.

Sunday, November 7, 2010

கலக்கல் தீபாவளி!!

எப்படி இருக்கீங்க நண்பர்களே.. ஒருவழியா தீபாவளி லீவு முடிஞ்சது.. ஐந்து, ஆறு வருசத்துக்கு அப்புறம் இப்போதான் தீபாவளிக்கு வீட்டுக்குப் போனேன்.. ரமலானும், தீபாவளியும் இத்தனை வருசமா ரொம்ப கிட்டக்கிட்ட வந்துக்கிட்டே இருந்ததால.. நோன்புக்குப் போயிட்டு திரும்பவும் தீபாவளிக்குப் போகமுடியாம இருந்தது.. ஆனா இந்த வருசம் வாய்ப்புக் கிடைச்சது.. ஓடிப்போயிட்டு வந்துட்டேன் இப்போ..

ம்ஹும்.. இன்னைக்கும் ஊர்ல இருந்திருக்க வேண்டியது.. தீபாவளிக்கு 10 நாளைக்கு முன்னயே எங்க ஊர்ல இருந்தும் பக்கத்து ஊர்கள்ல இருந்தும் ஒரு பெங்களூர் பஸ்ல கூட டிக்கெட் இல்ல.. பரவாயில்லைன்னு இன்னைக்கு நைட் கிளம்பினா மக்கள் ஜூஸ் பிழிஞ்சிடுவாங்க ஊர் வந்து சேர்றதுக்குள்ள.. அதான் நேத்து நைட்டே கிளம்பி (சனிக்கிழமை) வந்துட்டேன்.. :-((

எங்க வீட்டுக் குட்டீஸ்களோட சேர்ந்துக்கிட்டு நிறைய வெடி வெடிச்சேன்.. தெருவுல நடந்துபோற வயசானவங்ககிட்ட எல்லாரும் திட்டு வாங்கினோம்.. சாம்பிள் ("கொள்ளைல்ல போயிருவானுக.. காலுக்கிட்டயே வெடிக்குதுக..) :-)))..

பசங்க வெடிக்கறதை கன்ட்ரோல் பண்ணச்சொல்லி தெருவுல நடந்து போயிட்டு இருந்தவங்க எங்கிட்ட வந்து கம்ப்ளைண் பண்ணிட்டு இருந்தாங்க.. அவங்க முன்னாடி பசங்களை அதட்டிட்டு அப்புறம் திரும்பவும் ஸ்டார்ட் பண்ணினோம்.. எப்பவும் போல இந்தமுறையும் கரண்ட் கம்பி மேல ஒரு ராக்கெட் போய் செருகிடுச்சு.. அதுக்கும் பெரியவங்ககிட்ட திட்டு வாங்கினோம்..

தீபாவளி அன்னைக்கு முந்தின நைட்.. வெடி வெடிக்கப்போற குஷியில செருப்புக்கூட போடாம களத்துல இறங்கினேன்.. 300 வாலா ஒன்னு வைச்சிட்டு அப்படியே பின்னாடி நகர்ந்தேன்.. எங்க வீட்டுக் குட்டீஸு ஒன்னு கொளுத்திப் போட்டிருந்த கம்பி மத்தாப்பு மேல காலை வச்சி செம சூடு.. எல்லாரும் ரொம்ப சந்தோசமா வெடிச்சிட்டு இருந்ததால சைலண்டா வீட்டுக்குள்ள போயி பர்னால் ஆயில்மெண்ட்டை எடுத்து வைச்சிக்கிட்டு டீவியைப் பார்க்கறேன்.. தீபாவளிக்கு வெடி வெடிக்கறதைப் பத்தி எச்சரிக்கை விளம்பரம் ஓடிட்டு இருந்தது.. ஒருத்தர் கால்ல செருப்பு போடாம புஸ்வானம் வைக்கப்போறார்.. அவர்கிட்ட திரிஷா வந்து நில்லுங்க கால்ல செருப்பு போட்டுட்டு வெடிங்க அப்படின்னு ஐடியா குடுத்துட்டுப் போறார்.. ம்ஹும்.. எனக்கும் வந்து சொல்லியிருந்துருக்கலாம்..

