.

Saturday, December 25, 2010

தமிழ்மிண்ட் அராஜகங்கள்..

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பதிவர் இம்மாதிரி பதிவிட்டிருந்தார்.. தமிழ்மிண்ட்ல ஜாயின் பண்ணுங்க.. உலக நடப்புகள் மற்றும் உங்களுக்கு எந்த விசயங்களில் விருப்பம் இருக்கோ.. அந்த விசயங்களை எல்லாம் உங்க மொபைலுக்கு மெசேஜ் அனுப்பி உடனுக்கு உடனே தெரிவிப்போம்.. உங்களுக்கு எந்த டைம்ல மெசேஜஸ் வரவேண்டாம்னு நினைக்கறீங்களோ.. அந்த டைம் மென்சன் பண்ணிட்டால்.. அந்த சமயங்களில் உங்களுக்கு எந்த மெசேஜும் அனுப்ப மாட்டோம்.. அதுபோல உங்களுக்கு எங்க சேவை பிடிக்கலைனா "NO MINT" அப்படின்னோ என்னவோ டைப் பண்ணி அனுப்பினா.. இந்த சேவையில் இருந்து நீங்க விலகிடலாம்னு இருந்தது..

நான் நண்பர்கள் அனுப்பியிருக்கும் ஃபார்வேர்டு மெசேஜையே படிக்க மாட்டேன்.. ஆனால் அந்த பிளாக்கர் எழுதிய விதமோ என்னவோ.. நான் அதில் இம்ப்ரஸ் ஆகி.. அவர் குடுத்திருந்த லிங்கிற்குப் போய் பார்த்தேன்.. விளையாட்டு, அரசியல், உலக செய்திகள் அப்படி இப்படின்னு.. நூற்றுக்கு மேல வகைகள் அதில் இருந்தது.. சரி இப்போதைக்கு இருக்கட்டுமேன்னு.. உலக செய்திகள் மற்றும் இன்றைய கருத்துக்கள் அப்படிங்கற இரண்டு தலைப்புகளை தேர்வு செய்து சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்..

சப்ரைப் பண்ணின கொஞ்சம் நேரத்தில் ஒரே ஒரு மெசேஜ் வந்தது.. மெசேஜை ஓப்பன்கூட பண்ணாம டெலிட் பண்ணிட்டேன் அப்போ.. அன்னைக்கு நைட் 10 மணிக்கு ஆரம்பித்தது தொல்லை.. தொடர்ந்து 5 செகண்டுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிட்டே இருந்தாங்க.. என்னடா இது வம்பாப் போச்சுன்னு.. சேவையை கேன்சல் பண்ண அவங்க குறிப்பிட்டிருந்த நம்பருக்கு.. மெசேஜ் பண்ண.. எங்களால இப்ப உங்க சேவையை கேன்சல் பண்ண முடியல.. கொஞ்ச நேரம் கழிச்சு ட்ரை பண்ணுங்கன்னு மெசேஜ் வந்தது.. சரி காலையில் ட்ரை பண்ணலாம்னு.. மொபைலை சைலண்ட்ல போட்டுட்டு தூங்கிட்டேன்.. அடுத்த நாள் காலையில் பார்த்தால் 89 மெசேஜ் வந்திருந்தது.. ரொம்பக் கம்மியாதான் அனுப்பியிருக்காங்கன்னு நினைச்சுட்டு.. திரும்பவும் ட்ரை பண்ணேன்.. பண்ணேன்.. பண்ணேன்.. அன்னைக்கு முழுக்க நிறைய முறை ட்ரை பண்ணிட்டேன்.. அப்புறம் கொஞ்ச நாளைக்கு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ட்ரை பண்ணிட்டே இருந்தேன்..

