தனிமைச் சிறகுகள் அப்படிங்கற தலைப்புல.. சென்னை மற்றும் பெங்களூர்ல புதுசா வேலை தேடி வந்தப்போ எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி எழுதியிருந்தேன்.. அந்தப் பதிவுகளைப் படிக்கனும்னா.. கீழே இருக்கற லிங்கை கிளிக் பண்ணிப் பாருங்க..
தனிமைச் சிறகுகள் - முதல் பயணம்
தனிமைச் சிறகுகள் - பெங்களூர் பயணம்
இப்போதெல்லாம் படிச்சு முடிச்சு வர்ற இளைஞர்கள்.. தங்களோட வாழ்க்கை எப்படி இருக்கனும்னு முன்னாடியே டிசைட் பண்றாங்க.. ரொம்பத் தெளிவா இருக்காங்க.. காலேஜ்லயே வேலைன்னா எப்படி இருக்கும்.. அதற்கு மாணவர்கள் என்ன முயற்சிகள் எடுக்கனும்னு ட்ரைன் பண்ணியே அனுப்பறாங்க.. ஆனால்.. படிப்பு முடிச்சுட்டு எந்த வழியில போகனும்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கற இளைஞர்கள்ல நானும் ஒருவனா இருந்தேன்.. சரியா சொல்லனும்னா.. என்னுடைய தொழில் வாழ்க்கையை ஆரம்பத்துலயே தவறாக தேர்ந்தெடுத்துட்டேன்..
BPO.. வெளிநாடுகள்ல இருக்கற கம்பெனிகள்.. தங்களோட வேலைகளை.. இங்கே இருக்கற கம்பெனிகளுக்கு அனுப்பி.. நம்மகிட்ட குறைஞ்ச சம்பளத்துல வேலை வாங்கிக்கறாங்க.. இந்த இண்டஸ்ட்ரினால.. கண்டிப்பா பலருக்கு வேலை கிடைக்குதுதான்.. இப்போதைய சூழல்ல.. நிறைய பேருக்கு சோறு போடறது இந்த இண்டஸ்ட்ரிதான்.. ஆனால் ஒரு BPO கம்பெனில வேலைக்கு சேர்ந்ததுக்கு அப்புறம்.. வேலை செய்றவங்களோட எதிர்காலம் கேள்விக்குறிதான்.. ஏன் இப்படி சொல்றேன்னா.. கம்பெனிகள் தங்களோட வேலைக்கு தகுந்த மாதிரி.. தங்களோட வேலையாட்களை ட்ரைன் பண்ணிடுவாங்க.. அந்த வேலையை திருப்பி திருப்பி செய்துட்டே இருக்க வேண்டியதுதான்.. அந்தக் கம்பெனியை விட்டு வெளியே.. நல்ல வாய்ப்புகளைத் தேடிப் போகனும்னு நினைக்கறப்போ.. அதே வேலையை செய்ற மற்றொரு கம்பெனியைக் கண்டுபிடிக்கறது ரொம்பக் கஷ்டமாயிடும்.. வேற வேலைகளுக்கு போகலாம்னாலும்.. கம்ப்ளீட்டா Fresher ஆகத்தான் கன்ஷிடர் பண்ணுவாங்க.. முன்னே வாங்கிட்டு இருந்த சம்பளம் கிடைக்கறதே பெரிய பாடாயிடும்.. இந்த ஒரு காரணத்தாலயே பலர்.. என்ன பண்றதுன்னு முழிச்சுக்கிட்டு தொடர்ந்து ஒரே கம்பெனியில் வேலை செய்துட்டும் இருக்காங்க..
