.

Wednesday, October 6, 2010

IT'S A WONDERFUL LIFE - திரை விமர்சனம்

"It's a Wonderful Life" - 1946 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இது.. ஏதேச்சையா இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.. டைட்டில் கார்டு போடும் போதே ரொம்ப பழைய படம் போல தெரியுதேன்னு கொஞ்சம் அலுப்பா இருந்தது.. ஆனா முதல் காட்சியில இருந்தே படத்தோட ஒன்றிப் போயிட்டேன்..

"ஜார்ஜ் பெய்லி" இவர்தான் படத்தோட ஹீரோ.. முதல்காட்சியிலயே ஜார்ஜை நல்லபடியா வைச்சிருக்க சொல்லி அவரோட நண்பர்களும், குடும்பத்தாரும் ரொம்ப டீப்பா பிராத்திக்கறாங்க.. அந்த பிராத்தனை சொர்க்கத்தை அடையுது.. அந்த பிராத்தனையைக் கேட்ட தலைமைத் தூதர் ஜோசப்.. தேவர்கள்ல இரண்டாவது நிலையில இருக்கற க்ளாரன்சைக் கூப்பிடறார் (சிறகுகள் இல்லாத தூதர்னா செகண்ட் க்ளாஷாம்).. ஜார்ஜ் பத்தின மேட்டரை சொல்லி.. ஜார்ஜ் இன்னைக்கு தற்கொலை செய்துக்கப் போறார்.. நீ போய் அவரைக் காப்பாத்தினா உனக்கு சிறகுகள் கிடைச்சு முதல் நிலைத் தூதராயிடலாம்னு சொல்றார்.. அதுக்கு முன்னாடி தன்னோட சக்தியை பயன்படுத்தி க்ளாரன்சுக்கு ஜார்ஜோட வாழ்க்கையைக் காட்டறார்.. அப்படியே நாமளும் பார்க்க ஆரம்பிக்கறோம்..

ஜார்ஜுக்கு அப்போ 12 வயசாயிருக்கு.. அவர் தன்னோட தம்பி, நண்பர்களோட சேர்ந்து பனியில சறுக்கி விளையாடிட்டு இருக்கார்.. அப்போ அவரோட தம்பி தவறுதலா பக்கத்துல இருக்கற குளத்தில விழ.. அவரைக் காப்பற்றப் போன ஜார்ஜுக்கு ஒரு காது கேக்காம போயிடுது.. அதுக்கப்பறம் அவர் வேலை செய்த மருந்துக்கடை முதலாளி.. கவனக்குறைவா விஷத்தைக் ஒரு பேசண்டுக்கு கொடுக்கறதைக் கவனிச்சு அதையும் தடுத்து நிறுத்தி.. வர இருந்த ஆபத்தை தடுத்திடறார்..

ஜார்ஜ் சின்னவயசுல இருந்தே ரொம்ப நல்லவரா.. எல்லாரும் நல்லாயிருக்கனும்னு நினைச்சு வாழ்ந்திட்டு இருக்கார்.. பெய்லி பில்டிங் அண்ட் லோன் அசோசியேசனை நிர்வகிச்சுகிட்டு இருந்த ஜார்ஜோட அப்பா.. திடீர்னு மாரடைப்புல இறந்திடறார்.. அதுக்கு ஜார்ஜ் தலைமை பொறுப்பு எடுத்துக்கலைன்னா.. பாட்டர் அப்படிங்கற இன்னொரு லீடிங் ஷேர்ஹோல்டர் அதோட தலைமைப் பொறுப்புக்கு வர்ற சூழ்நிலை ஆயிடுது.. பாட்டர் மக்களை ஏமாத்தி அவங்களோட நிலங்களை அபகரிக்கறவர்.. அதனால மக்களைக் காப்பத்தறதுக்காக ஜார்ஜ் தலைமைப் பொறுப்பை ஏத்துக்கறார்..

தன்னோட தம்பி படிப்பு முடிஞ்சு வந்தவுடனே.. ஜார்ஜ் நிர்வகிச்சுட்டு இருக்கற பெய்லி பில்டிங் அண்ட் லோன் அசோசியேசனை தம்பிகிட்ட ஒப்படைச்சுட்டு ஒரு எஞ்ஜினியர் ஆகணும்ங்கறது அவரோட கனவா இருக்கு.. ஆனால் தன்னோட தம்பி படிச்சு முடிச்சு வரும்போதே ஒரு பணக்காரப் பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு வர்றார்.. அந்த பெண்ணோட அப்பா தனக்கு ஒரு பெரிய பதவியுள்ள வேலையை ஏற்பாடு செய்து இருக்கறதாகவும் சொல்றார்.. அதனால எப்பவும் போல தன்னோட கனவுகளை சகிச்சுகிட்டு பழைய நிலையையே தொடறார் ஜார்ஜ்..