தெருவுல ஒரு சின்னப்பொண்ணோட புது டிரஸ்ல ஒரு தீப்பொறி பட்டு ஓட்டை ஆயிடுச்சு.. அந்தப் பொண்ணுக்கு எதுவும் இல்லை.. டிரஸ் வேஸ்ட்டாயிடுச்சு.. பாவம் அழுதுட்டே இருந்தது.. மத்தபடி இந்த வருச தீபாவளி சூப்பர்..

ஊருக்குப் போற அவசரத்துல உங்களுக்கெல்லாம் சொல்ல முடியாததால.. கொஞ்சம் லேட்டா சொல்றேன்.. நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. :-))))


15 comments:

  1. அனுபவம் நல்லாருக்கு!
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இப்ப கால் பரவாயில்லையா ?? கவனமாக இருக்க வேண்டும்

    ReplyDelete
  3. நல்ல அனுபவம் நல்லா இருக்கு

    தெருவுல ஒரு சின்னப்பொண்ணோட புது டிரஸ்ல ஒரு தீப்பொறி பட்டு ஓட்டை ஆயிடுச்சு..////

    நானும் அப்படி தான் அழுது இருக்கேன்...!

    ReplyDelete
  4. வாழ்த்துகளுக்கு நன்றி பாபு... திரிஷா காசு குடுக்கிரவங்களுக்கு மட்டும்தான் அப்படி அக்கறையா சொல்லும்... சொக்கா!!! நமக்கில்லை நமக்கில்லை!!!

    ReplyDelete
  5. ////அவர்கிட்ட திரிஷா வந்து நில்லுங்க கால்ல செருப்பு போட்டுட்டு வெடிங்க அப்படின்னு ஐடியா குடுத்துட்டுப் போறார்.. ம்ஹும்.. எனக்கும் வந்து சொல்லியிருந்துருக்கலாம்../////

    திரிஷா வந்து சொல்லும்னா கால்ல அணுகுண்டு திரியக் கட்டிக்கிட்டுகூட பத்த வெக்கலாம் மக்கா.....!

    ReplyDelete
  6. ஏன் அசின் சொன்னா ஆகாதுங்களா...?

    ReplyDelete
  7. படம் சூப்பர் எங்கிருந்து எடுத்தீங்க...

    ReplyDelete
  8. எஸ்.கே..
    நன்றிங்க..

    ReplyDelete
  9. @எல்.கே..
    ///இப்ப கால் பரவாயில்லையா ?? கவனமாக இருக்க வேண்டும் ///

    இப்போ பரவாயில்லைங்க.. நன்றி..

    ReplyDelete
  10. @செளந்தர்..
    நன்றிங்க..

    ReplyDelete
  11. @சிவா..
    ///திரிஷா காசு குடுக்கிரவங்களுக்கு மட்டும்தான் அப்படி அக்கறையா சொல்லும்... சொக்கா!!! நமக்கில்லை நமக்கில்லை!!! ///

    ஆமாம் சிவா.. கரெக்டுதான்.. வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  12. @அன்பரசன்..
    நன்றிங்க..

    ReplyDelete
  13. @பன்னிக்குட்டி ராம்சாமி..
    ///திரிஷா வந்து சொல்லும்னா கால்ல அணுகுண்டு திரியக் கட்டிக்கிட்டுகூட பத்த வெக்கலாம் மக்கா.....! ///

    ஆஹா!! சூடு வாங்கனதே தாங்க முடியல.. நான் வரல இந்த ஆட்டைக்கு.. :-))

    ReplyDelete
  14. @philosophy prabhakaran..
    ///படம் சூப்பர் எங்கிருந்து எடுத்தீங்க...///

    கூகுள்லதான்.. :-)) வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete