.

Monday, December 27, 2010

அலுவலக அரசியல்கள்

ஒரு அலுவலகத்தில் சாதாரண ஒரு பணியாளராக வேலைக்கு சேர்கிறோம்.. அங்கே மேலும் மேலும் நாம உயரனும்னா.. நிறைய விசயங்கள் செய்ய வேண்டியிருக்கு.. எனக்கு தெரிந்த சில விசயங்களைப் பற்றி இங்கே எழுதறேன்..

புதியதாக ஒரு அலுவலகத்தில் சேர்ந்தவுடன்.. கொடுக்கற வேலையை செய்தோமா.. போனோமான்னு இருந்தால்.. அது பத்துடன் பதினொன்று என்றாகிடும்.. அதனால நம்முடைய திறமையை அங்கே நிரூபிக்கனும்.. எப்படி நிரூபிக்கறது.. ஒரு 10 பேர் மட்டும் வேலை பார்க்கும் ஆபிஸ்ல நம்மை முன்னிலைப் படுத்தனும்னு நினைத்தால் ரொம்ப ஈசிங்க.. கொஞ்சம் ஹார்டு ஒர்க் பண்ணிக் காமித்து.. மற்றவர்களை விட அவுட்புட் அதிகமாகக் காமித்தாலே போதுமானது.. நிர்வாகத்தின் கவனத்திற்குப் போயிடுவோம்.. அதை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது நம்ம கையில்தான் இருக்கு..

நாம் வேலையில் சேர்ந்திருப்பது ஒரு பெரிய நிறுவனம்.. நம்முடைய பிராஜக்ட்லயே குறைந்தது.. 100 பேரூக்கு மேல் வேலை செய்யும் இடம்.. இங்கே எல்லாரையும் விட அதிக நேரம் வேலை பார்க்கிறேன்.. ஹார்டு ஒர்க்கை நிரூபிக்கிறேன்னு திட்டம் போட்டால் அது முடியாது.. எதை நிரூபிக்கறதாக இருந்தாலும்.. நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஆபீஸ் நேரத்துலதான் செய்யனும்.. ஏன்னா.. பெரிய நிறுவனங்கள் எல்லாம் 24 மணிநேரமும் ஷிஃப்ட் பேசிஸ்ல இயங்கக் கூடியவை.. நம்முடைய வேலை நேரம் முடியறதுக்கு 5 நிமிடம் முன்னதாகவே சிஸ்டம் வேனும்னு அடுத்த ஷிஃப்டுக்கு லாகின் பண்றவங்க வந்து நின்னுடுவாங்க.. அதனால் இம்மாதிரியான நிறுவனங்களில் தனித்திறமைகளை முன்னிறுத்துவதன் மூலமாகவே பெயர் வாங்க முடியும்..

தனித்திறமைன்னா என்ன?.. அவங்க வேலை கொடுக்கறாங்க நாம செய்றோம்.. இதுல என்ன தனித்திறமையை வெளிக்காட்டறதுன்னு கேக்கறீங்க இல்லையா.. முதல் ஸ்டெப் நிறையப் பேசனும்.. மனசுல தோன்றதைப் பயப்படாமக் கேக்கனும்.. ஒரு ட்ரைனிங் வைக்கறாங்க அப்படின்னா.. அங்கே நமக்கு பல சந்தேகங்கள் உண்டாகலாம்.. சரி பக்கத்துல இருக்கறவன் புரிஞ்சுட்டிருப்பான்.. வெளியே போய் கேட்டுப்போன்னு திங்க் பண்ணாம.. உடனே நம்முடைய சந்தேகங்களைக் கேக்க ஆரம்பிக்கனும்.. கேள்வி கேக்க தயங்கறோம்னா.. ஒன்னு லேசினெஸ் காரணமாக இருக்கனும்.. அல்லது ஆங்கிலம் பிரச்சினையாக இருக்கலாம்.. இங்கே முதல் வகையை விட்டுடலாம்.. ரெண்டாவது கேட்டகரியை எடுத்துக்குவோம்..

