குழந்தைகளுக்கு பெரும்பாலும் இரண்டு விதமான அனுபவங்கள் கிடைக்குது.. ஒன்னு.. அதிகப்படியான கண்டிப்பு.. ரெண்டாவது அதிகப்படியான செல்லம்..
அதிகப்படியான கண்டிப்புடன் வளர்க்கப்படும் குழந்தைகள் வீட்ல ஒருமாதிரியும்.. வெளியில் ஒருமாதிரியும் நடந்துக்கிறாங்க.. அவர்கள் மேல் விதிக்கப்படும் அதிகப்படியான கண்டிப்பு.. வெளியில் அவர்களை தப்பு செய்யத் தூண்டுது.. வேனும்னே பெத்தவங்க சொல்றதுக்கு ஆப்போசிட்டாக வெளியில் நடக்க ஆரம்பிச்சடறாங்க.. அதுமட்டுமில்லாம.. பெத்தவங்க மேலயும் ஒருமாதிரியான வெறுப்பை வளர்த்துக்கறாங்க..
பெத்தவங்க தங்கள் வாழ்க்கையில் இருக்கற ஏதோ ஒரு வெறுப்பையோ.. அல்லது ஏதோ ஒரு அனுபவத்தையோ பிள்ளைகள் மேல் செயல்படுத்தறதுதான் இந்த அதிகப்படியான கண்டிப்புக்கு காரணமாக இருக்குதுன்னு நினைக்கிறேன்..
கொஞ்சம் வளர்ந்தபிறகு வாங்கின அடியெல்லாம் மரத்துப் போக ஆரம்பிச்சிடுச்சு அவனுக்கு.. ஒழுங்காப் படிக்கல.. ஆரம்பத்துல பெத்தவங்களுக்குத் தெரியாம அவங்களைத் திட்டிட்டு இருந்தவன்.. அப்புறம் நேருக்கு நேராகவே திட்ட ஆரம்பிச்சான்.. நண்பர்கள்கிட்டயும் மூர்க்கமாக நடந்துக்க ஆரம்பிச்சான்.. அப்புறம் என்கூட எல்லாம் சேரல.. 8 ஆம் வகுப்போடவோ, 10 ஆம் வகுப்போடவோ ஸ்கூலுக்குப் போறதை நிப்பாட்டிட்டு ஊர் சுத்த ஆரம்பிச்சிட்டான்.. இப்போ எங்க ஏரியாவுல அவனும் ஒரு ரெளடியாம்.. எப்பவாவது நான் எதிர்த்து வந்துட்டாக்கூட.. முகத்தைக்கூட பார்க்க மாட்டான்.. இப்படி அவன் மாற சிறுவயதில் வாங்கிய தேவையில்லாத அடியும்.. பாசமின்மையும்தானே காரணம்..
இந்த வகையில் வருகிற இன்னொரு கிளை வகைன்னு சொல்லலாம்.. என்னன்னா.. கூடபிறந்தவர்களை ஒப்பிட்டோ.. பக்கத்து வீட்டுப் பிள்ளைகளை ஒப்பிட்டோ திட்டறது.. பார் அவன் எவ்வளவு நல்லா படிக்கறான்.. எவ்வளவு ஆக்டிவா இருக்கான்.. அப்படி இப்படின்னு கம்பேர் பண்ணித் திட்டறது.. காம்பேரிசன்ல வர்ற தன்னோட சகோதரனோ அல்லது பக்கத்து வீட்டுப் பையனோ.. திட்டுவாங்கற பையனோட வெறுப்புக்கு ஆளாகறாங்க.. அவனுக்கு என்ன திறமை இருக்குன்னு பார்த்து அதை செய்ய மறுக்கறாங்க நிறையப் பேர்.. அவனுக்கு புரிஞ்சுக்கறதுல கஷ்டம் இருக்கலாம்.. வேற ஏதாவது மனசுல குறை இருக்கலாம்.. அதையெல்லாம் ஆராயறதில்ல.. அடிக்கறது.. சூடு வைக்கறதுன்னு பண்றதால அந்தக் குழந்தைகள்.. மேலும் மந்தமாகிடறாங்க..
நெக்ஸ்ட்.. அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள்..
ஒரே பிள்ளை.. ரொம்ப நாள் கழிச்சுப் பிறந்த குழந்தை.. அப்படி இப்படின்னு பல ரீசன்ஸ்னால குழந்தைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து வளர்க்கப்படறாங்க.. செல்லம் குடுக்கறதுனா என்ன?.. குழந்தைகள் பண்ற தப்புகளை அந்த நேரங்கள்ல கண்டுக்காம விட்டுடறது.. தேவையில்லாத பொருட்களைக் கேக்கும்போதும் வாங்கி வாங்கிக் கொடுத்தடறது.. இந்த மாதிரி பல விசயங்கள் இருக்கு..