அந்த பிளாக்கோட பேர் தெரியாததால அங்கேயும் போய் திட்ட முடியல.. வேற எப்படி ட்ரை பண்றதுன்னு தெரியல.. ரீசண்டா ஒரு பதிவர்.. தமிழ்மிண்ட்ல ஜாயின் பண்ணுங்க.. நான் அனுப்புற மெசேஜ் மட்டும்தான் வரும்.. உங்களுக்கு தொந்திரவு இருக்காதுன்னு எழுதியிருந்ததைப் படிச்சேன்.. ஆபிஸ்ல வேலை அதிகம் இருந்ததால.. அந்த விண்டோவை அப்படியே ஓப்பன் பண்ணி வைச்சுட்டு.. வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.. அப்படியே மறந்து "Shutdown" பண்ணிட்டேன்..

இன்ஸ்ட்ரக்சன்ல குறிப்பிட்டிருந்த முறைப்படி என்னால் அந்த சேவையை நிறுத்த முடியல.. உங்களுக்கு ஏதும் தெரிந்தால் சொல்லுங்க..

இதில் நிறைய விளம்பரங்கள் வருது.. அதனால நிறையப்பேர் இதை கூகுள்கிட்ட இருந்து அவுட்சோர்ஸ் எடுத்துப் பண்றாங்களான்னு தெரியல.. இந்த சேவையைக் குறை சொல்லல.. எனக்கு வேண்டாம்னுதான் சொல்றேன்.. :-)..

"9870807070" இந்த நம்பர்ல இருந்துதான்.. தினமும் குறைந்தது 20 மெசேஜாவது வருது.. யாருக்கும் வழி தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ்..

டிஸ்கி: இதை ஒரு பதிவாகப் போடனும்ங்கறது என் எண்ணம் இல்ல.. ஆனால் இந்த சேவையைப் பயன்படுத்தச் சொல்லி இரண்டு பதிவுகளை நான் படிச்சிருக்கறதால.. அதை உபயோகப்படுத்திய என்னுடைய நிலையையும் தெரியப்படுத்தவே இந்தப் பதிவு..

41 comments:

  1. Google இல் SMS channels என தேடவும். இப்போது உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் மூலம் செல்லவும். இப்போது நீங்கள் subscribe செய்துள்ள channel களை unsubscribe செய்து விடவும். அவ்வளவுதான்.
    or

    labs.google.co.in/smschannels/browse இங்கு செல்லவும்.

    ReplyDelete
  2. சூப்பர் நண்பா.. நீங்க சொன்ன லிங்குல இருந்தது என்னுடைய அகெளண்ட்..

    என்ன ஒரு வில்லத்தனம்.. நான் சப்ஸ்கிரைப் செய்திருந்த இரு சேனல்களும் 50க்கும் மேல மல்டிப்ளை பண்ணியிருக்காங்க..

    ஒவ்வொன்னா.. UNSUBSCRIBE பண்ணிட்டு இருக்கேன்..

    தகவலுக்கு மிகவும் நன்றி..

    ReplyDelete
  3. இது ஒரு நல்ல application from Google . ஆனால் நீங்கள் இதனை நேரடியாக Activate செய்யாத காரணத்தால் இவ்வளவு பிரச்சினைகள். அவர்கள் கொடுத்துள்ள settings களை பயன்படுத்தி நாம் இதனை control செய்யலாம். நான் இதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரைவில் ஒரு பதிவு இடுகிறேன்.

    ReplyDelete
  4. நன்றி நண்பா.. கண்டிப்பாக செய்யுங்க..

    ReplyDelete
  5. Read the instructions below and try. I am not sure

    http://teck.in/how-to-unsubscribe-from-google-sms-channel-9870807070.html

    ReplyDelete
  6. Renu said...

    Read the instructions below and try. I am not sure

    http://teck.in/how-to-unsubscribe-from-google-sms-channel-9870807070.html ////

    நீங்க கொடுத்திருக்கிற லிங்கின் இரண்டாவது முறையைப் பயன்படுத்தி முயற்சி செய்துட்டு இருக்கேன்.. நன்றி ரேணு..