தமிழ்நாட்டுல இருந்து வர்றவங்க.. பெரும்பாலும் தமிழ் மீடியம் படிச்சுட்டு வர்றதால நிறைய மதர்டங் இன்ஃபுலுயன்ஸோட வர்றோம்.. முதல்ல நிறையப் பேருக்கு பேச வர்றதே இல்ல.. அதனால் நாம் ஏதாவது கேள்வி கேட்டு.. அது தப்பாப் போயிட்டா எல்லாரும் சிரிப்பாங்க அப்படிங்கற பயத்துலயே அமைதியாய் உட்கார்ந்திருப்போம்.. அந்தப் பயத்தை விட்டுட்டு.. தப்பாகவே பேசுவோமே.. நாம் எதையோ கேக்க நினைக்கிறோம்.. இவனுக்கு ஆர்வம் இருக்குன்னாவது அவங்களுக்குத் தெரிய வரும்.. இந்த ஆர்வம் நம்மகிட்ட வந்துட்டாலே.. நாம என்ன கேக்க நினைச்சோம்னு யார்கிட்டயாவது கேட்டாவது தெரிஞ்சுக்குவோம்.. அடுத்த முறை நம் மனதில் தோன்றும் வேற கேள்வியை எப்படி கேக்கறதுன்னே தெரியலைன்னாலும் கேக்க தைரியம் வந்துடும்.. முதல்முறை சிரிச்சவங்க.. இந்தமுறை இவன் என்ன கேக்க நினைக்கறான்னு கூர்ந்து கவனிப்பாங்க..

நம்முடைய வேலையை நாம்.. ட்ரைய்னிங்லயே சிறப்பாக செய்யத் தவறி இருக்கலாம்.. புதிய வேலை.. ஒரு மாதிரி கண்ணைக் கட்டி விட்டமாதிரி ஃபீல் பண்ணுவோம்.. கவலைப் படாதீங்க.. வேலையிலயே நேரடியாகப் பிரச்சினையைப் ஃபேஸ் பண்ணிக்கலாம்.. ஏன்னா நிறையப் பேருக்கு.. க்ளாஸ் எடுத்தால் பிடிக்காது.. நேரடியாக வேலை செய்றதுதான் பிடிக்கும் (எனக்கு அதுதான் பிடிக்கும் :-) )..

நெக்ஸ்ட் ஏதாவது நம்முடைய டீமுக்காக ஏதாவது செய்யனும்.. ஏதாவதுன்னா?.. நீங்க வேலை செய்துட்டு இருக்கற பிராஜெக்ட் உங்களுக்கு நல்லாப் பழகினவுடன்.. அதுபற்றி ஒரு சப்பையாக அல்லது உண்மையிலயே அறிவாளியாக இருந்தால் அருமையாக ஒரு பிரசெண்டேசனையோ அல்லது ஒரு புதிய ஒர்க் ஸ்ட்ரக்சரையோ கிரியேட் பண்ணி.. உங்க டீம் மெம்பர்ஸுக்கு கொடுக்கக்கூடாது (;-)).. அது சப்பையாகவே இருந்தாலும் உங்க அணித்தலைவருக்குக் காட்டனும்.. சமயம் வரும்போதெல்லாம் நான் இந்த விசயத்தை செய்தேன்னு சொல்லிக் காட்டனும்.. இந்தமாதிரி எக்ஸ்ட்ரா ஆக்டீவிட்டீஸ் செய்யத் தெரியாதவங்க.. இதுக்கு காக்கா பிடிக்கறான்னு பேர் வைப்பாங்க.. உண்மையில் அவங்களுக்கு எல்லாம்.. என்னடா இவன் நம்மகூட சேர்ந்துட்டு ஆக்டிவா இருக்கானே.. நமக்கு ஒன்னும் தெரியலையேன்னு பொறாமையா இருக்கும்.. ஆனால் அதை அவங்க மனசுகூட ஏத்துக்காது..

சும்மா இந்த வேலையை செய்தால் மட்டும் நல்ல பேர் வாங்கிட முடியுமான்னு நீங்க திங்க் பண்ணலாம்.. இதுவே உங்களுக்குத் தொடக்கமாகவும்.. நல்ல திருப்புமுனையாகவும் அமையும்..