இப்போ இருக்கற குழந்தைகள் பெரும்பாலும் பெத்தவங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடறதைப் பார்க்க முடியுது (இதான் பேர்சொல்லும் பிள்ளையோ.. :-)).. பாசத்துல சும்மா விளையாட்டுக்கு கூப்பிடறது வேற.. ஆனால் பழக்கமாகவே இருக்கு.. மற்றவர்களை பட்டப்பெயர் சூட்டிக் கூப்பிட சொல்லிப் பெற்றவர்களே சொல்லிக் கொடுக்கறதையும் பார்க்க முடியுது.. விளையாட்டுக்கு செய்ற இந்தப் பழக்கம் எல்லாம் இடத்துலயும் தொடரும்னு மறந்துடறாங்க இவங்க..
என் சொந்தக்காரப் பையன் ஒருவன்.. பயங்கர செல்லம்.. கேட்டது உடனே வந்தே தீரனும்.. அம்மாவை பேர் சொல்லித்தான் கூப்பிடறான்.. சட் சட்டுன்னு அடிச்சிடறான்.. இதைவிட வெளியிடங்கள்ல அவன் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்துட்டால்.. அவன் வைச்சிருக்கற பொருளைவிட பெட்டரா அது இருந்துட்டா நைசா உடைச்சிட்டு வந்திடறான்.. அவன் வந்தாலே எல்லாம் வீட்ல அலர்ட் ஆயிடுவோம்.. முதல்ல அவங்க வீட்ல சொல்லிப் பார்த்தோம்.. செல்லமாம்.. கண்டுக்கவே மாட்டேங்கறாங்க.. இதெல்லாம் சின்னத் தப்புகளாக இருந்தாலும்.. குழந்தையிலேயே கவனிக்கனும் இல்லையா..
எங்க வீடு சொல்லப்போனா.. ஒருமாதிரி கூட்டுக்குடும்பம் ஸ்டைல்தான்.. 3 மாமா, 2 சித்தி அப்படின்னு எல்லாருடைய குடும்பங்களும் ஒன்னாவே இருக்கோம்.. மேனேஜ்மெண்ட் மட்டும் தனித்தனி.. வீட்ல ஏஜ் வாரியாக நிறையக் குட்டீஸ்கள் இருக்குதுங்க.. எப்பவும் கயமுய.. கயமுயன்னு ஒரே அலப்பறையாகத்தான் இருக்கும்.. வீட்டுக்குப் போனா.. நேரம் போறதே தெரியாது.. :-)
ஒருமுறை என்னுடைய மாமாவோட மகனும்.. சித்தியோட மகனும் பேசிட்டு இருந்தானுங்க.. ரெண்டு பயலுகளும் 2வது படிக்கறானுங்க.. ஒருத்தன் டேய்.. இப்போ நாம படிக்கற ஸ்கூல் எனக்குப் பிடிக்கலைடா.. நாம பேசாம அக்ஷயா ஸ்கூல்ல சேர்ந்துக்கலாம் என்ன சொல்றன்னு கேக்கறான்.. இன்னொருத்தன்.. நானும் அதைத்தாண்டா யோசிச்சுட்டு இருக்கேன் அப்படின்னு டாக் போயிட்டு இருந்தது..
நான் இடையில போய் ஏங்கடா.. அந்த ஸ்கூல்ல படிக்க வைக்க காசு நிறைய வேனுமேடா.. உங்கப்பா எப்படிடா கட்டுவார்னு கேட்டா.. இல்லண்ணா.. அப்பா என்னை ரொம்பக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கறதாகச் சொன்னார்.. அதனால இந்த ஸ்கூலுக்கும் கஷ்டப்பட்டு பணம் கட்டி படிக்க வைச்சிடுவார் அப்படிங்கறான்.. எப்படிப் பாருங்க.. :-).. சரிதாண்டான்னு சிரிச்சுட்டே அவனுங்க பேச்சுகளை கவனிச்சுட்டு இருந்தேன்..
என்னோட ரெண்டாவது மாமாவுக்கு இரண்டு பசங்க.. ஒருத்தன் இப்போ 1வது படிக்கறான்.. இன்னொருத்தன் இப்போதான் எல்.கே.ஜி. படிக்கறான்.. சின்னவனுக்கு எப்பவும் எதுவுமே அவன் அண்ணனுக்கு கிடைக்கறதுக்கு முன்னாடியே கிடைக்கனும்.. ஒருமுறை பெரியவன்.. ஏம்மா எனக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைப்பீங்கன்னு கேக்கறான்.. ஏண்டா மகனே!! உடனே பண்ணிடலாம்ண்டான்னு சிரிச்சுட்டே சொன்னா.. உடனே எனக்குத்தான் முதல்ல கல்யாணம் பண்ணனும்னு சின்னவன் அழுக ஆரம்பிச்சிட்டான்.. அவனை அடக்கவே முடியல.. ஒரே சிரிப்பு..
