரன் சொல்ல.. இதுவும் நல்லாயிருக்கேன்னு நண்பனும் போட்டுட்டான்..

இப்போ கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவனுடைய மொபைல் கீழே விழுந்து மொபைல் டிஸ்ப்ளே போயிடுச்சு.. செலவு 3200ரூபாய்.. நான் மேலே சொன்னமாதிரி.. இந்த டைப் மொபைலை ஓப்பன் பண்ணினா.. மொபைல் ஹேங் ஆகற பிரச்சனை வந்தாலும் வரும்.. பினிஷிங் சரியாக வராதுங்க.. ஓகேன்னா பண்ணிடலாம்னு சொன்னாங்க.. வேற வழி.. சரின்னு ஒத்துக்கிட்டாச்சு.. மொபைல் ரெடியாகி வந்தாச்சு.. சரி இப்போ இன்ஸூரன்ஸ் கிளைம் பண்ணிக்கலாம்னு.. அந்த பில்லை அட்டாச் பண்ணி அனுப்பினால்.. மொபைல் டிஸ்ப்ளே இதுல நாங்க கவர் பண்ணலை.. உங்களுக்கு பணம் கிடைக்காதுன்னு சொல்லி.. திரும்ப எல்லா டாக்குமெண்ட்ஸையும் அனுப்பி வைச்சுட்டாங்க.. அப்புறம் என்னத்துக்கு அந்த இன்ஸூரன்ஸ் கவரேஜ்ஜுன்னு தெரியல.. மொபைலும் கடைக்காரன் சொன்னமாதிரி ஹேங் ஆகற பிரச்சினை வர ஆரம்பிச்சுடுச்சு..

காஸ்ட்லி மொபைல்ஸ் வாங்கும்போது.. இன்ஸூரன்ஸ் போடற ஐடியா இருந்தால் கொஞ்சம் யோசிச்சுக்கங்க.. கண்டிப்பாக பணம் வேஸ்டுதான்..


60 Responses So Far: