.

Monday, November 8, 2010

PAN'S LABYRINTH - திரை விமர்சனம்

Pan's Labyrinth - 2006 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் மொழித் திரைப்படம்..

ரொம்ப காலத்துக்கு முன்பு பாதாள உலகத்தோட இளவரசி மொனானா.. பாதாள உலகத்துக்கு மேல இருக்கற பூமியில என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டு அங்க இருந்து எஸ்கேப்பாயி பூமிக்கு வர்றாங்க.. அப்போ சூரியனைப் பார்த்து அவங்க கண்ணு குருடாயிடுது.. அப்படியே அவங்களோட நினைவுகள் எல்லாம் அழிஞ்சு போயி இறந்து போயிடறாங்க..

1944 ஆம் ஆண்டு ஸ்பெயின் உள்நாட்டுப் போர் முடிஞ்ச சமயத்துல இருந்து படத்தை ஆரம்பிக்கறாங்க.. ஒஃபிலியான்னு ஒரு சின்னப்பொண்ணும், அவரோட கர்பிணி அம்மாவும்.. அவங்க அம்மாவோட புது வீட்டுக்காரர் கேப்டன் விடல்கூட சேர்ந்து இருக்கறதுக்காக போயிட்டிருக்காங்க..

கேப்டன் விடல் ஒரு மலைப்பிரதேசத்துல தங்கி.. அவங்க ஆட்சிக்கெதிரா போராடிட்டு இருக்கற கொரில்லா படைகளைக் கண்டுபிடிச்சு கொன்னுட்டிருக்கார்.. ஒருமுறை ஒரு விவசாயியும், அவரோட மகனையும் சந்தேகப்பட்டு கொலை பண்றதுல இருந்து அவர் ரொம்பக் கொடுமைக்காரர்னு தெரிஞ்சிடுது..

ஒஃபிலியாவும் அவரோட அம்மாவும் அந்த மலைப்பிரதேசத்திற்கு வர்றாங்க.. அங்கே ஒரு லேபிரின்த்(ரவுண்டு ரவுண்டா ஒரு பாதையில உள்ள போய் வெளிய வர்ற மாதிரி ஒரு அமைப்பு) இருக்கறதைப் பார்க்கறாங்க ஒஃபிலியா.. அன்னைக்கு நைட் அந்த லேபிரின்த்துக்கு உள்ள இருக்கற ஒரு கிணத்துக்குள்ள வித்தியாசமான உருவமைப்பு உள்ள ஒருத்தரை சந்திக்கறார்.. அவர் என்னை எல்லாரும் "ஃபான்"னு சொல்லிக்குவாங்கன்னு ஒஃபிலியாகிட்ட அறிமுகமாகிக்கறார்..

இளவரசி மொனானாதான் இப்போ ஒஃபிலியாவா பிறந்திருக்கார்ங்கற உண்மையை ஃபான் தெரியப்படுத்தறார்.. பாதாள உலகத்திற்கு திரும்பனும்னா மூன்று கஷ்டமான வேலைகளை ஒஃபிலியா முடிக்கனும்னு சொல்றார் அவர்..

முதல் வேலை என்னன்னா.. அங்கே இருக்கற காட்டுக்குள்ள ஒரு பெரிய மரம் இருக்கு.. அதோட வேர்கள்ல இருக்கற பூச்சிகளைத் தின்னு ஒரு பெரிய தவளை வாழ்ந்திட்டிருக்கு.. அதோட வயித்துக்குள்ள இருக்கற ஒரு சாவியைக் எடுத்து வரனும்.. இதான் வேலை.. ஒஃபிலியா அந்த வேலையை திறமையா முடிச்சிடறாங்க..

ஒஃபிலியாவோட கர்பிணி அம்மாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியாமப் போயிடுது.. அம்மா, குழந்தை ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தரைத்தான் காப்பாத்த முடியும்னு டாக்டர் சொல்லிடறார்.. அவர் குணமாகறதுக்கு ஃபான் உதவி செய்யுது..

கேப்டன் விடல்கிட்ட வேலைப் பார்த்திட்டிருக்க மெர்சிடஸ்ங்கற ஒரு பொண்ணு.. அங்கே இருக்கற கொரில்லா படைக்கு மறைமுகமா உதவி செய்திட்டிருக்காங்க.. கொரில்லா படைகூட நடக்கற ஒரு சண்டையில ஒருத்தர் மட்டும் மாட்டிக்கறார்.. விடல் பண்ற கொடுமைல இருந்து மாட்டிக்கிட்டவரைத் தப்பிக்க வைக்க அவரைக் கொல்றார் அங்கே இருக்கற டாக்டர்.. டாக்டரை சந்தேகப்பட்டு விடல் போட்டுத் தள்ளிடறார்..

ஒஃபிலியா செய்ய வேண்டிய இரண்டாவது வேலையைப் பத்தி ஃபான் சொல்லுது.. ஒரு இடத்துக்குப் போயி.. தவளை வயித்துல இருந்து எடுத்த சாவியை வைச்சி அங்கே இருக்கற ஒரு கத்தியை எடுத்துட்டு வரணும்.. அதான் வேலை.. ஆனா அந்த வேலையை செய்றப்போ அங்கே இருக்கற எதையும் சாப்பிடறக்கூடாதுன்னு ஃபான் எச்சரிக்கை செய்யுது.. ஒஃபிலியா அங்கே வேலையை சரியா முடிச்சிட்டாலும்.. ஆசையில அங்கே இருக்கற ஒரு பழத்தை சாப்பிடறாங்க.. அதனால பெரிய ஆபத்துல மாட்டிக்கறாங்க..