இந்தமாதிரி பலவிசயங்கள்.. :-).. சொல்லிட்டே போகலாம்..
இந்த மாதிரி நிறைய அறிவாளித்தனமான பேச்சுகள் இப்பவே குழந்தைகள்கிட்ட.. டிவி சேனல்களைப் பார்த்து நிறைய தெரிஞ்சுக்கறாங்க.. இந்தமாதிரி எல்லாக் குட்டீஸ்களும் பண்ற சேட்டைகளைப் பார்த்துட்டே இருக்கலாம்..
குழந்தைகள் வளர்ப்புங்கறது பெரிய கலைதான்.. ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு டேலண்டோட.. சூழ்நிலையைப் பொருத்து அவங்களோட குணாதியங்கள் நிர்ணயிக்கப்படுது.. நல்லபடியாக ட்யூன் பண்ணி வளர்க்க வேண்டியது நம்ம கையில இருக்கு இல்லையா.. :-)
அருமையா குழந்தை வளர்ப்ப பத்தி சொல்லி இருக்கீங்க.
ReplyDeleteநான் கூட இதுபோன்ற ஒரு பதிவை தயார் செய்து வருகிறேன் பலே பாண்டியாவின் தொடர்பதிவை தொடர. உங்களுடைய பதிவு கொஞ்சம் தூண்டுதலாக இருக்கும்.
VADAI VADAI YENAKE
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு நண்பரே!
ReplyDelete//குழந்தைகள் வளர்ப்புங்கறது பெரிய கலைதான்.. ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு டேலண்டோட.. சூழ்நிலையைப் பொருத்து அவங்களோட குணாதியங்கள் நிர்ணயிக்கப்படுது.. நல்லபடியாக ட்யூன் பண்ணி வளர்க்க வேண்டியது நம்ம கையில இருக்கு இல்லையா.. :-) //
உண்மையான உண்மை!
நம்மளோட மன நிலைக்கு ஜீன்ஸ் கூட காரணம்ன்னு சொல்றாங்க பாபு சார்.... பாதி பாதி, வளர்ப்பு, அண்ட் ஜீன்ஸ்
ReplyDeleteஅருமையா குழந்தை வளர்ப்ப பத்தி சொல்லி இருக்கீங்க.
ReplyDeleteதெளிவா சொல்லியிருக்கீங்க அருமை நண்பரே
ReplyDeleteகட்டுரை நல்லா இருக்கு... நல்லா உணர்ந்து எழுதி இருக்கீங்க .. பெரும்பாலான வீட்ல நீங்க சொல்றது தான் நடந்துகிட்டு இருக்கு... இன்னும் எங்க வீட்ல என்னையும் , என் தம்பியையும் , எதிர்த்த வீட்டு பையனோட compare பண்ணிட்டு தான் இருக்காங்க...
ReplyDelete--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
நல்லா பதிவு வாழ்த்துக்கள்...
ReplyDeleteVery nice... Keep it up... you are posting very good and Useful articles. Congrats.
ReplyDeleteNice! :-)
ReplyDelete>>>>நாம் குழந்தைகள் மேல அக்கறையையும்.. கண்டிப்பையும் சம அளவுல காமிச்சா நல்லதுன்னு நினைக்கிறேன்.. ஆனால் அடிச்சு வளர்க்கறது எப்பவுமே சரியில்ல..
ReplyDelete100 % correct
BABU, I THINK U R MA PSYCOLOGY..AM I RIGHT..? I AM WATCHING YR ALL POSTS
ReplyDeleteஅருமையா எழுதி இருக்கீங்க, குழந்தைகளோட உலகமே அன்பினால மட்டுமே கட்டப்பட்டது, அடியால அவங்களை திருத்த முடியாது, நான் கூட இதை பத்தி முன்னாடியே ஒரு பதிவு எழுதி இருந்தேன் :-)
ReplyDeleteஅருமையாக சொல்லிருக்கீங்க பாபு.பாராட்டுக்கள்.
ReplyDeleteTHOPPITHOPPI said...
ReplyDeleteஅருமையா குழந்தை வளர்ப்ப பத்தி சொல்லி இருக்கீங்க.