சின்னக் கம்பெனியோ.. பெரிய கம்பெனியோ.. நம்முடைய வேலை சிறப்பாக இருந்தும்.. அங்கீகாரம் இல்லைன்னா.. அங்கே இருக்கறது வேஸ்ட்.. சீக்கிரம் வேற பக்கம் ஜம்ப் ஆகறதுதான் நல்லது.. இல்லைன்னா.. சீக்கிரம் மனசுல ஒரு டிப்ரசன் உருவாகி நம்முடைய திறமைகள் பாழாயிடும்..

இவ்வளவு வேலைகளும் எதுக்கு செய்றோம்.. நமக்கு அங்கே வரும் முன்னேற்றதுக்காகத்தான் இல்லையா.. நமக்கும் அந்த முன்னேற்றம் வரும்.. அப்போ.. உங்க கூடவே டீம்ல இருந்த நண்பர்கள்.. இப்போ உங்களுக்கு கீழே வேலை செய்றமாதிரி நிலை வரும்.. இதற்கு முன்பு ஒரே அணியாக நிர்வாகத்தின் நிறை குறைகளை ஒரு பணியாளரின் பார்வையில் பார்த்துட்டு இருந்திருப்போம்.. நம்முடைய அணித்தலைவர்.. நமக்கு கொடுத்திருக்கற டார்கெட்டோட நியாயமின்மை எல்லாம் அப்போ பேசியிருப்போம்.. இப்போவும் அந்த நியாயம் நமக்குத் தெரியும்.. ஆனால் ஒரு அணித்தலைவராக நமக்குக் கொடுக்கப்பட்ட டார்கெட்.. குறிப்பிட்ட டயத்துல இவ்வளவு டார்கெட்டை முடிக்கனும்ங்கறதுதான்.. சோ ஆட்டோமேட்டிக்கா நம்முடைய டீமுக்கு பிரசர் கொடுக்க ஆரம்பிப்போம்..

ஏற்கனவே நம்முடைய பதவி உயர்வின் காரணமாக சிலர் விலகிப் போயிருப்பாங்க.. இப்போ இந்தப் பிரசர் கொடுக்க ஆரம்பித்தவுடன்.. மீதம் இருப்பவர்களும்.. பார் இவன்.. டீம் லீட் ஆனவுடன் தலைகணம் வந்துருச்சு.. அப்படின்னு பேச ஆரம்பிச்சுருப்பாங்க.. உண்மையில் நம்முடைய வேலைப்பளுவும்.. நம்முடைய டார்கெட்டும் அப்படி இருக்கும்.. நிர்வாகத்துக்கும்.. டீம் மெம்பர்ஸுக்கும் நல்லவிதமாக நடந்துக்கனும்னு நினைத்தால் நமக்கு ஆப்பு விழும்..

இங்கே உதாரணத்துக்கு சொல்லனும்னா.. பாதையில் நடக்கும் போது பாதசாரியாகவும்.. டூவிலர் ஓட்டும்போது அந்த மனநிலையிலும்.. ஃபோர் வீலர் ஓட்டும்போது அந்த மனநிலையில்தான் இருக்கனும்..

இந்தமாதிரி எல்லா விதமான அரசியல்களை சமாளிக்கனும்.. எங்கேயாவது சிலிப்பானால்.. பரமபதம் மாதிரிதான் திரும்பவும்.. பழைய இடத்துக்குத்தான் வருவோம்..

அதுபோல நம்முடைய நிறுவனத்தில் நம்முடைய பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கலாம்.. அதன் காரணமாக நிறுவனத்தில் சில சலுகைகள் நமக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.. ஆனால் நாம இல்லைனா.. இவங்க இந்த வேலையை செய்திருக்க முடியாதுன்னு நினைப்பை வளர்த்தால்.. நம் மனதில் அகங்காரம் வந்து சீக்கிரம் அது வெளிப்படும்.. அது வேண்டாம்.. நாராயண மூர்த்தி சொன்னமாதிரி நம்முடைய நிறுவனம் எப்போ நம்மை விரும்பறதை நிறுத்துவாங்கன்னு சொல்லவே முடியாது.. அதனால் நம்ம வேலையை என்றைக்குமே கரெக்டாக செய்வோம்.. :-)