அப்புறம் ஜார்ஜ் தன்னோட காதலியை திருமணம் முடிச்சுக்கறார்.. அவர் ஹனிமூன் போற சமயத்துல.. அவரோட கம்பெனி திவாலாயிடுச்சுன்னு புரளியைக் கிளப்பி விடறார் பாட்டர்.. அதனால ஹனிமூன் போக வைச்சிருந்த பணத்தை வைச்சு ஜார்ஜ் நிலைமையை சமாளிக்கறார்..

கொஞ்சம் வருசம் கழிச்சு.. மக்களுக்கு பயனுள்ள வகையில ஜார்ஜ் பார்க்குன்னு ஒரு வீட்டுமனைத் திட்டத்தை ஆரம்பிக்கறார்.. அதனால பாட்டர்கிட்ட இனிமே மக்கள் ஏமாற வேண்டாங்கற நிலையை உருவாக்கறார்..

ஒருசமயம் ஜார்ஜோட கம்பெனி கணக்குகளை பார்த்துட்டு இருக்கற அவரோட மாமா.. 8000 டாலர் கம்பெனி பணத்தை பேங்குல தொலைச்சிடறார்.. அந்த பணம் பாட்டர் கையில கிடைச்சுடுது.. இவ்வளவு நாளும் நேர்மையா.. மக்களுக்கு உதவி பண்ணிட்டு இருந்த ஜார்ஜுக்கு இது ஒரு பெரிய இழப்பு.. பாட்டர்கிட்டயே போய் உதவி கேக்கறார்.. அதுக்கு பாட்டர் நீ மக்களை ஏமாத்தி பிராடு பண்ணியிருக்க.. இனி நீ ஜெயில்லதான் உன்னோட காலத்தைக் கழிக்கவேண்டியிருக்கும்னு அவரை மேலும் கஷ்டப்படுத்திடறார்..

இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில ஜார்ஜ் தற்கொலை செய்துக்கப் போறார்..

தேவதூதர் க்ளாரன்ஷ்.. ஜார்ஜோட முழுக்கதையையும் தெரிஞ்சுக்கிட்டு அவரைக் காப்பாத்தக் கிளம்பறார்.. ஜார்ஜோட தற்கொலை முயற்சியைத் தடுத்து நான் ஒரு தேவதூதர்.. நீ இப்படி எல்லாம் தற்கொலை செய்துக்கக் கூடாதுன்னு அட்வைஸ் பண்றார்.. ஆனால் அவரைத் தேவதூதர்னு ஒத்துக்க மறுக்கிறார் ஜார்ஜ்.. சரி ஜார்ஜ் நீ பிறக்கவே இல்லைனா எப்படியிருக்கும்னு உனக்கு காட்டறேன்னு சொல்லிட்டு ஊருக்குள்ள கூட்டிப்போறார் க்ளாரன்ஷ்..

ஜார்ஜுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. அவரோட ஊர் பேரே பாட்டர்வில்லின்னு இருக்கு.. சிட்டி முழுக்க இரவு விடுதிகளும்.. அடமானக்கடைகளும் நிறைஞ்சு கிடக்கு.. அவரோட பெய்லி பார்க் கட்டப்படாம அங்க சுடுகாடு இருக்கு.. அவரோட தம்பி குளத்தில விழுந்து இறந்து போனதால அவரோட கல்லறை அங்க இருக்கு.. தன்னோட சின்ன வயசு மருந்துக்கடை முதலாளி தவறுதலா விஷம் கொடுத்ததால பல வருசங்களா ஜெயில் தண்டனை அனுபவிச்சு இருந்திருக்கார்.. அவரோட நண்பரோட பாரை வேற ஒரு ஆள் நடத்திக்கிட்டு இருக்கார்.. அவரோட மனைவி கல்யாணம் செய்துக்காமலே இருக்கார்.. ஜார்ஜ் பிறந்திருக்கவே இல்லைனா இது எல்லாமே நடந்திருக்கும்.. தன்னோட முக்கியத்துவத்தை உணர்றார் ஜார்ஜ்.. அதனாலதான் தற்கொலை செய்துக்கப் போறதில்லைன்னு முடிவெடுத்துட்டு ரொம்ப சந்தோசமா தன்னோட வீட்டுக்குப் புறப்படறார்..