ஒரே கம்பெனியில் வேலை செய்றதும் ஈசியான விசயம் கிடையாது.. கம்பெனிக்கு உள்ளே நம்ம முன்னேற்றம் கண்டிப்பா இருக்கனும்.. தொழிலாளி, டீம் லீட், மேனேஜர்.. இந்த மாதிரி.. மூவ் ஆயிட்டே இருந்தா இதுவே நமக்கு நல்ல கேரியர்தான்.. ஆனால் ஏதோ காரணங்களுக்கா.. ஒரே பொசிசன்ல இருந்துட்டே இருந்தோம்னா.. ஒன்னு நமக்கு வேலை அலுத்துடும்.. இல்லைனா.. கம்பெனி சைடுல இருந்து ப்ரஷர் வரும்.. ஏன்னா.. வருசம் முடிஞ்சா.. நமக்கு கம்பெனியில் இருந்து ஊதிய உயர்வு குடுக்கனும் இல்லையா.. உதாரணத்துக்கு.. ஒரு வேலையை 10000 ரூபாயில் செய்து கொடுக்க ஆள் இருக்கும்போது.. அதே வேலையை அதிகப்படியான சம்பளம் குடுத்து வாங்கனும் யாரும் நினைக்க மாட்டாங்க.. மேனேஜ்மெண்ட் டேட்டிக்ஸ்.. :-)
எந்த முன்னேற்றமும் இல்லாம.. செத்த பாம்பு மாதிரி அடிவாங்கிட்டே இருக்கற ஆளுங்களும் இருக்காங்க.. அப்படி இருக்கறவங்களுக்கு வருசம் 500 ரூபாய் மாதிரி சம்பள உயர்வு கொடுத்து.. அவங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க மேனேஜ்மெண்ட்..
இங்கே BPO இண்டஸ்ட்ரி பத்தி தப்பா சொல்லனும் எண்ணம் இல்ல.. சுமார்.. 5 வருசம் நான் வேலை பார்த்துட்டு இருந்த இண்டஸ்ட்ரி.. அதோட பேக்ட் என்னன்னு சொல்லனும்னுதான் நினைக்கறேன்..
2006 ஆம் ஆண்டு..
என்னுடைய முன் அனுபவத்தை வைச்சு.. பார்ச்சூன் இன்ஃபோடெக் அப்படிங்கற கம்பெனியில் கொஞ்சம் நல்ல சம்பளத்துல வேலை கிடைச்சது.. புது கம்பெனி.. புது ப்ராஜெக்ட்.. அவங்களுக்கு நல்ல திறமையான ஆட்கள் தேவைப்பட்டாங்க.. நானும் சேர்ந்துட்டேன்..
பெஸ்ட் அவுட்புட் கொடுத்தா மட்டுமே.. ப்ராஜெக்ட்.. நிலைக்கும்ங்கற நிலைமை.. எங்களுடைய டீம்.. ரொம்ப அருமையாக இருந்தது.. எல்லாரும் பலியா வேலை பார்த்தோம்.. ப்ராஜெக்ட் முழுசா கைக்கு வந்துடுச்சு.. இப்போ வேலை சேஃப்.. :-)
வாய் இருக்கற புள்ளை பொழைச்சுக்கும்ங்கறது பழமொழி.. எல்லா விதமான வேலைகளுக்கும் பொருந்தும்.. இந்த வேலைக்கும்தான்.. 10 பேர் இருக்கற இடத்துல நம்மை முன்னிலை படுத்தனும்னா.. ஏதாவது செய்யனும்.. நான் பேசினேன்.. ப்ராஜெக்ட் பத்தி பலவிதமான டவுட்களைப் பத்தி.. பலர் கேக்கத் தயங்கிட்டு இருந்தப்போ.. நான் தைரியமா இது ஏன் அப்டி..இப்டின்னு கேள்வி கேட்டுட்டே இருந்தேன்... என்னுடைய கேள்விகளால மேனேஜ்மெண்டும்.. தெளிவான முடிவுகளை எடுக்க முடிஞ்சது.. எங்களுடைய உயர்வுக்கு நானும் ஒரு செங்கலாக இருந்தேன்.. அவ்ளோதான்.. :-)..