மெர்சிடஸ்தான் கொரில்லா படைக்கு மறைமுகமா உதவறாங்கன்னு கேப்டன் விடல் கண்டுபிடிச்சிடறார்..

அதுக்கப்புறம் ஃபானோட எச்சரிக்கையை கேக்காத ஒஃபிலியாவோட நிலைமை என்ன?.. அவங்க ஃபான் சொன்ன மூன்று வேலைகளையும் செய்து பாதாள உலகத்துக்கு திரும்பினாங்களா?..

ஒஃபிலியாவோட கர்பிணி அம்மாவோட நிலை என்ன?.. மெர்சிடஸ் எப்படித் தப்பிக்கறார்?.. கொரில்லா படைகள் என்ன பண்ணினாங்க?.. கொடுமைக்கார கேப்டன் விடல் என்ன ஆனார்?.. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதிலை சுவாரசியாமான திரைக்கதை மூலமா சொல்லியிருக்காங்க..

படத்தோட பெஸ்ட் பார்ட் எடிட்டிங்தான்.. ரொம்ப அருமையா பண்ணியிருக்காங்க.. கற்பனைக் கதைகள் எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாது.. ஆனால் ரொம்ப திரில்லிங்கா எல்லாரும் பார்க்கும்படி திரைக்கதையை அமைச்சிருக்காங்க.. திரைக்கதைக்கு ஏத்தமாதிரி பின்னணி இசையும் நல்லாயிருந்தது..

ஹீரோயினா வர்ற சின்னப்பொண்ணு ஒஃபிலியா அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்காங்க.. நல்ல விறுவிறுப்பான திரைப்படம்..


25 comments:

 1. படம் நல்ல thrilling ஆ இருக்கும் போல இருக்கே. பார்க்கத்தான் வேணும்

  ReplyDelete
 2. @nis..

  ///டம் நல்ல thrilling ஆ இருக்கும் போல இருக்கே. பார்க்கத்தான் வேணும்///
  கண்டிப்பாகப் பாருங்க.. நல்ல விறுவிறுப்பான படம்..

  ///nice template.///
  நன்றிங்க..

  ReplyDelete
 3. கண்டிப்பா பார்க்கணும்.. அருமையா எழுதி இருக்கீங்க

  ReplyDelete
 4. @கவிதைக் காதலன்..
  நன்றிங்க..

  ReplyDelete
 5. நல்ல விமர்சனம். நானும் பார்க்க முயற்சிக்கறேன்.

  ReplyDelete
 6. @அன்பரசன்..
  வருகைக்கு நன்றி..

  ReplyDelete
 7. பாஸ் படத்தோட டவுண்லோட் லிங்க் இருந்தா குடுங்க..பாத்ருவோம்..

  ReplyDelete
 8. @ஹரிஸ்..
  Kickasstorrents.com இந்த முகவரிக்குப் போய் படத்தோட பேரை சர்ச் பண்ணுங்க பாஸ்.. உங்களுக்கு டொரண்ட் கிடைக்கும்..

  ReplyDelete
 9. Scary movie....

  Nice review. :-)

  ReplyDelete
 10. @சித்ரா..
  வருகைக்கு நன்றிங்க..

  ReplyDelete
 11. சட்டை ரொம்ப நல்லா இருக்கு... அடிக்கடி மாத்திகிட்டே இருப்பீங்களோ... நான் டெம்ப்ளேட்டை சொன்னேன்...

  ReplyDelete
 12. @philosophy prabhakaran..
  ஆமாங்க பிரபாகரன்.. நமக்கு ஒரே சட்டையை ரொம்ப நாள் போட்டுக்கற பழக்கமில்லை.. பாராட்டுக்கு நன்றிங்க.. :-)))

  ReplyDelete
 13. இந்த மாதிரி திரில்லர்+கற்பனை கதைகள் மிக நன்றாக இருக்கும். பார்க்க முயற்சிக்கிறேன். நன்றி!

  ReplyDelete
 14. நல்ல விமர்சனம் பாபு!!!

  ReplyDelete
 15. @எஸ்.கே..
  கண்டிப்பாக பாருங்கள் எஸ்.கே.. வருகைக்கு நன்றிங்க..

  ReplyDelete
 16. @சிவா..
  நன்றிங்க..

  ReplyDelete
 17. ஐயோ அந்த போட்டோ பார்த்தவே பயமா இருக்கு , இதுல எங்க போய் படம் பாக்குறது ..!

  ReplyDelete
 18. @ப. செல்வக்குமார்..
  அப்படி ஒன்னும் பயமா இருக்காது செல்வா.. குழந்தைகள் கூட இந்தப் படத்தைப் பார்க்கலாம்..

  ReplyDelete
 19. கண்டிப்பாய் பார்க்கனும் போல....

  ReplyDelete
 20. @அருண் பிரசாத்..
  வாங்க அருண்..

  ReplyDelete
 21. yes I saw the film really good movie

  thanks

  ReplyDelete
 22. பார்க்கத் தூண்டும் பதிவு.. வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 23. @புதுவை சிவா..
  நன்றிங்க..

  ReplyDelete
 24. @சுகுமார் சுவாமிநாதன்..
  வாழ்த்துக்களுக்கு நன்றிங்க..

  ReplyDelete