நான் கூட இதுபோன்ற ஒரு பதிவை தயார் செய்து வருகிறேன் பலே பாண்டியாவின் தொடர்பதிவை தொடர. உங்களுடைய பதிவு கொஞ்சம் தூண்டுதலாக இருக்கும்.////
கண்டிப்பாக எழுதுங்க.. என்னுடைய பதிவு உங்களுக்கு தூண்டுதலாக இருப்பது எண்ணி மகிழ்ச்சி..
பாராட்டுக்கு நன்றிங்க நண்பரே..
abbeys said...
ReplyDeleteVADAI VADAI YENAKE///
வடை மட்டும் வாங்கிட்டு எங்க போனீங்க.. :-)
நண்பா அற்புதமான அதே சமயத்தில் அவசியமான பதிவும் கூட ...
ReplyDeleteவாழ்த்துக்கள்
எஸ்.கே said...
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு நண்பரே!
//குழந்தைகள் வளர்ப்புங்கறது பெரிய கலைதான்.. ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு டேலண்டோட.. சூழ்நிலையைப் பொருத்து அவங்களோட குணாதியங்கள் நிர்ணயிக்கப்படுது.. நல்லபடியாக ட்யூன் பண்ணி வளர்க்க வேண்டியது நம்ம கையில இருக்கு இல்லையா.. :-) //
உண்மையான உண்மை!////
நன்றிங்க எஸ்.கே..
Arun Prasath said...
ReplyDeleteநம்மளோட மன நிலைக்கு ஜீன்ஸ் கூட காரணம்ன்னு சொல்றாங்க பாபு சார்.... பாதி பாதி, வளர்ப்பு, அண்ட் ஜீன்ஸ்////
ஜீன்ஸ் மேட்டர் வர்றதெல்லாம் டீன் ஏஜஸ்லதான் இல்லைங்களா அருண்.. அதுக்கு முன்னாடியே குழந்தைகளோட பேசிக் கேரக்டர் டிசைட் ஆயிடுது..
Speed Master said...
ReplyDeleteஅருமையா குழந்தை வளர்ப்ப பத்தி சொல்லி இருக்கீங்க.///
நன்றிங்க..
மாணவன் said...
ReplyDeleteதெளிவா சொல்லியிருக்கீங்க அருமை நண்பரே///
நன்றிங்க..
மதுரை பாண்டி said...
ReplyDeleteகட்டுரை நல்லா இருக்கு... நல்லா உணர்ந்து எழுதி இருக்கீங்க .. பெரும்பாலான வீட்ல நீங்க சொல்றது தான் நடந்துகிட்டு இருக்கு... இன்னும் எங்க வீட்ல என்னையும் , என் தம்பியையும் , எதிர்த்த வீட்டு பையனோட compare பண்ணிட்டு தான் இருக்காங்க...////
இப்பவும் உங்களுக்கு அதுபோல் கம்பேர் பண்றாங்களா.. கஷ்டம்தாங்க..
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteநல்லா பதிவு வாழ்த்துக்கள்...///
நன்றிங்க..
M.Senthil said...
ReplyDeleteVery nice... Keep it up... you are posting very good and Useful articles. Congrats.////
நன்றிங்க செந்தில்.. தொடர்ந்து வந்து படிங்க.. நன்றி.. :-)
ஜீ... said...
ReplyDeleteNice! :-)///
நன்றி..
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>>>நாம் குழந்தைகள் மேல அக்கறையையும்.. கண்டிப்பையும் சம அளவுல காமிச்சா நல்லதுன்னு நினைக்கிறேன்.. ஆனால் அடிச்சு வளர்க்கறது எப்பவுமே சரியில்ல..
100 % correct///
கரெக்ட்.. :-)
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteBABU, I THINK U R MA PSYCOLOGY..AM I RIGHT..? I AM WATCHING YR ALL POSTS////
ஹா ஹா ஹா.. சைக்காலஜி எல்லாம் படிக்கலைங்க செந்தில்குமார்.. எல்லாம் அனுபவங்களை வைச்சிதான் எழுதறேன்.. நன்றிங்க..
இரவு வானம் said...
ReplyDeleteஅருமையா எழுதி இருக்கீங்க, குழந்தைகளோட உலகமே அன்பினால மட்டுமே கட்டப்பட்டது, அடியால அவங்களை திருத்த முடியாது, நான் கூட இதை பத்தி முன்னாடியே ஒரு பதிவு எழுதி இருந்தேன் :-)/////
கரெக்டான வார்த்தைகள் நண்பா..
நீங்களும் இதுபற்றி ஒரு பதிவு எழுதியிருக்கீங்களா.. ரொம்ப சந்தோசங்க நண்பா..
asiya omar said...
ReplyDeleteஅருமையாக சொல்லிருக்கீங்க பாபு.பாராட்டுக்கள். ////
நன்றிங்க..