நம்முடைய வேலைக்கு மதிப்பு கிடைக்கறப்போ.. நம்முடைய வேலைத்திறன் அதிகரிக்கும்.. சந்தோசமாக வேலை செய்வோம்.. நானும் ரொம்ப சந்தோசமாக இருந்தேன்.. கொஞ்ச நாட்கள்லயே.. எங்கள்ல ஒருத்தரை.. அசிஸ்டெண்ட் டீம் லீடராக செலக்ட் பண்ண வேண்டிய கட்டாயம்.. என்னுடைய எதிர்பார்ப்பு பலிக்கல.. ரொம்பக் கஷ்டமாத்தான் இருந்தது.. ஆனாலும்.. நம்ம வேலையை எப்போதும் கரெக்டா செய்துட்டு இருந்தோம்னா.. அதுக்கான பலன் கண்டிப்பா இருக்கும்ங்கற பாலிசில தொடர்ந்து நல்ல அவுட்புட் கொடுத்துட்டே இருந்தேன்.. கொஞ்சம் லேட்டானாலும் ஒரு வருசத்துக்குள்ளேயே எனக்கும் பொசிசன் கிடைச்சிடுச்சு..
இப்போ தலைக்கணம் வந்துடுச்சு.. நம்ம இல்லைன்னா.. இந்த வேலை நடந்திருக்காது.. அந்த வேலை நடந்திருக்காதுன்னு நினைக்க ஆரம்பிச்சேன்.. எங்கேயுமே ஆரம்பத்தையே நினைச்சுட்டு இருந்தோம்னா.. அந்த இடத்தை விட்டு நகர முடியாதுங்கறது ரொம்ப சரிதான்.. நானும் அந்த இடத்தை விட்டு நகராம தப்பு செய்தேன்.. ஸ்மார்ட் ஒர்க்கர், திறமையான ஆள்னு மேனேஜ்மெண்ட்ல பேர் இருந்தாலும் அடுத்த பொசிசனுக்கு என்னால போக முடியல.. அதுக்கு முக்கிய காரணம்.. ஒருத்தர் அடுத்தடுத்த பொசிசனுக்கு முன்னேறும் போது.. நாம கடந்து வந்த பொசிசனை மனசுல வைச்சுட்டே இருக்கக்கூடாது இல்லையா.. நான் செய்துட்டு இருக்கற வேலைல ஒரு எம்ப்ளாயி என்ன கஷ்டப்படுவாங்கற எண்ணத்தை வைச்சுக்கிட்டு நான் என் டீமை வழிநடத்தினேன்.. சலுகைகள் கிடைச்சதால.. தலையில் ஏறி உட்கார்ந்தாங்க டீம் மெம்பர்ஸ்.. டீம் மெம்பர்ஸுக்கு ஃபேவரா இருக்காதன்னு.. என் நண்பன் சொல்லியும் கேக்காம விட்டுட்டேன்..
முதல் இரண்டு வருசங்கள் டாப் பெர்பாமராக இருந்தாலும்.. இந்தமாதிரி ஆக்டிவிட்டிஸ்னால.. என்னைக் கொண்டாடிட்டு இருந்த மேனேஜ்மெண்ட்கிட்ட கெட்டபெயர் வாங்க ஆரம்பிச்சேன்.. நிறைய வாய் பேசி என்னுடைய சுப்பீரியர்ஸை கவர்ந்த நான்.. ஒரு மீட்டிங்கில் நான் பேசின வாயாலா.. வாய்லயே அடிவாங்கினேன்.. :-).. சோ.. வாய் பேசினாலும்.. சூட்சமமா.. பார்த்துப் பேசனும்னு.. அதுக்கப்புறம் எனக்கு வந்த பாதிப்புகள் புரிய வைச்சது.. ஆனாலும் நடந்தது நடந்ததுதானே.. அப்போ இருந்த மனநிலைக்கு நான் செய்தது சரின்னு தோனினாலும்.. தப்பை ஏத்துக்க மனசு வரல.. வேலைல ஃபெர்பெக்டா இருந்ததால சேதாரம் பெரிசா இல்லை.. :-)..
