.

Friday, December 3, 2010

சிக்கு புக்கு - கொரியன் இரயில்

இந்தப் படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துலயே தெரிஞ்சு போச்சு முழுக்கதையும்..

ஆர்யாவும், ஸ்ரேயாவும்.. லண்டன்ல இருக்காங்க.. ரொம்ப ஸ்டைலிஸான கேரக்டர்ஸ்.. ஆர்யா, ஸ்ரேயாவோட அறிமுகக் காட்சிகளைப் பல படங்கள்ல பார்த்தாச்சு.. ரெண்டு பேரும் சில காரணங்களால இந்தியாவுல அவங்க சொந்த ஊருக்கு வரவேண்டியிருக்கு.. அப்போ ஏதேச்சையா இரண்டு பேரும் சந்திச்சு.. சண்டை போட்டுக்கிட்டு.. இரயில்ல இருந்து இறக்கிவிடப்பட்டு.. அப்புறம் லாரி, பஸ், சைக்கிள்னு அவங்க ஊருக்குப் பயணப்படறாங்க.. அப்போ ரெண்டு பேருக்குள்ள நடக்கற சண்டைகளை கமெடியாகக் காமிக்க முயற்சி பண்ணியிருக்கார் இயக்குனர்..

இந்தப் பயணத்தின் போது ஆர்யா தன்னோட அப்பாவோட டைரியைப் படிக்கறார்.. அந்த பிளாஸ்பேக் காட்சிகள்தான் இடைவேளை வரைக்கும் நமக்கு ஆறுதல்.. பிளாஸ்பேக்குல ஆர்யாவோட அப்பா ஆர்யாவின் காதல் கதை.. ஆர்யா போலீஸாகறதுக்கு எக்ஸாம்ல பாஸ் பண்ணிட்டு ஊருக்கு வர்றார்.. அங்கே பள்ளிக்கூட வாத்தியார் மகளை லவ் பண்றார்.. அவங்களும் ஆர்யாவை லவ் பண்றாங்க.. ஆர்யா வீடு ஊர்லயே பெரிய பணக்காரங்க.. அதனால ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடிப்போறதா முடிவு பண்றாங்க.. ஆனால் ஆர்யா குறிப்பிட்ட நேரத்துக்கு அவங்க வராததால.. தன்னோட போலீஸ் ட்ரைனிங்கைத் தொடர்றதுக்காக கிளம்பிடறார்..

போலீஸ் ட்ரைய்னிங் கேம்ப்ல ஒருத்தர் நண்பர் ஆகறார்.. அவர் தன்னோட அத்தை பொண்ணை லவ் பண்றார்.. ஆர்யாவோட லவ்வர் படிக்கறேன்னு சொல்லிட்டு.. அவரைத் தேடி அங்கே வந்திடறார்.. இதுல இருந்தே ரெண்டு பேரும் லவ் பண்றது ஒரே ஆளைத்தான்னு தெரிஞ்சு போயிடுது.. ஆர்யா விட்டுக் கொடுத்திடறார்.. அவங்க ஸ்டோரி ஓவர்..

பிரசண்ட்ல.. சண்டை போட்டுட்டு இருந்த ஆர்யாவும்.. ஸ்ரேயாவும் நண்பர்கள் ஆயிடறாங்க.. ஒரு வழியா ஊர் வந்து சேர்ந்திடறாங்க.. ஸ்ரேயாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கார் அவரோட அப்பா.. மாப்பிள்ளை வந்து பார்க்கற வரைக்கும் ஸ்ரேயாவுக்கு ஆர்யா மேல இருக்கற காதல் இருக்கறது தெரியல... ஒரு செகண்ட்ல காதல் வந்துடுது.. சேர்ந்திடறாங்க.. படம் முடிஞ்சது..

ஜீவாவோட அசிஸ்டெண்ட் மணிகண்டன் இயக்கிய படம்கறதாலவும்.. ஆர்யா மேல இருக்கற நம்பிக்கையாலும்.. படத்துக்குப் போயாச்சு.. டிராமா ஆர்டிஸ்ட்ஸ் நடிக்கற மாதிரி அவங்க அவங்க டயலாக் வர்ற சமயத்துல மட்டும் நடிச்சுட்டு எல்லாரும் அமைதியா இருந்திடறாங்க.. ஸ்ரேயா ரொம்ப ஓவர் ஆக்டிங்..