டிஸ்கி 1: நண்பர்கள் இருவர் ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது.. ரெண்டு பேரும் நண்பர்கள் என கம்பெனிக்குள்ள காட்டிக்காம இருந்தால்.. நம்மைப் பற்றி சக பணியாளர்கள் பேசும் விசயங்களையும்.. நமக்கு மேல இருக்கறவங்க பேசற விசயங்களையும் தெரிஞ்சுக்க முடியும்.. ட்ரை பண்ணிப் பாருங்க.. அனைத்தும் அரசியலே.. :-)

54 comments:

 1. /சின்னக் கம்பெனியோ.. பெரிய கம்பெனியோ.. நம்முடைய வேலை சிறப்பாக இருந்தும்.. அங்கீகாரம் இல்லைன்னா.. அங்கே இருக்கறது வேஸ்ட்.. சீக்கிரம் வேற பக்கம் ஜம்ப் ஆகறதுதான் நல்லது.. இல்லைன்னா.. சீக்கிரம் மனசுல ஒரு டிப்ரசன் உருவாகி நம்முடைய திறமைகள் பாழாயிடும்..//

  முற்றிலும் உண்மையான கருத்து நண்பரே

  மிகவும் தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. @மாணவன்...

  பாராட்டுக்கு நன்றிங்க...

  ReplyDelete
 3. இங்கே பார்க்க
  http://balepandiya.blogspot.com/2010/12/google-sms-channels.html

  ReplyDelete
 4. //அதனால் நாம் ஏதாவது கேள்வி கேட்டு.. அது தப்பாப் போயிட்டா எல்லாரும் சிரிப்பாங்க அப்படிங்கற பயத்துலயே அமைதியாய் உட்கார்ந்திருப்போம்..//

  நான் இதைப்போன்ற நிகழ்வை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
 5. நல்ல விரிவான அலசல்.

  ReplyDelete
 6. /சின்னக் கம்பெனியோ.. பெரிய கம்பெனியோ.. நம்முடைய வேலை சிறப்பாக இருந்தும்.. அங்கீகாரம் இல்லைன்னா.. அங்கே இருக்கறது வேஸ்ட்.. சீக்கிரம் வேற பக்கம் ஜம்ப் ஆகறதுதான் நல்லது.. இல்லைன்னா.. சீக்கிரம் மனசுல ஒரு டிப்ரசன் உருவாகி நம்முடைய திறமைகள் பாழாயிடும்..//
  சத்தியமான வார்த்தைகள். அருமையான பதிவு.

  ReplyDelete
 7. பலவிதமான மனிதர்களுக்கு மத்தியில் பலவிதமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும் எல்லாவற்றிற்கு பொருந்தினால் நன்றாக செயல்படலாம். இல்லையென்றால் பிரச்சினையே ஏற்படும்!

  ReplyDelete
 8. நிறைய விஷயங்களை நானும் எதிர்கொண்டிருக்கிறேன்... அதுவும் எனது முதல் அலுவலகத்திலேயே... ஓராண்டு வரை நான் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்வேன் என்ற மனநிலையிலேயே இருந்தேன்... பின்னர் பொறுக்கமுடியாமல் வேலையை விட்டுவிட்டேன்...

  ReplyDelete
 9. //பாதையில் நடக்கும் போது பாதசாரியாகவும்.. டூவிலர் ஓட்டும்போது அந்த மனநிலையிலும்.. ஃபோர் வீலர் ஓட்டும்போது அந்த மனநிலையில்தான் இருக்கனும்..//

  உண்மைதான் நண்பா...

  ReplyDelete
 10. அருமை .பல விஷயங்கள் பயனுள்ளதாக இருந்தது,பேசாம நீங்க பத்திரிக்கைல சேரலாமே

  ReplyDelete
 11. நல்ல பயனுள்ள பதிவு நண்பரே...