ஜார்ஜ் வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே அவரோட மாமா.. பண நிலைமைகளை சீர் செய்துடறார்.. ஊர் மக்களும் ஜார்ஜோட நிலைமையை தெரிஞ்சுக்கிட்டு அவருக்கு முடிஞ்ச பண உதவிகளை செய்றாங்க.. அந்த வருச கிறிஸ்துமஸை ரொம்ப சந்தோசமா கொண்டாடறாங்க ஜார்ஜ் பேமிலி..
கிறிஸ்துமஸுக்கு வந்த கிப்ட் ஒன்னுல..

"Dear George, 
Remember no man is a failure who has friends. 
Thanks for the wings, 
Love, 
Clarence."

இப்படி எழுதியிருக்கு.. ரொம்ப சந்தோசத்தோட படம் முடியுது..

பார்க்கற ஒவ்வொருத்தருக்கும் அபரிதமான தன்னபிக்கையை கொடுக்கற திரைப்படம் இது.. ஒரு நல்ல மனிதன் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் அழிஞ்சு போயிடறதில்லைங்கற கருத்தை ரொம்ப ஆழமா சொல்லியிருக்காங்க.. படத்தோட கடைசிக் காட்சியைப் பார்க்கற ஒவ்வொருத்தருக்கும் ஆனந்தக் கண்ணீர் வர்றது உறுதி..

படத்தோட ஹீரோயின் திகட்டாத அழகு..

1955 ஆம் ஆண்டு சிவாஜிகணேசன் நடிச்சு வெளிவந்த "முதல் தேதி" அப்படிங்கற திரைப்படமும் இதே தீம்தான்.. இந்த ரெண்டு படத்துக்கும் வித்தியாசம் நிறைய இல்ல..


22 comments:

  1. மிகவும் சிறப்பான படத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் மிக்க நன்றி!

    ReplyDelete
  2. நானும் இந்த படத்த பார்த்திருக்கிறேன். நல்ல படம். அதே மாதிரி BEAUTIFUL MIND படம் கிடைச்சா பாருங்க. சூப்பர் மூவி.

    ReplyDelete
  3. இந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது வருங்கால குழந்தைகளும் கெடுவதற்கு நாமே ஒரு காரணமாகி விடுகிறோம். இது மட்டும் தான் நாம் பெறக் கூடிய லாபம் இந்த சினிமாக்களால். நாம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடப் போகிறோம். நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா. நாம் அந்தளவுக்கு முட்டாளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா?
    We are expecting some useful good Posts from you in future to help the Society and next Generation!

    ReplyDelete
  4. நல்ல படம் போல இருக்கே... பார்க்க முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  5. @எஸ்.கே..
    நன்றி நண்பரே..

    @ஜீவன்பென்னி..
    கண்டிப்பாக பாக்கறேங்க.. உங்கள் வருகைக்கு நன்றி..

    @அருண் பிரசாத்..
    கண்டிப்பாக பாருங்கள்.. ரொம்ப நல்ல படம்..

    ReplyDelete
  6. @saigokulakrishna..
    உங்களுக்கு பலனலிக்கவில்லை என்று நீங்கள் நினைக்கும் விசயத்தைவிட்டு நகர்ந்து செல்லப் பாருங்க..தேவையில்லாமல் அதில் புகுந்து உங்கள் விருப்பங்களைத் திணிக்காதீர்கள்...இதை நீங்கள் படித்துத்தான் ஆகவேண்டும் என உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை...எதைப் பதிவாகப் போடவேண்டும் என்பது எனது உரிமை அதில் நீங்கள் தலையிட வேண்டாம்...அதே போல நீங்கள் செய்வது மட்டும்தான் உறுப்படியான வேலை என்ற இருமாப்பும் வேண்டாம்..சமூகத்துக்கும் அடுத்த தலைமுறைக்கும் பயனுள்ள பதிவுகளைப் போடச் சொல்கிறீர்கள்..இந்தப் படத்திலேயே உங்கள் அடுத்த தலைமுறைக்கு அல்ல..உங்களுக்கே பயன்படும் பல தன்னம்பிக்கை விசயங்கள் இருக்கின்றன..போய் பாருங்கள்...குறுகிய மனப்பான்மையுடன்...பொத்தாம் பொதுவாக சினிமான்னாலே இப்படித்தான்னு பேசற மனப்பான்மைய விடுங்க..