இயக்குனர் நடிகர்கள்கிட்ட சரியான நடிப்பை வாங்கத் தவறிட்டார்.. காட்சிகளுக்குத் தேவையான பலத்தைக் கொடுக்கல.. ஏதோ ஒரு காட்சிக்கு அப்புறம் இன்னொரு காட்சி.. அப்புறம் இன்னொன்னு காட்சிகள் நகர்ந்து போகுது.. இடைவேளைக்கு முன்பு படத்தோட மிகப்பெரிய பலமா இருந்த பிளாஸ்பேக் காட்சிகளும் இடைவேளைக்கு அப்புறம் போரடிக்க ஆரம்பிச்சிடுது..

படத்தோட குறைகள்ல.. பெரிய குறை பின்னணி இசைதான்.. முக்கியமான காட்சிகள்ல சப்பையான பின்னணி இசையைப் போட்டு பிரவீன்மணி காட்சிகளோட வேல்யூவை ரொம்பக் குறைச்சிட்டார்.. ஹரிஹரனோட பாடல்கள் எதுவுமே தேறல.. 

ஸ்ரேயாவை விட பிளாஸ்பேக்குல வர்ற கதாநாயகிக்கு நல்ல வெயிட்டான கேரக்டர்.. அவர் முகமும் சரி.. நடிப்பும் சரி படத்துக்கு ஒட்டவே இல்ல.. வேற யாராவது சாந்தமான முகம் இருக்கற பொண்ணைப் போட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்.. தன்னொட நண்பனோட அத்தை பொண்ணுதான் தன்னோட காதலின்னு தெரிஞ்சுக்கிட்டு அவரோட பேசறதைப் பார்க்கறதைத் தவிர்க்கறார் ஆர்யா.. அப்புறம் சில காட்சிகளுக்கு அப்புறம் போய் பார்க்கப் போறார்.. அவர்கிட்ட என்னமோ ரொம்ப நாளாக் கடைக்கு வராத கஸ்டமர்கிட்ட கேக்கறமாதிரி ஏன் என்கிட்ட பேசலன்னு உணர்ச்சியே இல்லாம பேசறாங்க.. அவரோட நடிப்பு முழுக்க அப்படித்தான் இருக்கு.. கூட ஆர்யா இருக்கறதால அவர் வர்ற காட்சிகள் எல்லாமே ஒப்பேறிருது..

சந்தானம் சில காட்சிகள்ல வந்து சிரிக்க வைக்கனும் ட்ரை பண்றார்.. அவர் வர்ற ஒன்னு ரெண்டு காட்சிகள் நல்லாயிருக்கு.. படத்துல அவர் கேரக்டர் ஒட்டவும் இல்ல.. தேவையும் இல்ல.. அவரும் நடிக்கனும் நடிக்க வைச்சிருக்காங்க..

பிளாஸ்பேக் காட்சிகள்ல வர்ற ஆர்யாவோட கதையும் கிளைமாக்ஸ்ல வர்ற திருப்பமும்.. கிளாஸிக்னு ஒரு கொரியன் திரைப்பத்தோட கதை.. முதல் படத்துலயே காப்பி அடிக்கனுமா..

படம் பார்க்கறப்போ உங்களுக்கு ஆர்வம் குறையாம இருக்கனும்ங்கறதுக்காக படத்தோட முக்கியமான விசயத்தை நான் இங்கே சொல்லல.. ஏன் டைரக்டர்கூட அதை ஒரு பெரிய விசயமாகவே சொல்லல.. படம் முடிய நேரமாச்சேன்னு அவசர அவசரமா காட்சிகளை எடுத்தமாதிரி இருக்கு.. டிக்கெட் காசுக்கு ஒர்த் இல்ல படம்.. எந்த எக்ஸ்பெக்டேசனும் இல்லாம போனாலும் முன்னாடியே கிளாஸிக் படத்தைப் பார்க்காம இருந்தாலும் கொஞ்சம் பார்க்கலாம்னு நினைக்கறேன்..

ஏற்கனவே வந்த ஒரு அற்புதமான காதல் படத்தைப் பார்த்து எடுத்தும்.. இந்தப் படத்தை நன்றாக எடுக்காம விட்டுட்டார் இயக்குனர்.. உயிரோட்டமே இல்லாமல்..