  நமது திறமையை கையகப்படுத்தி அதனால் வாழும் பல ஈனப்பிறவிகள் இருக்கிறார்கள் நண்பரே... உதாரணமாக நாம் இரவுபகலாக தயார் செய்யும் ரிபோர்ட் களில் நமது மேலதிகாரிகள் வெறும் பெயரை மட்டும் மாற்றி வர்கள் நல்ல பெயர் எடுத்துவிடுகிறார்கள்.. அங்கே நாம் டம்மியாகிவிடுகிறோம்.

  ReplyDelete
 12. பகிர்வுக்கு நன்றி.

  அருமையான பணியிட அரசியல் அலசல்.

  என்னைபொறுத்தவரை யார் என்ன நினைப்பாங்க என்பது முக்கியமல்ல, நமக்கு ஒரு விஷயம் தெரியவேண்டும் என்றால் அடுத்தவர்களின் கேலிகளை கண்டுகொள்ளக்கூடாது.வெற்றி என்பது வெறும் அறிவு சார்ந்ததல்ல, சூழ்நிலையும் சேர்ந்தே முடிவுசெய்கிறது.

  நண்பர் வெறும்பய அவர்களின் பதிலுக்கு ஒரு சின்ன விளக்கம்:

  "நமது திறமையை கையகப்படுத்தி அதனால் வாழும் பல ஈனப்பிறவிகள் இருக்கிறார்கள் நண்பரே... உதாரணமாக நாம் இரவுபகலாக தயார் செய்யும் ரிபோர்ட் களில் நமது மேலதிகாரிகள் வெறும் பெயரை மட்டும் மாற்றி வர்கள் நல்ல பெயர் எடுத்துவிடுகிறார்கள்.. அங்கே நாம் டம்மியாகிவிடுகிறோம்"
  நீங்கள் சொல்வது 100% உண்மை. ஆனால் அதே நேரம் முடிந்தால் நீங்கள் தயார் செய்யும் விஷயத்தில் எங்காவது ஒரு "நாட்" வையுங்கள்.

  இது என் தாழ்மையான கருத்து. (உண்மையில் பல அப்பாடக்கர்களை நான் பின்னுக்கு தள்ளியது இதன் மூலமே!)

  ReplyDelete
 13. உண்மைதான் பாபு! இந்த அரசியல் எல்லா நாட்டிலும் உண்டுதான் போல!

  ReplyDelete
 14. அலுவலக அரசியல் ,தேவையான பகிர்வு.இப்ப உள்ள போட்டியில் நம்மை தனிப்படுத்தி காட்டுவது அவசியம தான்.

  ReplyDelete
 15. எல்லா விஷயங்களையும் ரொம்ப அழகா தெளீவா சொல்லிட்டீங்க சகோ

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. நல்ல கட்டுரை நண்பா . நானும் நீங்கள் கூறி உள்ளது போல் நிறைய பிரச்சனைகள் சந்தித்திருக்கிறேன் . தயக்கம் நமது வெற்றிக்கான தடை என்பதை உணரவைத்து விட்டீர்கள்

  ReplyDelete
 17. அன்பரசன் said...

  //அதனால் நாம் ஏதாவது கேள்வி கேட்டு.. அது தப்பாப் போயிட்டா எல்லாரும் சிரிப்பாங்க அப்படிங்கற பயத்துலயே அமைதியாய் உட்கார்ந்திருப்போம்..//

  நான் இதைப்போன்ற நிகழ்வை கண்கூடாக பார்த்திருக்கிறேன். ///

  இதோ.. நானே இருக்கேனே.. ரெண்டு நாள் பார்த்தேன்.. அப்புறம் யார் சிரிச்சாலும் பரவாயில்லன்னு பேச ஆரம்பிச்சுட்டேன்..

  நன்றிங்க அன்பரசன்..

  ReplyDelete
 18. Arun Ambie said...

  /சின்னக் கம்பெனியோ.. பெரிய கம்பெனியோ.. நம்முடைய வேலை சிறப்பாக இருந்தும்.. அங்கீகாரம் இல்லைன்னா.. அங்கே இருக்கறது வேஸ்ட்.. சீக்கிரம் வேற பக்கம் ஜம்ப் ஆகறதுதான் நல்லது.. இல்லைன்னா.. சீக்கிரம் மனசுல ஒரு டிப்ரசன் உருவாகி நம்முடைய திறமைகள் பாழாயிடும்..//
  சத்தியமான வார்த்தைகள். அருமையான பதிவு. ////

  நன்றிங்க..