    ReplyDelete
  7. நீங்கள் சொல்வது கூகுள் எஸ்எம்எஸ் சேனலா? அப்படியென்றால் அதிலிருந்து unsubscribe செய்ய முடியும். இந்த லிங்கிற்கு செல்லவும். My Channels

    அதில் Tamilmintஐ தேர்ந்தெடுக்கவும். பின் Unsubscribeஐ கிளிக் செய்யவும். பின் கூகுள் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் உடன் லாக் ஆன் செய்யவும்.

    போன் மூலம் இதை செய்ய OFF என டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு sms செய்யலாம்.

    ReplyDelete
  8. @எஸ்.கே..

    நீங்க் சொல்லியிருக்கும் இரண்டாவது முறை ஒர்க்கவுட் ஆகலங்க எஸ்.கே..

    முதல் முறையைப் பயன்படுத்திட்டு இருக்கேன்..

    நன்றிங்க...

    ReplyDelete
  9. இத பத்தி எனக்கு ஒன்னும் தெரியாததால அப்பீட்டுகிறேன்

    ReplyDelete
  10. இரவு வானம் said...

    இத பத்தி எனக்கு ஒன்னும் தெரியாததால அப்பீட்டுகிறேன் ////

    ஹா ஹா ஹா.. ரைட்டுங்க..

    ReplyDelete
  11. சரி விடுங்க ஒரு வழியா unsubscribe பண்ணிட்டு இருக்கீங்கல்ல.. :)

    ReplyDelete
  12. karthikkumar said...

    சரி விடுங்க ஒரு வழியா unsubscribe பண்ணிட்டு இருக்கீங்கல்ல.. :) ///

    :D.. ஆமாங்க கார்த்திக்.. பெரிய தொல்லையா இருந்தது இதுனால..

    இப்போதான் நிம்மதி..

    ReplyDelete
  13. என்னது தமிழ் மின்ட்டா இப்பத்தான் இப்படி ஒன்னு இருக்கு னே இருக்குனு கேள்விப்படுறேன்

    ReplyDelete
  14. நா.மணிவண்ணன் said...

    என்னது தமிழ் மின்ட்டா இப்பத்தான் இப்படி ஒன்னு இருக்கு னே இருக்குனு கேள்விப்படுறேன் ////

    :-).. நல்லது நண்பா.. என்னை மாதிரி நீங்களும் ட்ரை பண்ணிப் பார்க்கறீங்களா.. :D

    ReplyDelete
  15. நீங்க எஒம்ப பிரபலமான ஆள் போல. ஒரு நாளைக்கு ஒரு எஸ் எம் எஸ் வரதே பெரிய பாடா இருக்கு. ஆனா உங்களுக்கு 89க்கு மேல மெசேஜா?? வாழ்த்துக்கள் பாபு. கலக்குங்க ;)

    ReplyDelete
  16. ஆமினா said...

    நீங்க எஒம்ப பிரபலமான ஆள் போல. ஒரு நாளைக்கு ஒரு எஸ் எம் எஸ் வரதே பெரிய பாடா இருக்கு. ஆனா உங்களுக்கு 89க்கு மேல மெசேஜா?? வாழ்த்துக்கள் பாபு. கலக்குங்க ;) ////

    ஹா ஹா ஹா..

    இந்த எஸ்.எம்.எஸ். தொல்லையால,, மெசேஜுக்கு சைலண்ட் டோனைத் தாங்க இவ்வளவு நாளா வைச்சிருந்தேன்.. நண்பர்களின் மெசேஜ்கள்கூட நிறைய முறைத் தெரியாமப் போயிடும்..

