.

Friday, August 13, 2010

எந்திரன் மனிதனாக இருந்த போது..


நம்ம வீடுகள்ல இப்போவெல்லாம் ரூமுக்கு ஒரு டிவின்னு வந்துட்டுச்சு.. ஆனா 1980கள்ல நினைச்சுப் பார்தோம்னா தெருவுக்கு ஒரு டிவி இருக்கறதே பெரிய விசயமா இருந்தது.. அப்படி இருக்கறவங்க வீடுகள்ல போய் அந்த தெருவுல இருக்கற எல்லாரும் படம் பார்ப்பாங்க.. டிவி வெச்சிருக்கறவங்களுக்கும் இது பெரிய கெளரவமா இருக்கும்.. அந்த வீடுகள்ல இருக்கற பெரியவங்க ஒன்னும் பிரச்சினை இல்ல.. சின்னப்பசங்க இருக்காங்களே பயங்கர லொல்லு பண்ணுவாங்க.. இப்படி டிவி வெச்சிருக்கற ஒரு வீட்டுப் பையனால நானும் பாதிக்கப்பட்டிருக்கேன்..

அப்போதெல்லாம் நம்ம ஊர்ல தூர்தர்ஷன் மட்டும்தான இருந்தது.. அதுல வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் தமிழ்படமும் ஒளிபரப்புவாங்க.. ஒரு ஞாயிற்றுக்கிழமை என்னாச்சுன்னா டிவில ரஜினிகாந்த்தோட மனிதன் படம் போட்டாங்க.. நமக்குத்தான் அப்போல்லாம் ரஜின்னா உசிராச்சே.. நான் ரொம்ப இம்சை பண்ணினதால எங்கம்மா காலைலயே அந்த வீட்டுக்குப்போய் என் பையன் வந்தா டிவி பார்க்க விடுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டாங்க.. நானும் டிவி வெச்சிருக்கறவங்க வீட்டுக்குப் அரைமணி நேரத்துக்கு முன்னயே போயிட்டேன்.. அந்த வீட்டுக்காரங்க படம் போடட்டும்பா அப்புறம் உள்ளே வான்னு சொல்லி வெளிய நிக்க வைச்சிட்டாங்க..

5.30 மணி ஆயிடுச்சு.. படம் போட்டுட்டாங்க.. உள்ள போலாம்னு போனா கரெக்டா அந்த வீட்டுப்பையன் என்ன வெளியதள்ளி கதவ சாத்திட்டான்.. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல.. பயங்கரமா அழுகை வந்துடுச்சு.. உள்ள ரஜினிகாந்த் மனிதன்.. மனிதன்னு பாட்டு பாடறார்.. டிஷ்சூம், டிஷ்சூம்ன்னு சண்டை போடறார்.. நான் இதெல்லாம் வெளிய நின்னு கேட்டுக்கிட்டே கதவத்தொறங்கன்னு தட்டிக்கிட்டே இருக்கேன்.. அந்தப் பையன் கதவத்தொறக்கவே இல்ல.. இப்படியே மணி 7 ஆயிடுச்சு.. அங்கயே நின்னு அழுதுக்கிட்டு இருந்தேன்.. அப்போ ஏதேச்சையா கடைக்கு ஏதோ வாங்கவந்த எங்கம்மாவுக்கு என்னப் பார்த்தவுடனே பகிர்னு ஆயிடுச்சு.. நடந்ததைக் கேட்டுட்டு ரொம்பக்கோவமா என்னையக்கூட்டிட்டு வீட்டுக்குப் போயிட்டாங்க.. அன்னைக்கு நைட் முழுக்க நான் அழுதுகிட்டே இருந்தேன்..

அப்புறம் அடுத்தநாள் நான் ஸ்கூல் விட்டு வீட்டுக்குள்ள வர்றேன்.. ஒரு பெரியகம்பிய எங்க வீட்டு வாசல்ல வைச்சிருந்தாங்க.. உள்ளே போனா ஆண்டெனா செட் பண்ணிட்டு இருக்காங்க.. எனக்குப் பயங்கர சந்தோசம்.. எங்க வீட்ல டிவி வந்திடுச்சு.. அன்னைக்கு திங்கட்கிழமை.. அதனால தமிழ் புரோகிராம் எதுவும் உருப்படியா போடல.. யார் யாரோ ஏதேதோ மொழிகள்ல பேசிக்கிட்டே இருந்தாங்க.. அன்னைக்கு நைட் தூங்காம ஆஃப் பண்ணி வைச்சிருக்கற டிவியப் பார்த்துட்டே உக்காந்துருந்தேன்..

அப்போ இருந்து எங்க வீட்டுக்கு எல்லாரும் டிவி பார்க்க வந்தாங்க.. எங்க தெருவுக்கே ராஜா மாதிரி நான் ஃபீல் பண்ணினேன்..

அப்ப எனக்கு டிவி வந்த சந்தோசம்தான் இருந்ததே தவிர.. என் மேல எங்கம்மா வெச்சிருக்கற அக்கறைலாம் அப்ப புரியலை.. இப்ப நினைச்சுப்பாத்தா.. நம்ம மேல வீட்ல எவ்லோ பாசத்தோட இருக்காங்கன்னு ஒரு மாதிரி ஃபீல் ஆயிடுது.. அப்படி ஃபீல் பண்ணிட்டிருந்தததான் அப்படியே ஒரு பதிவாக்கிட்டேன்..


2 comments:

  1. சூப்பர்டா நண்பா...

    என்னோட கிராமத்து, பள்ளிநாட்களில் எங்க ஊர்ல பஞ்சாயத்து டிவில கிரிக்கெட் மற்றும் பல பொதிகை (DD1) நிகழ்ச்சிகளைப் பார்த்து, பஞ்சாயத்து டிவி இல்லாத சம்யங்களில் பக்கத்து வீடுகளில் சென்று டிவி பார்த்தது.... என்று ஞாபகப் படுத்திட்டே....

    இன்னமும் ஊருக்குப் போனா பஞ்சாயத்து டிவியில கூட்டமா உட்கார்ந்து நம்ம பசஞ்களோட கமெண்ட்டோட மேட்ச் பார்க்கறதே தனிதான்.....

    ReplyDelete
  2. @சிற்றரசு..

    உண்மைதாண்டா.. கிராமத்துல பஞ்சாயத்து டிவில படம் பார்த்த அனுபவம் எனக்கும் இருக்கு.. ஊரே திரண்டு வந்து பார்ப்பாங்க.. அதெல்லாம் நினைச்சுப்பார்க்க ஒரு மகிழ்ச்சியான விசயம்தான்..

    உன்னோட வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..

    ReplyDelete