அரசன் said...
ReplyDeleteநண்பா அற்புதமான அதே சமயத்தில் அவசியமான பதிவும் கூட ...
வாழ்த்துக்கள் ///
நன்றிங்க அரசன்..
உங்கள் பதிவுகள் அனைத்தும் தேவையான பதிவுகளே.
ReplyDeleteபழையதை தேடிப் படிக்கும் நேரமில்லை, அவ்வப்போது
நல்ல பதிவுகளை மீள்ஸ் செய்யுங்களேன்.
//சட் சட்டுன்னு அடிச்சிடறான்.. இதைவிட வெளியிடங்கள்ல அவன் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்துட்டால்.. அவன் வைச்சிருக்கற பொருளைவிட பெட்டரா அது இருந்துட்டா நைசா உடைச்சிட்டு வந்திடறான்.. //
ReplyDeleteஅட பாவமே , அத எடுத்துட்டு வந்தாலும் கூட சரி பொருள் போனாலும் அவன கிட்டவாவது இருக்குதுல அப்படின்னு சந்தோஷ படலாம் .. ஆனா ஒடச்ச எப்படி சந்தோஷ படுறது ?!
// ஏண்டா மகனே!! உடனே பண்ணிடலாம்ண்டான்னு சிரிச்சுட்டே சொன்னா.. உடனே எனக்குத்தான் முதல்ல கல்யாணம் பண்ணனும்னு சின்னவன் அழுக ஆரம்பிச்சிட்டான்.. அவனை அடக்கவே முடியல.. ஒரே சிரிப்பு.. ///
ReplyDeleteஹா ஹா .. சில குழந்தைகள் அப்படித்தாங்க , எங்க ஊர்ல இரண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு பெரியவர் ஒரு குழந்தை கிட்ட என்னைய கல்யாணம் பண்ணிகிரிய அப்படின்னு கேட்டதுக்கு நான் இன்னும் பள்ளிக்கூடம் போயிட்டு இருக்கேனுன்களே அப்படின்னு சொல்லுச்சாம் .. அந்த மாதிரி நிறைய சிரிப்பு இருக்கு .. குழந்தை வளர்ப்பு பத்தி ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க ..!! அடிச்சு சொல்லுறத விட அன்ப சொன்னதான் குழந்தைகள் ஏற்றுக்கொள்வார்கள் .. ஆனா சில விசயங்களில் கொஞ்சம் கண்டிப்பும் வேணும் !!
அருமையான பதிவு பாபு..இப்போ உள்ள ஜெனரேசன் பசங்க ரொம்ப cute ...எதுனாலும் சீக்கிரம் புரிஞ்சுக்கிறாங்க...அது தான் சில நேர சிக்கல்களும் கூட...ஒரு friend ஆ அவங்களை அப்ப்ரோச் பண்றது தான் ரொம்பவே பெஸ்ட்...அதிக கண்டிப்பில் உங்கள் பள்ளி தோழன் வாழ்க்கை திசை மாறியது கொஞ்சம் வருத்தம் தான்...நல்ல விழிப்புணர்வு பகிர்வு சகோ....
ReplyDeleteஅரபுத்தமிழன் said...
ReplyDeleteஉங்கள் பதிவுகள் அனைத்தும் தேவையான பதிவுகளே.
பழையதை தேடிப் படிக்கும் நேரமில்லை, அவ்வப்போது
நல்ல பதிவுகளை மீள்ஸ் செய்யுங்களேன்./////
உங்களது வார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நண்பரே.. கண்டிப்பாக மீள்பதிவிடுகிறேன்.. நன்றிங்க..
கோமாளி செல்வா said...
ReplyDelete//சட் சட்டுன்னு அடிச்சிடறான்.. இதைவிட வெளியிடங்கள்ல அவன் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்துட்டால்.. அவன் வைச்சிருக்கற பொருளைவிட பெட்டரா அது இருந்துட்டா நைசா உடைச்சிட்டு வந்திடறான்.. //
அட பாவமே , அத எடுத்துட்டு வந்தாலும் கூட சரி பொருள் போனாலும் அவன கிட்டவாவது இருக்குதுல அப்படின்னு சந்தோஷ படலாம் .. ஆனா ஒடச்ச எப்படி சந்தோஷ படுறது ?!////
அதானே.. அப்படியாவது செய்தாலாவது திருப்தி பட்டுக்கலாம்.. :-)
கோமாளி செல்வா said...