  ReplyDelete
 19. எஸ்.கே said...

  பலவிதமான மனிதர்களுக்கு மத்தியில் பலவிதமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும் எல்லாவற்றிற்கு பொருந்தினால் நன்றாக செயல்படலாம். இல்லையென்றால் பிரச்சினையே ஏற்படும்! ////

  சரியாக சொன்னீங்க எஸ்.கே..

  ReplyDelete
 20. Meena said...

  Useful article ////

  நன்றிங்க..

  ReplyDelete
 21. philosophy prabhakaran said...

  நிறைய விஷயங்களை நானும் எதிர்கொண்டிருக்கிறேன்... அதுவும் எனது முதல் அலுவலகத்திலேயே... ஓராண்டு வரை நான் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்வேன் என்ற மனநிலையிலேயே இருந்தேன்... பின்னர் பொறுக்கமுடியாமல் வேலையை விட்டுவிட்டேன்... ////

  நம்முடைய உழைப்புக்கு சரியான அங்கீகாரம் தராமல்.. மூட்டைப் பூச்சி மாதிரி உறிஞ்சிட்டு இருக்கற இடங்கள்ல இருந்து.. வெளியேறிடறதுதான் நல்லது பிரபாகரன்.. சரியான முடிவையே எடுத்திருக்கீங்க..

  ReplyDelete
 22. சங்கவி said...

  //பாதையில் நடக்கும் போது பாதசாரியாகவும்.. டூவிலர் ஓட்டும்போது அந்த மனநிலையிலும்.. ஃபோர் வீலர் ஓட்டும்போது அந்த மனநிலையில்தான் இருக்கனும்..//

  உண்மைதான் நண்பா... ///

  வாங்க சங்கவி..

  ReplyDelete
 23. சி.பி.செந்தில்குமார் said...

  அருமை .பல விஷயங்கள் பயனுள்ளதாக இருந்தது,பேசாம நீங்க பத்திரிக்கைல சேரலாமே ////

  ரொம்ப சந்தோசங்க.. இந்த வார்த்தைகள் ரொம்ப சந்தோசத்தைக் கொடுத்தது எனக்கு... நன்றிங்க செந்தில்குமார்..

  ReplyDelete
 24. வெறும்பய said...

  நல்ல பயனுள்ள பதிவு நண்பரே...

  நமது திறமையை கையகப்படுத்தி அதனால் வாழும் பல ஈனப்பிறவிகள் இருக்கிறார்கள் நண்பரே... உதாரணமாக நாம் இரவுபகலாக தயார் செய்யும் ரிபோர்ட் களில் நமது மேலதிகாரிகள் வெறும் பெயரை மட்டும் மாற்றி வர்கள் நல்ல பெயர் எடுத்துவிடுகிறார்கள்.. அங்கே நாம் டம்மியாகிவிடுகிறோம். ////

  உங்கள் கருத்துக்கள் சரியே ஜெயந்த்.. நாம் ஒருவிசயத்தை செய்யும்போதும்.. அதை நாம் நிர்வாகத்துகிட்ட ஒப்படைக்கறதுக்கு முன்னாடியும்.. இந்த வேலையை நான் செய்தேன்.. இதை ஒப்படைக்கப் போறேன்.. அப்படின்னு.. சக ஊழியர்களிடமும்.. நிர்வாக கூட்டத்திலும் தெரியப்படுத்தனும்.. இங்கே நிறைய விசயங்களில் விளம்பரம்தான் வாழ்க்கை..

  ReplyDelete
 25. விக்கி உலகம் said...

  பகிர்வுக்கு நன்றி.

  அருமையான பணியிட அரசியல் அலசல்.