வேலைச்சூழல்ல சுவர்களுக்கும் காது இருக்கும்.. யாரைப் பற்றி பேசினாலும்.. அது நேராக.. மேனேஜ்மெண்ட் காதுக்குள்ள பேசறமாதிரிதான்.. :-)..
இந்த மாதிரி அனுபவங்களுக்கு அப்புறம்தான்... நாம ஏன் இங்கே இருக்கோம்.. நமக்கு இருக்கற அறிவுக்கும் அழகுக்கும்.. சாஃப்ட்வேர்ல இல்ல வேலை பார்த்துட்டு இருக்கனும்னு தோனுச்சு.. அந்த முயற்சியில இறங்கினேன்.. எனக்கு கம்ப்யூட்டர் மேல மோகம் வர காரணமாக இருந்தவர்.. குரு (இது பேரு கிடையாது.. என் குருநாதர்னு சொல்ல வந்தேன்.. :-)).. அவர் எனக்கு ஹெல்ப் பண்ணினார்.. நிறைய சொல்லிக்கொடுத்தார்.. ரொம்ப நல்லாத்தான் போயிட்டு இருந்தது.. ஆனால் எல்லாம் ரெடிங்கற சூழல்ல.. எனக்கு கான்ஃபிடன்ஸ் போயிடுச்சு.. அதனால எனக்கு சொல்லிக்கொடுத்து அவருடைய உழைப்புகள்தான் வீணாச்சு.. :-( .. கண்டிப்பா வருந்தியிருப்பார்.. ஆனால் எப்பவுமே என்னைக் கோவிச்சுக்கிட்டதில்ல அவர்..
இப்படியெல்லாம் Front End-ல ஓடிட்டு இருந்தாலும் Back End -ல பெங்களூர் லைஃபை நல்லா என்ஜாய் பண்ணிட்டுத்தான் இருந்தேன்.. :-)..
(தொடரும்)
//நல்லா என்ஜாய் பண்ணிட்டுத்தான் இருந்தேன்.. :-).. //
ReplyDeleteதனிமைச் சிறகுகள் காதலில் ரெக்கை கட்டிப் பறந்ததா இல்லையா
அரபுத்தமிழன் said...
ReplyDelete//நல்லா என்ஜாய் பண்ணிட்டுத்தான் இருந்தேன்.. :-).. //
தனிமைச் சிறகுகள் காதலில் ரெக்கை கட்டிப் பறந்ததா இல்லையா ////
ஹா ஹா ஹா.. நல்ல கேள்வி.. :-).. இல்லை நண்பா..
வாய்தான் எல்லாத்துக்கும் காரணமா!:-)
ReplyDelete>>ஒருத்தர் அடுத்தடுத்த பொசிசனுக்கு முன்னேறும் போது.. நாம கடந்து வந்த பொசிசனை மனசுல வைச்சுட்டே இருக்கக்கூடாது இல்லையா.. நான் செய்துட்டு இருக்கற வேலைல ஒரு எம்ப்ளாயி என்ன கஷ்டப்படுவாங்கற எண்ணத்தை வைச்சுக்கிட்டு நான் என் டீமை வழிநடத்தினேன்.
ReplyDeleteபுதிய அனுபவம்...
>>வேலைச்சூழல்ல சுவர்களுக்கும் காது இருக்கும்.. யாரைப் பற்றி பேசினாலும்.. அது நேராக.. மேனேஜ்மெண்ட் காதுக்குள்ள பேசறமாதிரிதான்.. :-)..
ReplyDeleteம் உண்மைதான்.. பகலில் பக்கம் பார்த்து பேசு.. இரவில் அதுவும் பேசாதே... மாதிரிதான்..
பாபு.. உங்க அனுபவம் இளைஞர்களுக்கு ஒரு படிப்பினை. எனக்கும்..
மூன்று பகுதிகளும் சுவாரஸ்யம், நன்றாக இருந்தன
ReplyDeleteநல்ல பாடத்தை கொடுக்கும் அனுபவங்கள்...