ReplyDelete// ஏண்டா மகனே!! உடனே பண்ணிடலாம்ண்டான்னு சிரிச்சுட்டே சொன்னா.. உடனே எனக்குத்தான் முதல்ல கல்யாணம் பண்ணனும்னு சின்னவன் அழுக ஆரம்பிச்சிட்டான்.. அவனை அடக்கவே முடியல.. ஒரே சிரிப்பு.. ///
ஹா ஹா .. சில குழந்தைகள் அப்படித்தாங்க , எங்க ஊர்ல இரண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு பெரியவர் ஒரு குழந்தை கிட்ட என்னைய கல்யாணம் பண்ணிகிரிய அப்படின்னு கேட்டதுக்கு நான் இன்னும் பள்ளிக்கூடம் போயிட்டு இருக்கேனுன்களே அப்படின்னு சொல்லுச்சாம் .. அந்த மாதிரி நிறைய சிரிப்பு இருக்கு .. குழந்தை வளர்ப்பு பத்தி ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க ..!! அடிச்சு சொல்லுறத விட அன்ப சொன்னதான் குழந்தைகள் ஏற்றுக்கொள்வார்கள் .. ஆனா சில விசயங்களில் கொஞ்சம் கண்டிப்பும் வேணும் !!////
நீங்கள் சொல்வது சரிதாங்க செல்வா.. சிலவிசயங்களில் கண்டிப்புடந்தான் நடந்துக்கனும்.. பாராட்டுக்கு நன்றிங்க..
ஆனந்தி.. said...
ReplyDeleteஅருமையான பதிவு பாபு..இப்போ உள்ள ஜெனரேசன் பசங்க ரொம்ப cute ...எதுனாலும் சீக்கிரம் புரிஞ்சுக்கிறாங்க...அது தான் சில நேர சிக்கல்களும் கூட...ஒரு friend ஆ அவங்களை அப்ப்ரோச் பண்றது தான் ரொம்பவே பெஸ்ட்...அதிக கண்டிப்பில் உங்கள் பள்ளி தோழன் வாழ்க்கை திசை மாறியது கொஞ்சம் வருத்தம் தான்...நல்ல விழிப்புணர்வு பகிர்வு சகோ....////
கரெக்டாக சொன்னீங்க ஆனந்தி. இப்போ இருக்கற பசங்க விளையாடறதை விட.. நிறைய டிவி பார்க்கறாங்க.. அதனால நல்லா உலக நடப்புகளைத் தெரிஞ்சுக்கிட்டு.. குழந்தையிலயே நிறைய கேள்விகள் கேக்க ஆரம்பிச்சிடறாங்க..
பாராட்டுக்கு நன்றிங்க..
குழந்தை வளர்ப்பு பற்றிய தங்களின் அலசல் அருமை . இதை வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் சில மாற்றங்கள் ஏற்படுவது திண்ணம்
ReplyDelete!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
ReplyDeleteகுழந்தை வளர்ப்பு பற்றிய தங்களின் அலசல் அருமை . இதை வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் சில மாற்றங்கள் ஏற்படுவது திண்ணம் ////
பாராட்டுக்கு நன்றிங்க சங்கர்..
குழந்தை வளர்ப்பு பத்தி ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க
ReplyDeleteசூப்பர்
வாழ்த்துக்கள்
உண்மையில் பல பெரியோர்களுக்கு மனப்பிறழ்வு எளிதில் ஏற்பட்டு விடுகிறது.
ReplyDeleteஅதை தங்கள் குழந்தையின் மேல் காட்டி விடுகின்றனர்....அறிவு வளர்ந்தும் குழந்தையின் அன்பை கிடைக்கபெராத முட்டாள்கள்.
இப்ப உள்ள சூழ்நிலைக்கு இது தேவையான பதிவு. எடுத்துக் கொண்ட விஷயத்தை மிகச்சீராய் எடுத்து கையாண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள் சகோ.
ReplyDeleteசூப்பரான பதிவுங்க.... பாயிண்ட்ஸ் நோட் பண்ணிக்கிறேன்.....
ReplyDeleteகுட்டீஸ் போட்டோஸ், ரொம்ப நல்லா இருக்குதுங்க... எல்லாம் உங்கள் வீட்டு மழலை பட்டாளம்தானா?
அருமையான எழுத்து நடை, நல்ல கட்டுரை பாபு. தங்கள் எழுத்துக்கள் தரம் கூடி வருகின்றன.
ReplyDeleteகொஞ்சம் லேட்டா வந்ததுக்கு மன்னிக்கணும் எப்போதுமே பின்னிரவு, அதிகாலை நேரங்கிளிலேயே பதிவுகளை படிப்பேன்...
ReplyDelete// சின்ன வயசுல குழந்தைகள் வளர்க்கப்படற விதமே அவங்களோட கேரக்டரை டிசைட் பண்ணுது.. //
ReplyDeleteமுதல் வரியிலேயே மனதை ஈர்த்துவிட்டீர்கள்...
