.

Wednesday, September 15, 2010

மேஜிக் ஷோ - பாகம் 1

சின்ன பசங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் வயசு வித்தியாசம் இல்லாம.. ரசிக்கர சில விசயங்கள்ல மேஜிக்கும் ஒன்னு.. எனக்கும் மேஜிக் ரொம்பப் பிடிக்குங்க.. எங்க வீட்டிலேயே ஒரு மெஜிசியன் இருக்கார்.. எங்க மாமா..

எப்ப ஷோ பண்றதா இருந்தாலும் அதுக்கு முந்தின நாள் எங்க வீட்டிலதான் ட்ரையல் நடக்கும்.. எங்க எல்லாத்தையும் உக்கார வைச்சு அடுத்த நாள் பண்ணப்போற மேஜிக்கை எல்லாம் செய்து காட்டுவார்.. வீட்டில எல்லாரும் அசந்து போய் பார்த்துட்டு இருப்போம்.. அவர் பண்ற மேஜிக்குகளோட ட்ரிக்குகளைத் தெரிஞ்சுக்கறதுக்கு எல்லாரும் ரொம்ப முயற்சி பண்ணுவோம்.. ஆனா தலைகீழா நின்னாலும் சொல்லமாட்டார்.. தொழில் தர்மம் அப்படிம்பார்..

நான் காலேஜ் போயிட்டிருந்தப்போ.. மேஜிக் பண்ணினா அங்கே பாப்புலர் ஆயிடலாம்னு எங்க மாமாகிட்ட கெஞ்சிக் கூத்தாடி.. அவருக்கு அசிஸ்டெண்டா சேர்ந்துட்டேன்.. அவர் அளவுக்கு பண்ணமாட்டேன்னாலும் கொஞ்சம் நல்லா பண்ணுவேன்.. எப்பவுமே ஒரு மெஜிசியனுக்கு மேஜிக்குகள் 50% இருந்தா.. பேச்சுத்திறமை 50% இருக்கனும்.. பார்வையாளர்களை பேச்சினாலாயும் பார்வையாளையும்.. தான் சொல்றதை நம்ப வைக்கனும்.. என்ன சொன்னாலும் செய்ய வைக்கனும்..

மேஜிக் ஆர்வத்துல நிறைய டிவி மேஜிக் ஷோக்களையும் விரும்பிப் பார்ப்பேன்.. அதுல டேவிட் கூப்பர்ஃபீல்டு அப்படிங்கறவர் மேஜிக் எல்லாம் ரொம்ப அசத்துங்க.. அவரோட மேஜிக்ல என்னை இம்ப்ரஸ் பண்ணின ஒன்னை உங்களுக்கு காமிக்க விரும்பறேன்..

என்னங்க நீங்களும் அசந்துட்டீங்களா.. ஆக்சுவலா இது மைன்ட் டிரிக் மேஜிக்.. நல்லா யோசிச்சா கண்டுபிடிச்சிடலாம்..

பெரும்பாலும் எல்லாரும் என்ன ட்ரிக்குனு கண்டுபிடிச்சுடுவீங்க.. ஆனாலும் புதுசா படிக்கறவங்களுக்கு சுவாரசியம் வேணும்கறதால உங்க கமெண்ட்சை கடைசில பப்ளிஷ் பண்றேங்க..

இந்த மாதிரி என்னை அசத்தின மேஜிக்குகளை தொடர்ந்து உங்களோட பகிர்ந்துக்கறேன்..


11 comments:

 1. ஹா ஹா ஹா, அந்த ஆறு கார்டுமே கீழே இல்லை!

  ReplyDelete
 2. The cards are of same color and value but of not the same design in the second set..... One remembers only the design and color and value of the selected card. Not of others. So, when that particular card is looked for - it will be obviously missing. :-)

  ReplyDelete
 3. i think u just replaced the symbols, not the cards.

  ReplyDelete
 4. எனக்கு கூட இந்த மாதிரி மேஜிக் ரொம்ப பிடிக்கும். 2-3 கார்ட் மேஜிக் தெரியும்.

  நீங்க சொன்ன ட்ரிக்கோட ஆன்லைன் வெர்சன் பாருங்க

  http://www.creationtips.com/cards1.html

  http://www.gamesforthebrain.com/game/mindreader/

  இது எப்படினு தெர்யும் இருந்தாலும் நீங்களே சொல்லுங்க! :-)

  ReplyDelete
 5. http://picasaweb.google.co.in/lh/photo/ol-t5JFMU8bw-8CwBXy7jU9XtFJAZ2kDMGUg0dJzd5o?feat=directlink

  ReplyDelete
 6. பகிர்வுக்கு நன்றி நண்பா... தொடர்ந்து இது போன்று எழுதுங்கள்....

  ReplyDelete
 7. @அருண் பிரசாத்..
  ///ஹா ஹா ஹா, அந்த ஆறு கார்டுமே கீழே இல்லை!///

  கரெக்டா சொல்லீட்டீங்க.. வருகைக்கு நன்றிங்க..

  @சித்ரா..
  அருமையான விளக்கம் கொடுத்தீங்க சித்ரா.. வருகைக்கு நன்றி..

  @அன்பரசன்..
  உங்க கெஸ் நல்லா இருக்குங்க.. வருகைக்கு நன்றி..

  @எஸ்.கே..
  ///எனக்கு கூட இந்த மாதிரி மேஜிக் ரொம்ப பிடிக்கும். 2-3 கார்ட் மேஜிக் தெரியும்///

  ரொம்ப நல்லதுங்க.. கார்டு மேஜிக் ரொம்ப இன்ட்ரஸ்டாகவும்.. எளிமையாவும் இருக்கும்.. உங்க லிங்குக்கும் நன்றி..

  @வெறும்பய..
  கண்டிப்பா எழுதறேன் நண்பா.. உங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..

  ReplyDelete
 8. ரொம்ப முன்னாடி பார்த்த மாஜிக்! இருந்தாலும் சாதாரணமா பாத்தா கண்டுபிடிக்க முடியாது... முதல் ஸ்க்ரீன்ல உள்ள கார்ட் எதுவுமே இரண்டாவது ஸ்க்ரீன்ல இல்லை.. ;-)

  ReplyDelete
 9. முதலில் பார்த்தவுடன் நானே அசந்துட்டேன். நண்பர் அருண்பிரசாத் சொன்னத பார்த்ததும் தான் கண்டுபிடித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது நண்பா தொடருங்கள்.

  ReplyDelete
 10. மேஜிக் பார்க்க புடிக்கும்

  ReplyDelete
 11. நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

  ReplyDelete