கிளாஸிக் = சிக்கு புக்கு கிளாஸிக்


50 comments:

 1. //படம் முடிய நேரமாச்சேன்னு அவசர அவசரமா காட்சிகளை எடுத்தமாதிரி இருக்கு.. டிக்கெட் காசுக்கு ஒர்த் இல்ல படம்.. எந்த எக்ஸ்பெக்டேசனும் இல்லாம போனாலும் முன்னாடியே கிளாஸிக் படத்தைப் பார்க்காம இருந்தாலும் கொஞ்சம் பார்க்கலாம்னு நினைக்கறேன்..//

  அப்படியா?

  ReplyDelete
 2. அன்பரசன் said...

  //படம் முடிய நேரமாச்சேன்னு அவசர அவசரமா காட்சிகளை எடுத்தமாதிரி இருக்கு.. டிக்கெட் காசுக்கு ஒர்த் இல்ல படம்.. எந்த எக்ஸ்பெக்டேசனும் இல்லாம போனாலும் முன்னாடியே கிளாஸிக் படத்தைப் பார்க்காம இருந்தாலும் கொஞ்சம் பார்க்கலாம்னு நினைக்கறேன்..//

  அப்படியா? ///

  ஆமாங்க அன்பரசன்.. 100 ரூபாயில 50 ரூபாய் வேஸ்ட்..

  ReplyDelete
 3. படம் சொதப்பல் போல

  ReplyDelete
 4. nis said...

  படம் சொதப்பல் போல ///

  ஆமாங்க.. சொதப்பல்தான்..

  ReplyDelete
 5. தங்கள் பார்வையும் அருமையாக இருக்கிறது எதற்கும் படத்தை ஒருதடவை பார்த்து விட்டு வருகிறேன்...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

  ReplyDelete
 6. டிராமா ஆர்டிஸ்ட்ஸ் நடிக்கற மாதிரி அவங்க அவங்க டயலாக் வர்ற சமயத்துல மட்டும் நடிச்சுட்டு எல்லாரும் அமைதியா இருந்திடறாங்க.. ஸ்ரேயா ரொம்ப ஓவர் ஆக்டிங்..


  .......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... இன்னும் சிரிச்சிக்கிட்டு இருக்கேன்.

  ReplyDelete
 7. ம.தி.சுதா said...

  தங்கள் பார்வையும் அருமையாக இருக்கிறது எதற்கும் படத்தை ஒருதடவை பார்த்து விட்டு வருகிறேன்...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.////

  பாராட்டுக்கு நன்றிங்க..

  ReplyDelete
 8. அவர்கிட்ட என்னமோ ரொம்ப நாளாக் கடைக்கு வராத கஸ்டமர்கிட்ட கேக்கறமாதிரி ஏன் என்கிட்ட பேசலன்னு உணர்ச்சியே இல்லாம பேசறாங்க.. ///:-)

  நல்ல விமர்சனம்!
  என்ன இது இப்பெல்லாம் எங்கும் காபி எதிலும் காபியாவே இருக்கு!

  ReplyDelete
 9. Chitra said...

  டிராமா ஆர்டிஸ்ட்ஸ் நடிக்கற மாதிரி அவங்க அவங்க டயலாக் வர்ற சமயத்துல மட்டும் நடிச்சுட்டு எல்லாரும் அமைதியா இருந்திடறாங்க.. ஸ்ரேயா ரொம்ப ஓவர் ஆக்டிங்..


  .......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... இன்னும் சிரிச்சிக்கிட்டு இருக்கேன். ////

  மிகவும் ரசிச்சுப் படிச்சதுக்கு நன்றிங்க சித்ரா..

  ReplyDelete
 10. எஸ்.கே said...

  அவர்கிட்ட என்னமோ ரொம்ப நாளாக் கடைக்கு வராத கஸ்டமர்கிட்ட கேக்கறமாதிரி ஏன் என்கிட்ட பேசலன்னு உணர்ச்சியே இல்லாம பேசறாங்க.. ///:-)

  நல்ல விமர்சனம்!
  என்ன இது இப்பெல்லாம் எங்கும் காபி எதிலும் காபியாவே இருக்கு! ////

  காப்பி அடிக்கறதுன்னு ஆயிடுச்சு.. அதோட அவுட்புட்டையாவது நல்லாக் குடுத்தா.. கண்டிப்பாகப் பாராட்டலாங்க எஸ்.கே.. அதையும் சரியாகச் செய்யாததுதான் வருத்தம்..