ஆமினா said...
ReplyDeleteகுழந்தை வளர்ப்பு பத்தி ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க
சூப்பர்
வாழ்த்துக்கள்////
நன்றிங்க ஆமினா..
விக்கி உலகம் said...
ReplyDeleteஉண்மையில் பல பெரியோர்களுக்கு மனப்பிறழ்வு எளிதில் ஏற்பட்டு விடுகிறது.
அதை தங்கள் குழந்தையின் மேல் காட்டி விடுகின்றனர்....அறிவு வளர்ந்தும் குழந்தையின் அன்பை கிடைக்கபெராத முட்டாள்கள்.////
உண்மை நண்பரே.. சிலர் அவங்களோட மன அழுத்தங்களை பிள்ளைகள் மேல் காமிச்சு.. பிள்ளைகள் வாழ்க்கையை கெடுக்கறாங்க..
எம் அப்துல் காதர் said...
ReplyDeleteஇப்ப உள்ள சூழ்நிலைக்கு இது தேவையான பதிவு. எடுத்துக் கொண்ட விஷயத்தை மிகச்சீராய் எடுத்து கையாண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள் சகோ.///
நன்றிங்க சகோ..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅருமையான எழுத்து நடை, நல்ல கட்டுரை பாபு. தங்கள் எழுத்துக்கள் தரம் கூடி வருகின்றன.////
ரொம்ப நன்றிங்க நண்பரே..
Philosophy Prabhakaran said...
ReplyDeleteகொஞ்சம் லேட்டா வந்ததுக்கு மன்னிக்கணும் எப்போதுமே பின்னிரவு, அதிகாலை நேரங்கிளிலேயே பதிவுகளை படிப்பேன்...////
உங்களுடைய வருகைக்கு மகிழ்ச்சி பிரபாகரன்..
Philosophy Prabhakaran said...
// சின்ன வயசுல குழந்தைகள் வளர்க்கப்படற விதமே அவங்களோட கேரக்டரை டிசைட் பண்ணுது.. //
முதல் வரியிலேயே மனதை ஈர்த்துவிட்டீர்கள்...///
பாராட்டுக்கு நன்றிங்க பிரபாகரன்..
Chitra said...
ReplyDeleteசூப்பரான பதிவுங்க.... பாயிண்ட்ஸ் நோட் பண்ணிக்கிறேன்.....
குட்டீஸ் போட்டோஸ், ரொம்ப நல்லா இருக்குதுங்க... எல்லாம் உங்கள் வீட்டு மழலை பட்டாளம்தானா?////
ஆமாங்க சித்ரா.. எல்லாமே நம்ம வீட்டுக் குட்டிஸ்தான்..
பாராட்டுக்கு நன்றிங்க..
சொல்லவேண்டிய விசயத்த சும்மா சிம்ப்ளா நச்சுன்னு சொல்லிடீங்க
ReplyDeleteநண்பா .நல்ல அலசல் கட்டுரை . கடேசியில் வந்து வாழ்த்து தெரிவிக்கணும் என்பதற்காக கூறவில்லை .
ReplyDeleteFARHAN said...
ReplyDeleteசொல்லவேண்டிய விசயத்த சும்மா சிம்ப்ளா நச்சுன்னு சொல்லிடீங்க////
நன்றிங்க FARHAN..
நா.மணிவண்ணன் said...
ReplyDeleteநண்பா .நல்ல அலசல் கட்டுரை . கடேசியில் வந்து வாழ்த்து தெரிவிக்கணும் என்பதற்காக கூறவில்லை.////
பாராட்டுக்கு நன்றிங்க மணிவண்ணன்..
அந்த மொட்டைமாடியில நின்னுகிட்டு பேண்ட் பாக்கெட்ல கையைவிட்டுட்டு நிக்குற புகைப்படத்தின் கலரிங் என் சின்னவயசு நியாபகங்களை தட்டி எழுப்புது.. இதே கலர்லதான் என் பழைய புகைப்படங்கள் எல்லாமும் இருக்கும்.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி.. அருமை நண்பா..
ReplyDeleteகவிதை காதலன் said...
ReplyDeleteஅந்த மொட்டைமாடியில நின்னுகிட்டு பேண்ட் பாக்கெட்ல கையைவிட்டுட்டு நிக்குற புகைப்படத்தின் கலரிங் என் சின்னவயசு நியாபகங்களை தட்டி எழுப்புது.. இதே கலர்லதான் என் பழைய புகைப்படங்கள் எல்லாமும் இருக்கும்.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி.. அருமை நண்பா.. ////
ரசித்துப் பாராட்டியதற்கு நன்றிங்க நண்பா.. அந்தப் புகைப்படத்தில் இருப்பது நான்தான்.. :-)
நல்ல அலசல். "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.............." வரிகள் நினைவுக்கு வருகின்றன.