ReplyDeleteஅருமையான தொடர்
ReplyDeleteநிறைய வாய் பேசி என்னுடைய சுப்பீரியர்ஸை கவர்ந்த நான்.. ஒரு மீட்டிங்கில் நான் பேசின வாயாலா.. வாய்லயே அடிவாங்கினேன்.. //ஹஹா
ReplyDeleteசில விசயங்கள்ல உங்களோட அனுபவங்கள் நிறைய பேருக்கு யூஸ் ஆகும், உள்ளது உள்ளபடியே எழுதியிருக்கீங்க, கண்டினியூ பண்ணுங்க..
ReplyDeleteபலவீனங்களையும் தைரியமா வெளிப்படையா சொல்றீங்க. நல்லது.
ReplyDeleteஅனுபவம் எழுத்துகளாய்...ஈசியாய் ரிலேட் செய்து கொள்ள முடிகிறது..அருமை சகா
ReplyDeleteநண்பா நல்லா சொல்லி இருக்கீங்க உண்மையிலேயே நெறைய பேருடைய நிலைமை இப்படித்தான் இருக்கு!
ReplyDelete///இப்படியெல்லாம் Front End-ல ஓடிட்டு இருந்தாலும் Back End -ல பெங்களூர் லைஃபை நல்லா என்ஜாய் பண்ணிட்டுத்தான் இருந்தேன்.. :-).. ///
ReplyDeleteஎன்ஜாய் என்னலாம் பண்ணீங்க அடுத்ததுல சொல்லுவீங்களா
எஸ்.கே said...
ReplyDeleteவாய்தான் எல்லாத்துக்கும் காரணமா!:-)////
ஹா ஹா ஹா.. ஆமாம் எஸ்.கே.. :-)
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>ஒருத்தர் அடுத்தடுத்த பொசிசனுக்கு முன்னேறும் போது.. நாம கடந்து வந்த பொசிசனை மனசுல வைச்சுட்டே இருக்கக்கூடாது இல்லையா.. நான் செய்துட்டு இருக்கற வேலைல ஒரு எம்ப்ளாயி என்ன கஷ்டப்படுவாங்கற எண்ணத்தை வைச்சுக்கிட்டு நான் என் டீமை வழிநடத்தினேன்.
புதிய அனுபவம்...///
வாங்க சி.பி..
சி.பி.செந்தில்குமார் said...
>>வேலைச்சூழல்ல சுவர்களுக்கும் காது இருக்கும்.. யாரைப் பற்றி பேசினாலும்.. அது நேராக.. மேனேஜ்மெண்ட் காதுக்குள்ள பேசறமாதிரிதான்.. :-)..
ம் உண்மைதான்.. பகலில் பக்கம் பார்த்து பேசு.. இரவில் அதுவும் பேசாதே... மாதிரிதான்..
பாபு.. உங்க அனுபவம் இளைஞர்களுக்கு ஒரு படிப்பினை. எனக்கும்.. ////
நன்றிங்க சி.பி..
WordsBeyondBorders said...
ReplyDeleteமூன்று பகுதிகளும் சுவாரஸ்யம், நன்றாக இருந்தன////
நன்றி நண்பா..
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteநல்ல பாடத்தை கொடுக்கும் அனுபவங்கள்...////
நன்றிங்க..
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteஅருமையான தொடர்///
நன்றிங்க சதீஷ்..
ஆர்.கே.சதீஷ்குமார் said...
நிறைய வாய் பேசி என்னுடைய சுப்பீரியர்ஸை கவர்ந்த நான்.. ஒரு மீட்டிங்கில் நான் பேசின வாயாலா.. வாய்லயே அடிவாங்கினேன்.. //ஹஹா
ஹா ஹா ஹா.. :-)
இரவு வானம் said...
ReplyDeleteசில விசயங்கள்ல உங்களோட அனுபவங்கள் நிறைய பேருக்கு யூஸ் ஆகும், உள்ளது உள்ளபடியே எழுதியிருக்கீங்க, கண்டினியூ பண்ணுங்க..///
பாராட்டுக்கு நன்றிங்க நண்பா.. தொடர்கிறேன்...