  என்னைபொறுத்தவரை யார் என்ன நினைப்பாங்க என்பது முக்கியமல்ல, நமக்கு ஒரு விஷயம் தெரியவேண்டும் என்றால் அடுத்தவர்களின் கேலிகளை கண்டுகொள்ளக்கூடாது.வெற்றி என்பது வெறும் அறிவு சார்ந்ததல்ல, சூழ்நிலையும் சேர்ந்தே முடிவுசெய்கிறது.////

  சரியான கருத்து நண்பரே.. எப்போ அடுத்தவங்களோட கேலியை மனசுல ஏத்திக்கிடறமோ.. அப்போ பின்தங்கிடுவோம்.. சரியான சூழ்நிலை இல்லாத இடத்தில் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும்.. அவர்கள் முன்னிலையில் முட்டாளாகவே தெரிவோம்..

  ReplyDelete
 26. வைகை said...

  உண்மைதான் பாபு! இந்த அரசியல் எல்லா நாட்டிலும் உண்டுதான் போல! ////

  அனைத்து விசயங்களையும் இருக்கு நண்பா.. ஆபிஸ் பாலிடிக்ஸ்ல கொஞ்சம் ஏமாந்தோம்னா.. முதுகுல குத்திடுவாங்க..

  ReplyDelete
 27. asiya omar said...

  அலுவலக அரசியல் ,தேவையான பகிர்வு.இப்ப உள்ள போட்டியில் நம்மை தனிப்படுத்தி காட்டுவது அவசியம தான். ////

  நன்றிங்க..

  ReplyDelete
 28. ஆமினா said...

  எல்லா விஷயங்களையும் ரொம்ப அழகா தெளீவா சொல்லிட்டீங்க சகோ

  வாழ்த்துக்கள் ////

  நன்றிங்க சகோ..

  ReplyDelete
 29. நா.மணிவண்ணன் said...

  நல்ல கட்டுரை நண்பா . நானும் நீங்கள் கூறி உள்ளது போல் நிறைய பிரச்சனைகள் சந்தித்திருக்கிறேன் . தயக்கம் நமது வெற்றிக்கான தடை என்பதை உணரவைத்து விட்டீர்கள் ////

  நன்றிங்க நண்பா..

  ReplyDelete
 30. அரசியல்ல சாதகமா பயன்படுத்த சொல்றீங்க.. ஹ்ம்ம்

  ReplyDelete
 31. தல அருமையா சொல்லிடீங்க ட்ரை பண்ண வேன்டியதுதா..

  ReplyDelete
 32. //பாதையில் நடக்கும் போது பாதசாரியாகவும்.. டூவிலர் ஓட்டும்போது அந்த மனநிலையிலும்.. ஃபோர் வீலர் ஓட்டும்போது அந்த மனநிலையில்தான் இருக்கனும்..
  //
  unmaiyana varikal

  ReplyDelete
 33. நல்ல அலசல்.... இப்படியும் செஞ்சிதான் பார்கலாமே!

  ReplyDelete
 34. எல்லாப் பதிவுகளும் நப நபா ன்னே இருக்கே, பேஷ் பேஷ்.
  பத்திரிக்கைக்காரங்க தேடி வரும் காலம் தெரியுது.

  ReplyDelete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
 36. Arun Prasath said...

  அரசியல்ல சாதகமா பயன்படுத்த சொல்றீங்க.. ஹ்ம்ம் ////

  சிம்பிள்.. :-)

  ReplyDelete
 37. புதிய மனிதா.. said...

  தல அருமையா சொல்லிடீங்க ட்ரை பண்ண வேன்டியதுதா.. ////

  நன்றிங்க...

  ReplyDelete
 38. ரமேஷ் கார்த்திகேயன் said...

  //பாதையில் நடக்கும் போது பாதசாரியாகவும்.. டூவிலர் ஓட்டும்போது அந்த மனநிலையிலும்.. ஃபோர் வீலர் ஓட்டும்போது அந்த மனநிலையில்தான் இருக்கனும்..
  //
  unmaiyana varikal ////

  நன்றிங்க..

  ReplyDelete
 39. அருண் பிரசாத் said...

  நல்ல அலசல்.... இப்படியும் செஞ்சிதான் பார்கலாமே! ////

  வாங்க அருண்.. ட்ரை பண்ணிப் பாருங்க..

  ReplyDelete
 40. அரபுத்தமிழன் said...