ReplyDeleteஸ்ரீராம். said...
ReplyDeleteநல்ல அலசல். "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.............." வரிகள் நினைவுக்கு வருகின்றன. ////
உண்மைதான்.. வளர்ப்புதான் ஒவ்வொருவரையும் மாற்றுகிறது.. :-)
அருமையான பதிவு...
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்...
தோழி பிரஷா said...
ReplyDeleteஅருமையான பதிவு...
பொங்கல் வாழ்த்துக்கள்... ////
நன்றிங்க பிரஷா.. உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
ரொம்ப உணர்ந்து... உள்வாங்கி தெளிவா எழுதியிருக்கிங்க.... இது எனக்கு பயன்படும் ... நன்றி .
ReplyDeleteஉங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.
அந்த ரெண்டாவது படம் நீங்கதானேங்? சைலண்ட்டா உள்ள விட்டுட்டா தெரியாதுன்னு நினச்சிட்டீங்களா?? ஹெ ஹெ....என் கூடயும் பழனிலருந்து ஒரு காலேஜ் மேட், அவன் பேரும் பாபுதான். சரி ஜாலியான ஆளு, அதே நேரம் மேனேஜ்மெண்ட்டுல மோஸ்ட் வாண்ட்டெட் கோஷ்டி. உங்க பழனி பதிவை படித்ததும் ஞாபகம் வந்தது.. :) உங்க ஊர்க்காரங்க எல்லாமே ஒரே மாதிரியா?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//
ReplyDeleteகுழந்தைகள் வளர்ப்புங்கறது பெரிய கலைதான்.. ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு டேலண்டோட.. சூழ்நிலையைப் பொருத்து அவங்களோட குணாதியங்கள் நிர்ணயிக்கப்படுது.. நல்லபடியாக ட்யூன் பண்ணி வளர்க்க வேண்டியது நம்ம கையில இருக்கு இல்லையா.. :-)
//
அக்மார்க் உண்மை ♥♥♥
டி.வி. நிகழ்ச்சிகளில் சில பெற்றோர்கள் செய்யும் கொடுமைகள் தாங்கமுடியவில்லை!!
ReplyDeleteசி. கருணாகரசு said...
ReplyDeleteரொம்ப உணர்ந்து... உள்வாங்கி தெளிவா எழுதியிருக்கிங்க.... இது எனக்கு பயன்படும் ... நன்றி .
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.////
நன்றி நண்பரே.. உங்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
அன்னு said...
ReplyDeleteஅந்த ரெண்டாவது படம் நீங்கதானேங்? சைலண்ட்டா உள்ள விட்டுட்டா தெரியாதுன்னு நினச்சிட்டீங்களா??////
சூப்பருங்க அன்னு.. யாருமே கண்டுபிடிக்கலைன்னு நினைச்சேன்.. பாராட்டுக்கள் உங்களுக்கு..
//// ஹெ ஹெ....என் கூடயும் பழனிலருந்து ஒரு காலேஜ் மேட், அவன் பேரும் பாபுதான். சரி ஜாலியான ஆளு, அதே நேரம் மேனேஜ்மெண்ட்டுல மோஸ்ட் வாண்ட்டெட் கோஷ்டி. உங்க பழனி பதிவை படித்ததும் ஞாபகம் வந்தது.. :) உங்க ஊர்க்காரங்க எல்லாமே ஒரே மாதிரியா?///
ஒரேமாதிரியானா?.. நீங்க என்ன டோன்ல கேக்கறீங்கன்னே புரியலையே.. :-)
Philosophy Prabhakaran said...
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...
நன்றிங்க பிரபாகரன்.. உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
ம.தி.சுதா said...
ReplyDeleteஇனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.///
உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
பலே பிரபு said...
ReplyDelete//
குழந்தைகள் வளர்ப்புங்கறது பெரிய கலைதான்.. ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு டேலண்டோட.. சூழ்நிலையைப் பொருத்து அவங்களோட குணாதியங்கள் நிர்ணயிக்கப்படுது.. நல்லபடியாக ட்யூன் பண்ணி வளர்க்க வேண்டியது நம்ம கையில இருக்கு இல்லையா.. :-)
//
அக்மார்க் உண்மை ♥♥♥///
வாங்க பலே பிரபு.. :-)
சிவகுமார் said...
ReplyDeleteடி.வி. நிகழ்ச்சிகளில் சில பெற்றோர்கள் செய்யும் கொடுமைகள் தாங்கமுடியவில்லை!!////
உண்மைதாங்க.. :-(