  பாராட்டுக்கு நன்றிங்க..

  ReplyDelete
 11. படம் சுமார்தான்னு பேசிக்குறாங்க ...

  ReplyDelete
 12. என்னை காப்பாற்றியதற்க்கு நன்றி...பாபு..

  ReplyDelete
 13. ஆக மொத்தத்துல படம் குப்பைனு தானே சொல்ல வரீங்க.

  முன்னெச்சரிக்கைக்கு நன்றிங்க

  ReplyDelete
 14. >>>
  இயக்குனர் நடிகர்கள்கிட்ட சரியான நடிப்பை வாங்கத் தவறிட்டார்.. காட்சிகளுக்குத் தேவையான பலத்தைக் கொடுக்கல.. ஏதோ ஒரு காட்சிக்கு அப்புறம் இன்னொரு காட்சி.. அப்புறம் இன்னொன்னு காட்சிகள் நகர்ந்து போகுது.. இடைவேளைக்கு முன்பு படத்தோட மிகப்பெரிய பலமா இருந்த பிளாஸ்பேக் காட்சிகளும் இடைவேளைக்கு அப்புறம் போரடிக்க ஆரம்பிச்சிடுது..>>>>

  ரொம்ப கரெக்ட்

  ReplyDelete
 15. >>>கிளாஸிக் = சிக்கு புக்கு ≠ கிளாஸிக்>.

  இது சூப்பர் மேட்டர்.நீங்க பி எஸ் சி மேத்ஸ்சா?

  ReplyDelete
 16. ஆக... காப்பி அடிச்சும் பாசாகலன்னு சொல்லுங்க.. :-))

  உங்க விமர்சனம் சூப்பர்.. :-)

  ReplyDelete
 17. அட்டகாசம், :-)
  இப்ப வற படங்களைப்பாருங்க டெக்னிக்கலா நல்லா இருக்கும் திரைக்கதையிலதான் கோட்டை விட்டுடறாங்க... கிளாசிக்கிலிருந்து அந்த நாட்ட மட்டும் எடுத்துகிட்டு நம்ம ஊருக்கு ஏத்தமாதிரி யோசிக்கனும்..ம்ம்ம்ம்...

  ReplyDelete
 18. கே.ஆர்.பி.செந்தில் said...

  படம் சுமார்தான்னு பேசிக்குறாங்க ... ////

  ஆமாங்க படம் சுமார்தான்.. ஆனால் டைம் பாஸாயிடுது..

  ReplyDelete
 19. ஹரிஸ் said...

  என்னை காப்பாற்றியதற்க்கு நன்றி...பாபு.. ///

  உங்களைக் காப்பறியது ரொம்ப சந்தோசமா இருக்குங்க..

  ReplyDelete
 20. ஆமினா said...

  ஆக மொத்தத்துல படம் குப்பைனு தானே சொல்ல வரீங்க.

  முன்னெச்சரிக்கைக்கு நன்றிங்க ///

  :-) வருகைக்கு நன்றிங்க..

  ReplyDelete
 21. சி.பி.செந்தில்குமார் said...

  பாபு விமர்சனம் டாப்..

  முதல் வருகைக்கும்.. பாராட்டுக்கும் நன்றிங்க..

  ReplyDelete
 22. சி.பி.செந்தில்குமார் said...

  >>>கிளாஸிக் = சிக்கு புக்கு ≠ கிளாஸிக்>.

  இது சூப்பர் மேட்டர்.நீங்க பி எஸ் சி மேத்ஸ்சா? ///

  :-) இல்லங்க.. நான் கம்ப்யூட்டர் ஸ்டூடண்ட்.. மேல சொல்லியிருக்கற கணக்கை மட்டும்தான் நல்லாப் போடுவேன்..

  ReplyDelete
 23. Ananthi said...

  ஆக... காப்பி அடிச்சும் பாசாகலன்னு சொல்லுங்க.. :-))

  உங்க விமர்சனம் சூப்பர்.. :-) ///

  நன்றிங்க ஆனந்தி..

  ReplyDelete
 24. shortfilmindia.com said...

  nalla vimarasanam
  cablesankar ///

  உங்களது வருகை எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க.. பாராட்டுக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 25. முரளிகுமார் பத்மநாபன் said...