ஸ்ரீராம். said...
ReplyDeleteபலவீனங்களையும் தைரியமா வெளிப்படையா சொல்றீங்க. நல்லது.///
நன்றிங்க..
டக்கால்டி said...
ReplyDeleteஅனுபவம் எழுத்துகளாய்...ஈசியாய் ரிலேட் செய்து கொள்ள முடிகிறது..அருமை சகா////
நன்றி சகா.. பாராட்டுக்கு நன்றி..
விக்கி உலகம் said...
ReplyDeleteநண்பா நல்லா சொல்லி இருக்கீங்க உண்மையிலேயே நெறைய பேருடைய நிலைமை இப்படித்தான் இருக்கு!////
நன்றி நண்பா..
நா.மணிவண்ணன் said...
ReplyDelete///இப்படியெல்லாம் Front End-ல ஓடிட்டு இருந்தாலும் Back End -ல பெங்களூர் லைஃபை நல்லா என்ஜாய் பண்ணிட்டுத்தான் இருந்தேன்.. :-).. ///
என்ஜாய் என்னலாம் பண்ணீங்க அடுத்ததுல சொல்லுவீங்களா///
ஹா ஹா ஹா.. கண்டிப்பா சொல்றேங்க மணிவண்ணன்.. நன்றி..
உள்ளதை உள்ளபடி சொல்லிருக்கீங்க!
ReplyDeleteவேலைக்கு சேரப்போகும் எனக்கு ஒரு நல்ல தெளிவான அறிவுரை போல உள்ளது தங்கள் அனுபவம். தொடர்ந்து எழுதவும். வாசிக்க காத்திருக்கிறேன்.
ReplyDeleteஉங்களின் அனுபவங்கள் பலருக்கு பாடங்கள் ...
ReplyDeleteவெளிப்படையா எல்லா விஷயங்களையும் அலசி இருக்கீங்க. நல்ல விசயங்களை தெரிஞ்சுக்கிட்டேன்.உங்கள் அனுபவங்களில் எல்லோருக்குமே நல்ல படிப்பினை உண்டு.
ReplyDeleteஅன்புடன் அருணா said...
ReplyDeleteஉள்ளதை உள்ளபடி சொல்லிருக்கீங்க!///
வாங்க அன்புடன் அருணா.. :-)
பலே பிரபு said...
ReplyDeleteவேலைக்கு சேரப்போகும் எனக்கு ஒரு நல்ல தெளிவான அறிவுரை போல உள்ளது தங்கள் அனுபவம். தொடர்ந்து எழுதவும். வாசிக்க காத்திருக்கிறேன்.////
என்னுடைய அனுபவங்கள் உங்களுக்கு உபயோகமாக இருப்பது ரொம்ப மகிழ்ச்சிங்க பிரபு.. தொடர்ந்து எழுதுகிறேன்.. நன்றி..
அரசன் said...
ReplyDeleteஉங்களின் அனுபவங்கள் பலருக்கு பாடங்கள் ...///
வாங்க அரசன்.. :-)..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteவெளிப்படையா எல்லா விஷயங்களையும் அலசி இருக்கீங்க. நல்ல விசயங்களை தெரிஞ்சுக்கிட்டேன்.உங்கள் அனுபவங்களில் எல்லோருக்குமே நல்ல படிப்பினை உண்டு. ///
நன்றிங்க நண்பா..
அனுபவங்களை பகிர்ந்ததற்கு நன்றி பாபு. எங்கள் அலுவலகத்திலும் டீமில் இருக்கும் ஆட்களுக்காக பேசிய லீடர் ஒருவர் நிர்வாகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.
ReplyDelete//இப்படியெல்லாம் Front End-ல ஓடிட்டு இருந்தாலும் Back End -ல பெங்களூர் லைஃபை நல்லா என்ஜாய் பண்ணிட்டுத்தான் இருந்தேன்.. :-)..//
ReplyDeleteirunthenna... appo ippa illiyaa... thodarumaa....ok!!!