  எல்லாப் பதிவுகளும் நப நபா ன்னே இருக்கே, பேஷ் பேஷ்.
  பத்திரிக்கைக்காரங்க தேடி வரும் காலம் தெரியுது. ////

  ஹா ஹா ஹா.. அப்படிங்களா!!! உங்களுடைய பாராட்டு ரொம்ப சந்தோசமாக இருக்குங்க.. நன்றி..

  ReplyDelete
 41. Shantha kumar said...

  Nice Abdul!! ////

  நன்றிங்க சாந்தா..

  ReplyDelete
 42. பிரஷா said...

  உண்மையான கருத்து பாபு.... ////

  வாங்க பிரஷா..

  ReplyDelete
 43. அலுவலக அரசியலில் அடிச்சு கலக்கிட்டீங்க.அடுத்து பதிவுலக பாபுவின் பதிவுலக அரசியல் எப்போ?

  ReplyDelete
 44. சேக்காளி said...

  அலுவலக அரசியலில் அடிச்சு கலக்கிட்டீங்க.அடுத்து பதிவுலக பாபுவின் பதிவுலக அரசியல் எப்போ? ////

  ஹா ஹா ஹா..

  வருகைக்கு நன்றிங்க..

  ReplyDelete
 45. தல.. அருமையாகவும் தெளிவாகுவும் விளக்கியிருக்கீங்க.,!
  பாராட்டுகள். தொடர்ந்து கலக்குங்க..!

  ReplyDelete
 46. சமீபத்தில் jakkuboys நு ஒரு குறும்படம் பார்த்தது நியாபகத்தில் வருகிறது... நீங்க சொன்னதெல்லாம் சரி... எந்த புதிய வேலையிலும் முதலில் கொஞ்சம் சிரமமா தான் இருக்கும்... சீக்ரம் அங்க உள்ள , அந்த அரசியல கத்துக்கிட்ட எல்லாம் சரி ஆயிடும்...
  --
  மதுரை பாண்டி
  http://maduraipandi1984.blogspot.com

  ReplyDelete
 47. நண்பா இந்த பதிவை இப்பொழுதுதான் படிக்கிறேன், எப்படி மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை, மிக அருமையான பதிவு, இதில் உள்ள கருத்துக்கள் அனைத்துமே நானும் உணர்ந்ததுதான், ஆனால் மாற்ற வேண்டும் என முயற்சித்ததில்லை, உங்கள் பதிவை படித்த பிறகு முயற்சிக்க தோன்றுகிறது, மிகவும் நன்றி

  ReplyDelete
 48. இரவு வானம் said...

  நண்பா இந்த பதிவை இப்பொழுதுதான் படிக்கிறேன், எப்படி மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை, மிக அருமையான பதிவு, இதில் உள்ள கருத்துக்கள் அனைத்துமே நானும் உணர்ந்ததுதான், ஆனால் மாற்ற வேண்டும் என முயற்சித்ததில்லை, உங்கள் பதிவை படித்த பிறகு முயற்சிக்க தோன்றுகிறது, மிகவும் நன்றி /////

  என்னுடைய இந்தப் பதிவு உங்களுடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது ரொம்ப சந்தோசமாக இருக்குங்க நண்பா..


  பாராட்டுக்களுக்கு ரொம்ப நன்றி..

  ReplyDelete
 49. பிரவின்குமார் said...

  தல.. அருமையாகவும் தெளிவாகுவும் விளக்கியிருக்கீங்க.,!
  பாராட்டுகள். தொடர்ந்து கலக்குங்க..! ////

  ரொம்ப நன்றிங்க தல..

  ReplyDelete
 50. மதுரை பாண்டி said...

  சமீபத்தில் jakkuboys நு ஒரு குறும்படம் பார்த்தது நியாபகத்தில் வருகிறது... நீங்க சொன்னதெல்லாம் சரி... எந்த புதிய வேலையிலும் முதலில் கொஞ்சம் சிரமமா தான் இருக்கும்... சீக்ரம் அங்க உள்ள , அந்த அரசியல கத்துக்கிட்ட எல்லாம் சரி ஆயிடும்...////

  சரியான கருத்துங்க நண்பா.. வருகைக்கு நன்றிங்க..

  ReplyDelete