  அட்டகாசம், :-)
  இப்ப வற படங்களைப்பாருங்க டெக்னிக்கலா நல்லா இருக்கும் திரைக்கதையிலதான் கோட்டை விட்டுடறாங்க... கிளாசிக்கிலிருந்து அந்த நாட்ட மட்டும் எடுத்துகிட்டு நம்ம ஊருக்கு ஏத்தமாதிரி யோசிக்கனும்..ம்ம்ம்ம்... ////

  கரெக்டாக சொன்னீங்க.. அது தெரியாமல்தான் நிறையப்பேரு கோட்டை விடறாங்க.. நம்ம ராஜா அந்த வேலைகளைக் கரெக்டா பண்றார்..

  ReplyDelete
 26. நான் இன்னும் கிளாசிக் படம் பாக்கலையே...அதனால ஒரு தடவையாவது படம் பார்க்கலாமா..

  ReplyDelete
 27. @வெறும்பய..
  பார்க்கலாம் ஜெயந்த்.. ரொம்ப மோசமான படமெல்லாம் இல்ல.. ஆனால் இடைவேளைக்கு பிறகு கண்டிப்பாகப் போர் அடிக்கும்..

  ReplyDelete
 28. ரொம்ப நல்லா விமர்சனம் எழுதியிருக்கீங்க. Liked the way you have analysed it.

  ReplyDelete
 29. பரவாயில்ல உங்களமாதிரி நல்ல மனுசங்க இருக்கிறதுனால பலபேர் பர்ஸ் தப்பிக்குது சார்
  நான் பாக்க மாட்டேன் நல்ல விமர்சனம்

  ReplyDelete
 30. பிண்ணனி இசை பிரவீன்மணினு படிச்சதா ஞாபகம், சரி தானா?

  ReplyDelete
 31. அப்பாட தமிழ்ப் படம் விமர்சனம் எழுதிட்டார் ..௧!

  ReplyDelete
 32. //தெரியல... ஒரு செகண்ட்ல காதல் வந்துடுது.. சேர்ந்திடறாங்க.. படம் முடிஞ்சது..//

  அடடா .! வெளங்கீரும் போலேயே ..? எல்லா தமிழ் படத்திலையும் ஒரு செகண்ட்ல தானே காதல் வருது ..

  ReplyDelete
 33. ///பிளாஸ்பேக் காட்சிகள்ல வர்ற ஆர்யாவோட கதையும் கிளைமாக்ஸ்ல வர்ற திருப்பமும்.. கிளாஸிக்னு ஒரு கொரியன் திரைப்பத்தோட கதை.. முதல் படத்துலயே காப்பி அடிக்கனுமா..///

  இதுக்குத்தான் மற்ற நாட்டு படங்கள பாக்காதீங்க அப்படின்னு சொல்லுறது ., இதுவே நான் பார்த்திருந்த எனக்கு அந்த மேட்டர் தெரிஞ்சிருக்காது ..!! சந்தோசமா பார்த்துட்டு வந்திருப்பேன் .. ஹி ஹி ஹி ..

  ReplyDelete
 34. மோகன் குமார் said...
  ரொம்ப நல்லா விமர்சனம் எழுதியிருக்கீங்க. Liked the way you have analysed it. ////

  பாராட்டுக்கு நன்றிங்க..

  ReplyDelete
 35. dineshkumar said...
  பரவாயில்ல உங்களமாதிரி நல்ல மனுசங்க இருக்கிறதுனால பலபேர் பர்ஸ் தப்பிக்குது சார்
  நான் பாக்க மாட்டேன் நல்ல விமர்சனம் ////

  ஹா ஹா ஹா.. ரைட்டுங்க.. பாராட்டுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 36. krubha said...
  பிண்ணனி இசை பிரவீன்மணினு படிச்சதா ஞாபகம், சரி தானா? ////

  கரெக்டுதாங்க.. பிண்ணனி இசை கலோனியல் கஷின்ஸும்.. பிரவீன்மணியும் போட்டிருக்காங்க..

  ReplyDelete
 37. ப.செல்வக்குமார் said...
  அப்பாட தமிழ்ப் படம் விமர்சனம் எழுதிட்டார் ..௧///

  ஹா ஹா ஹா.. இந்த விமர்சனம் எழுதும் போது உங்களைத்தான் நினைச்சுக்கிட்டேன் செல்வா..