    ReplyDelete
  7. //"It's a Wonderful Life" - 1946 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இது.. ஏதேச்சையா இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.//

    என்னங்க , நீங்க இங்கிலீஸ் படமாவே பாக்குறீங்க ..!!

    ReplyDelete
  8. //We are expecting some useful good Posts from you in future to help the Society and next Generation!//

    சூப்பருங்க அண்ணா ., கலக்கல் .. அவரு எப்படியோ எழுதிட்டு போகட்டும்க . நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு சமுதாயத்து திருத்தலாம்ல ..!!

    ReplyDelete
  9. //(சிறகுகள் இல்லாத தூதர்னா செகண்ட் க்ளாஷாம்).//

    அட அட , என்னமா சொல்லுறாங்க ..!!

    ReplyDelete
  10. இந்த கமெண்ட பப்ளிஷ் பண்ண வேணாம்க.. நான் கொஞ்சம் நக்கலா கமெண்ட் போட்டேன்னா தப்பா நினைக்காதீங்க ..!! சரியா ..? இல்ல வேணாம்ன என்னோட பதிவுல வந்து சொல்லுங்க , இல்ல இதுலையே ரிப்ளை பண்ணுங்க ..!!

    ReplyDelete
  11. //ஆனால் அவரைத் தேவதூதர்னு ஒத்துக்க மறுக்கிறார் ஜார்ஜ்.. சரி ஜார்ஜ் நீ பிறக்கவே இல்லைனா எப்படியிருக்கும்னு உனக்கு காட்டறேன்னு சொல்லிட்டு ஊருக்குள்ள கூட்டிப்போறார் க்ளாரன்ஷ்..//

    செம படம் போல ..!! பாக்குறக்கு முயற்சிக்கிறேன் .!!

    ReplyDelete
  12. //.எதைப் பதிவாகப் போடவேண்டும் என்பது எனது உரிமை அதில் நீங்கள் தலையிட வேண்டாம்....//

    இது மேட்டர் .. வந்து பிடிச்சிருந்த படிங்க , இல்லைனா கிளம்புங்க .. எங்க ப்ளோக்ல நாங்க என்னவேனா எழுதுவோம் .. அத விட்டுட்டு நீ அப்படி எழுத கூடாது , இப்படி எழுத கூடாது அப்படின்னு எதுக்கு சொல்லுறீங்க .. என்னமோ நீங்க கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்தது மாதிரி ..!!

    ReplyDelete
  13. // Remember no man is a failure who has friends. //
    Good line and if we have friends in life, that is a wonderful life.
    I will surely see this movie, Thanks Friend. :)

    ReplyDelete
  14. @ப.செல்வக்குமார்..
    ///என்னங்க , நீங்க இங்கிலீஸ் படமாவே பாக்குறீங்க ..!!///

    ஆமா செல்வா.. அதிகமா இங்கிலீஷ் படம்தான் பார்ப்பேன்..

    ///செம படம் போல ..!! பாக்குறக்கு முயற்சிக்கிறேன் .!!///

    கண்டிப்பா பாருங்க.. ரொம்ப நல்ல படம்..

    நீங்க தொடர்ந்து எனது பதிவுகளை ஊக்குவிப்பதற்கு நன்றி செல்வா..

    ReplyDelete
  15. Every Christmas season, many TV channels over here, show this movie at least once. It is a classic movie with a good message. :-)

    ReplyDelete
  16. நல்ல விமர்சனம் பாபு! படம் பாக்கணும்!

    ReplyDelete
  17. @இளங்கோ..
    வருகைக்கு நன்றிங்க இளங்கோ..

    @சித்ரா..
    வருகைக்கு நன்றிங்க..

    @சிவா..
    நன்றி சிவா..

    ReplyDelete
  18. @அன்பரசன்..
    நன்றி அன்பரசன்..

    ReplyDelete
  19. நல்லாயிருக்குண்ணே

    ReplyDelete
  20. நானும் சமீபத்தில் பார்த்தேன். அருமையான படம். நீங்கள் சொல்வதுபோல் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையைக் கொடுக்கும் படம்.

    ReplyDelete
  21. நன்றி டம்பி மேவீ..

    வருகைக்கு நன்றிங்க ஜெயந்தி..

    ReplyDelete