    வருகைக்குக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  17. //அன்னைக்கு நைட் 10 மணிக்கு ஆரம்பித்தது தொல்லை.. தொடர்ந்து 5 செகண்டுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிட்டே இருந்தாங்க.. என்னடா இது வம்பாப் போச்சுன்னு.. சேவையை கேன்சல் பண்ண அவங்க குறிப்பிட்டிருந்த நம்பருக்கு..///

    ஹி ஹி ஹி .. விடுங்க அரசியல்ல இதெல்லாம் சகஜம் ..!!

    ReplyDelete
  18. //"9870807070" இந்த நம்பர்ல இருந்துதான்.. தினமும் குறைந்தது 20 மெசேஜாவது வருது.. யாருக்கும் வழி தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ்..
    ///

    அட கொடுமையே , இது கூகுள் SMS சேனல்ஸ் நம்பர்ங்க ..
    என்னோடது கூட ஒரு சேனல் இருக்கு ..
    இது என்னோட சேனல் முகவரி .. வந்து பாருங்க ..

    http://labs.google.co.in/smschannels/channel/quizfromtbts?cr=in&continue=/smschannels/browse%3Fhl%3Den%26q%3Dquizfromtbts%26btnG%3DSearch%26cr%3Din&prev=/smschannels/browse%3Fhl%3Den%26q%3Dquizfromtbts%26btnG%3DSearch%26cr%3Din

    ReplyDelete
  19. நல்ல எச்சரிக்கை...
    சகோதரர் அப்துல் காதர்...
    உபயோகமான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  20. கோமாளி செல்வா said...
    அட கொடுமையே , இது கூகுள் SMS சேனல்ஸ் நம்பர்ங்க ..
    என்னோடது கூட ஒரு சேனல் இருக்கு ..
    இது என்னோட சேனல் முகவரி .. வந்து பாருங்க ../////

    ஆஹா!! செல்வா.. அப்போ நீங்கதானா அது.. :-)

    நான் UNSUBSCRIBE பண்ணிய பிறகும்... தொடர்ந்து மெசேஜ் வந்துட்டே இருக்கு செல்வா.. இதுல என்ன சூட்சமம் இருக்கு நீங்களே சொல்லுங்க..

    ReplyDelete
  21. முஹம்மத் ஆஷிக் said...

    நல்ல எச்சரிக்கை...
    சகோதரர் அப்துல் காதர்...
    உபயோகமான பதிவு.
    நன்றி. /////

    ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  22. பயனுள்ள பதிவு
    எனக்கு BSNL ல்ல இருந்து நிறைய மெசேஜ் வருது என்ன பண்ணலாம் ?

    ReplyDelete
  23. இது google sms channels... நான் கொஞ்சம் லேட் அதற்குள் மற்றவார்கள் உங்களுக்கான விளக்கங்களை கொடுத்துவிட்டார்கள்... இருப்பினும் எனது ஆலோசனை... google sms channelsல் ஆயிரக்கணக்கான சேனல்கள் இருக்கிறது... நீங்கள் ஏதாவது எஸ்.எம்.எஸ் பெற விரும்பினீர்கள் என்றால் அவர்களுடைய avg posts per day எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு சேரவும்...

    ReplyDelete
  24. >>>அடுத்த நாள் காலையில் பார்த்தால் 89 மெசேஜ் வந்திருந்தது.. ரொம்பக் கம்மியாதான் அனுப்பியிருக்காங்கன்னு நினைச்சுட்டு..


    செம காமெடி

    ReplyDelete
  25. சிவகுமாரன் said...

    பயனுள்ள பதிவு
    எனக்கு BSNL ல்ல இருந்து நிறைய மெசேஜ் வருது என்ன பண்ணலாம் ? ////

    ஒருமுறை நானும் BSNL யூஸ் பண்ணிட்டு இருந்தேங்க.. ஏதாவது ஒரு விசயத்தைச் சொல்லி அதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு கேட்டா.. ஒன்னுமே தெரியாது அதுங்களுக்கு.. ரொம்ப ஒர்ஸ்ட்டான சர்வீஸ்..