  ReplyDelete
 38. ப.செல்வக்குமார் said...
  ///பிளாஸ்பேக் காட்சிகள்ல வர்ற ஆர்யாவோட கதையும் கிளைமாக்ஸ்ல வர்ற திருப்பமும்.. கிளாஸிக்னு ஒரு கொரியன் திரைப்பத்தோட கதை.. முதல் படத்துலயே காப்பி அடிக்கனுமா..///

  இதுக்குத்தான் மற்ற நாட்டு படங்கள பாக்காதீங்க அப்படின்னு சொல்லுறது ., இதுவே நான் பார்த்திருந்த எனக்கு அந்த மேட்டர் தெரிஞ்சிருக்காது ..!! சந்தோசமா பார்த்துட்டு வந்திருப்பேன் .. ஹி ஹி ஹி .. ////

  ஹா ஹா ஹ.. இதையேதான் நானும் நினைச்சேன் செல்வா.. இந்த உலகப் படங்கள்லாம் பார்க்காம இருந்திருந்தா.. நீங்க சொல்றமாதிரிதான் ஆயிருக்கும்..

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க..

  ReplyDelete
 39. இதுவும் காப்பியா விளங்கிறும் தமிழ்சினிமா

  ReplyDelete
 40. இப்ப ஜனங்கள்ளலாம் உலகப் படம் பாக்கத் தொடங்கிட்டாங்கன்றத இந்த டைரக்டருங்க எப்பத்தான் புரிஞ்சுக்கப்போறாங்களோ?

  ReplyDelete
 41. பேசாம இது இந்த மொழி படத்தின் தமிழ் பதிப்புன்னு டைட்டில்ல போட்டுடலாம். ஏன்னா எல்லாப் படமும் காப்பி தான்.

  ReplyDelete
 42. இரவு வானம் said...

  இதுவும் காப்பியா விளங்கிறும் தமிழ்சினிமா ////

  காப்பிதாங்க.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

  ReplyDelete
 43. ஜெயந்தி said...

  இப்ப ஜனங்கள்ளலாம் உலகப் படம் பாக்கத் தொடங்கிட்டாங்கன்றத இந்த டைரக்டருங்க எப்பத்தான் புரிஞ்சுக்கப்போறாங்களோ?////

  ஆமாங்க ஜெய்ந்தி.. முதல்ல மக்களுக்கு உலகப்படங்களைப் பற்றி தெரியாம இருந்தது.. என்ன இருந்தாலும் இயக்குனர்களால அவங்க பழக்கத்தை விடமுடியலை போல..

  ReplyDelete
 44. நாகராஜசோழன் MA said...

  பேசாம இது இந்த மொழி படத்தின் தமிழ் பதிப்புன்னு டைட்டில்ல போட்டுடலாம். ஏன்னா எல்லாப் படமும் காப்பி தான். ////

  ஹா ஹா ஹா.. கரெக்டுதாங்க.. வருகைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 45. நிறைய எதிர்மறை கருத்துக்கள்தான் படத்திற்கு... நல்ல விமர்சனம் பாபு!

  ReplyDelete
 46. சிவா என்கிற சிவராம்குமார் said...

  நிறைய எதிர்மறை கருத்துக்கள்தான் படத்திற்கு... நல்ல விமர்சனம் பாபு! ///

  நன்றிங்க சிவா..

  ReplyDelete
 47. நீங்க கொரியன் படம் எல்லாம் பார்ப்பின்கல நண்பரே ... வாழ்த்துக்கள் ரொம்ப நல்ல விமர்சனத்தை சொல்லி இருகிங்க ...

  ReplyDelete
 48. mathan said...

  நீங்க கொரியன் படம் எல்லாம் பார்ப்பின்கல நண்பரே ... வாழ்த்துக்கள் ரொம்ப நல்ல விமர்சனத்தை சொல்லி இருகிங்க ... ////

  ஆமாங்க மதன்.. கொரியன் மூவிஸ் பார்க்கற வழக்கம் இருக்கு.. ஒருமுறை கொரியன் மூவிஸ் பார்த்துட்டோம்னா.. ரசிகர் ஆயிடுவோம்..

  பாராட்டுக்கு நன்றிங்க..

  ReplyDelete