    ReplyDelete
  26. philosophy prabhakaran said...

    இது google sms channels... நான் கொஞ்சம் லேட் அதற்குள் மற்றவார்கள் உங்களுக்கான விளக்கங்களை கொடுத்துவிட்டார்கள்... இருப்பினும் எனது ஆலோசனை... google sms channelsல் ஆயிரக்கணக்கான சேனல்கள் இருக்கிறது... நீங்கள் ஏதாவது எஸ்.எம்.எஸ் பெற விரும்பினீர்கள் என்றால் அவர்களுடைய avg posts per day எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு சேரவும்... ////

    ரொம்ப உபயோகமான தகவலைத் தந்திருக்கீங்க பிரபாகரன்.. ஆனால் திரும்பவும் இந்த சேவையை யூஸ் பண்ற ஐடியா இல்ல.. அந்த சேவையில் இருந்து விலகிய பிறகும்.. இன்னும் எனக்கு மெசேஜ் வந்துட்டே இருக்கு.. இவனுகளை என்ன பண்றது..

    ReplyDelete
  27. சி.பி.செந்தில்குமார் said...

    >>>அடுத்த நாள் காலையில் பார்த்தால் 89 மெசேஜ் வந்திருந்தது.. ரொம்பக் கம்மியாதான் அனுப்பியிருக்காங்கன்னு நினைச்சுட்டு..


    செம காமெடி ////

    வாங்க செந்தில்குமார்..

    ReplyDelete
  28. My Channels இல் உங்களுக்கு எந்த சேனல் உம் இல்லை எனில் உங்களுக்கு எந்த SMS உம் வராது. செக் செய்யவும்.

    ReplyDelete
  29. பலே பாண்டியா/ said...

    My Channels இல் உங்களுக்கு எந்த சேனல் உம் இல்லை எனில் உங்களுக்கு எந்த SMS உம் வராது. செக் செய்யவும். ////

    செக் பண்ணிட்டேன்.. எந்த சேனலும் இல்லை இப்போ.. அதுபோல கடந்த இரண்டு மணிநேரமாக எந்த மெசேஜும் வர்றதும் இல்ல.. :-)

    ReplyDelete
  30. டிஸ்கி: இதை ஒரு பதிவாகப் போடனும்ங்கறது என் எண்ணம் இல்ல.. ஆனால் இந்த சேவையைப் பயன்படுத்தச் சொல்லி இரண்டு பதிவுகளை நான் படிச்சிருக்கறதால.. அதை உபயோகப்படுத்திய என்னுடைய நிலையையும் தெரியப்படுத்தவே இந்தப் பதிவு..


    இந்த பதிவினால இனிமேல் நம்ம பசங்க உசாரா இருப்பானுங்க

    ReplyDelete
  31. FARHAN said...
    இந்த பதிவினால இனிமேல் நம்ம பசங்க உசாரா இருப்பானுங்க////

    இந்த சேவை நல்லதுதான்னு சில நண்பர்கள் பின்னூட்டத்துல சொல்லியிருந்தாங்க.. ஆனால் என்னுடைய அகெளண்டுல ஒரு சேனலையே மீண்டும் மீண்டும் மல்டிப்ளை பண்ணி வைச்சிருக்காங்க.. அதனாலதான் இப்படி மெசேஜஸ் வந்திட்டு இருந்திருக்கு..

    சேவையின்னு சொல்லிட்டு ஒரே தொல்லையாய் போயிடுச்சு இதனால.. நண்பர்கள் உஷாராக இருந்தால் சரி..

    ReplyDelete
  32. செல்வாவுக்கு இதை பற்றி தெரியும் கேளுங்க அவன் சொல்லவில்லை என்றால் சொல்லுங்க நான் அவன் மண்டையில் ரெண்டு போடுறேன்

    ReplyDelete
  33. சௌந்தர் said...

    செல்வாவுக்கு இதை பற்றி தெரியும் கேளுங்க அவன் சொல்லவில்லை என்றால் சொல்லுங்க நான் அவன் மண்டையில் ரெண்டு போடுறேன் ////

    ஹா ஹா ஹா.. ரைட்டுங்க.. அவரும் இதுபோல் ஒரு சேனல் வைத்திருக்கிறார்னு தெரிஞ்க்கிட்டேன்..

    நல்ல விசயம்தான்.. நான் சப்ஸ்கிரைப் பண்ணியிருந்த சேனலை கன்ட்ரோல் செய்திட்டு இருந்தவர்தான்.. தொந்திரவு பண்ணிட்டார்னு தெரிஞ்சுக்கிட்டேன்..

    நன்றிங்க..

    ReplyDelete
  34. இப்ப ஓகே தானே பாபு?...டோடல் ஆ unsubscirbe பண்ணிட்டிங்க தானே..??!! unknown providers கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருப்பது நல்லது...

    ReplyDelete
  35. பதிவு படித்து குழம்பினேன்...பலே பாண்டியா பின்னூட்டம் படித்துத் தெளிந்தேன். நான் இதெல்லாம் முயற்சித்ததே இல்லை என்பதால் உங்கள் அனுபவங்கள் எனக்குப் பாடமாகின்றன.

    ReplyDelete
  36. ஆனந்தி.. said...

    இப்ப ஓகே தானே பாபு?...டோடல் ஆ unsubscirbe பண்ணிட்டிங்க தானே..??!! unknown providers கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருப்பது நல்லது... ////

    உண்மைதாங்க ஆனந்தி.. இனி ஜாக்கிரதையாகவே இருக்கேன்.. :-)

    ReplyDelete
  37. ஸ்ரீராம். said...

    பதிவு படித்து குழம்பினேன்...பலே பாண்டியா பின்னூட்டம் படித்துத் தெளிந்தேன். நான் இதெல்லாம் முயற்சித்ததே இல்லை என்பதால் உங்கள் அனுபவங்கள் எனக்குப் பாடமாகின்றன. ////

    ரொம்ப சந்தோசங்க..

    ReplyDelete
  38. "இப்ப ஓகே தானே ப்ரைனுக்கு ஒன்னும் பாதிப்பில்லேள்ள"

    சும்மா தமாசுக்கு............

    உங்க சங்கடம் புரிந்தது.

    ReplyDelete
  39. @விக்கி உலகம்...

    ஹா ஹா ஹா.. ரைட்டுங்க..

    ReplyDelete
  40. இதுவும் ஒரு அனுபவம் தான்,,, நீங்களாவது பரவா இல்ல.. எதுலயோ subscribe பண்ணதால மெசேஜ் வருது.. நான்லாம் ஒண்ணுமே பண்ணல.. அதுக்கே ஒரு நாளைக்கு 20 மெசேஜ் வருது... !!!! delete பண்ணிட்டு போய்கிட்டே இருக்கேன்!!!
    --
    மதுரை பாண்டி
    http://maduraipandi1984.blogspot.com

    ReplyDelete
  41. மதுரை பாண்டி said...

    இதுவும் ஒரு அனுபவம் தான்,,, நீங்களாவது பரவா இல்ல.. எதுலயோ subscribe பண்ணதால மெசேஜ் வருது.. நான்லாம் ஒண்ணுமே பண்ணல.. அதுக்கே ஒரு நாளைக்கு 20 மெசேஜ் வருது... !!!! delete பண்ணிட்டு போய்கிட்டே இருக்கேன்!!!////

    ஆமாங்க.. அது யூஸ்வலாக தொல்லைக் கொடுத்திட்டுதான் இருக்காங்க.. அவங்களைப் பத்தி சொல்லனும்னா.. இன்னொரு பதிவு போடனும்.. :-)

    ReplyDelete