.

Friday, March 18, 2011

ஃபிளைட் பிளான் - திரை விமர்சனம்

எனக்குப் மிகவும் பிடிச்ச ஆங்கிலத் திரைப்படங்கள்ல வகைகள்ல.. விமானத்துல நடக்கற மாதிரியான திரைக்கதையுள்ள படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பேன்.. விமானத்துல நடக்கற கதைனாலே.. விமானத்தை ஹைஜாக் பண்றதும்.. அங்கே பேசஜ்சராக இருக்கற ஹீரோ எப்படி அந்த திட்டத்தை முறியடிக்கிறார் அப்படிங்கற மாதிரி திரில்லிங்கா கதை நகரும்..

இந்தப் பதிவுல நான் சொல்லப்போற படம் முழுவதும் விமானத்திலதான்.. ஆனால் ஹைஜாக் மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசம்..

ஃபிளைட் பிளான் - 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்..

கைல் பிராட் தன்னோட கணவரை இழந்த துக்கத்தில இரயில்வே ஸ்டேசன்ல உட்கார்ந்திருக்கார்.. கைல் தன்னோட கணவர் சடலத்தை ரிசீவ் பண்றதை.. ஸ்டேசன்ல உட்கார்ந்து நினைச்சுப் பார்த்துட்டு இருக்கும் போது.. திடீர்னு அவரோட இறந்த கணவர்,, அங்கே வந்து..வா வீட்டுக்குப் போலாம்னு அழைச்சிட்டுப் போறார்.. (ம்ம்.. ரைட்டு..)

சும்மா.. தன்னோட கணவர் வந்தமாதிரி நினைச்சுப் பார்த்திருக்கார் கைல்.. :-)..

கைல் பிராட்டுக்கு ஆறு வயசுல ஒரு மகள்..

இறந்த கணவரோட சடலத்தை தன்னோட ஊர்ல கொண்டு போய் அடக்கம் பண்ணலாம்னு.. தன்னோட மகளோட விமானத்துல கிளம்பறார் கைல்.. அந்த விமானத்தை வடிவமைச்ச இஞ்சினியர் கைல்தாங்கறது எக்ஸ்ட்ரா இன்ஃபர்மேசன்..

விமானம் கிளம்பினதும் அசந்து தூங்கிடறவர்.. கண் விழிக்கும் போது அவரோட மகளைக் காணோம்னு தேட ஆரம்பிக்கிறார்.. விமானத்துல இருக்கற யாருமே அவரோட மகளைப் பார்க்கலைன்னு சொல்றாங்க.. கைல் மகளைக் காணோம்னு விமானத்துக்குள்ள அனெளன்ஸ் பண்றாங்க.. அப்புறம் அவரோட தொல்லை பொறுக்காம.. கேப்டனோட பர்மிஷனோட.. ஃபிளைட் ஸ்டாஃப்ஸ் எல்லாருமே சேர்ந்து சின்னப் பொண்ணைத் தேட ஆரம்பிக்கிறாங்க.. ம்ஹும் எங்கேயும் கிடைக்கல..

கேப்டனுக்கு ஒரு நியூஸ் கிடைக்குது.. கைல் விமானத்துக்குள்ள ஏறும்போது அவர்கூட எந்த சின்னப் பொண்ணும் இல்லைங்கறதுதான் தகவல்.. அப்புறம் அதோட தொடர்ச்சியா இன்னொரு நியூஸ்.. கைலோட கணவர் இறக்கும்போதே.. அவரோட மகளும் இறந்திட்டார்ங்கறதுதான் அந்த நியூஸ்.. ரைட்டு அப்போ முதல் காட்சி மாதிரி கற்பனையாக நினைச்சுப் பார்த்திட்டு வந்திருக்கார்னு முடிவுக்கு வரமுடியுது நம்மால.. ஆனால் கைல்.. மகளோடதான் விமானத்துக்குள்ள வந்தேன்னு அடம் பிடிக்க.. கேப்டனுக்கு கோவம் வந்து அவரைக் கண்காணிக்கிற பொறுப்பை.. அந்த விமானத்துல இருக்கற கார்சன் அப்படிங்கற அதிகாரிகிட்ட ஒப்படைக்கிறார்.. கைல்லோட கணவர் இறந்ததால அவருக்கு மூளை பிசகிறுச்சுன்னு எல்லாரும் நினைக்க ஆரம்பிக்கிறாங்க..

விமானத்துல இருக்கற ஒரு டாக்டர்.. கைல்கிட்ட வந்து பேசறார்.. டாக்டர் பேசப்பேச.. தன்னோட மகள் செத்துதான் போச்சுன்னு கைல்லும் நம்ப ஆரம்பிக்கிறார்.. ஆனால் அந்த யோசனையை உடனே மாத்திக்கிற மாதிரி ஒரு காட்சி வருது..

கண்காணிப்புல இருக்கற கைல்.. அதிகாரி கார்சனை ஏமாற்றிட்டு.. பயணிகள் எல்லாரும் பயப்படற மாதிரி சில வேலைகள் செய்திட்டு.. அவரோட கணவரோட சவப்பெட்டி இருக்கற இடத்துக்குப் போய்.. பொண்ணைக் காணோம்னு அவரைப் பார்த்து அழுதுக்கிட்டிருக்கார்.. அவரை கைவிலங்கு போட்டு திரும்பவும் அவரோட சீட்ல கொண்டு போய் உட்கார வைச்சிடறாங்க..

கைலை இன்னொரு பணிப்பெண்கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு அதிகாரி கார்சன்.. கைல்லோட கணவர் சவப்பெட்டி இருக்கற இடத்துக்குப் போய்.. சவப்பெட்டியை உடைச்சு.. அதுக்குள்ள இருந்து.. வெடிகுண்டுகளை வெளியே எடுக்கிறார்.. அந்த வெடிகுண்டுகளை ஒரு இடத்துல போய் பிக்ஸ் பண்றார்.. அங்கேதான்.. கைலோட பொண்ணும் மயக்கமாகிக் கிடக்கு.. இப்போ பொண்ணு காணாமப்போனது உண்மைதான்னு நமக்குத் தெரியவருது..

கார்சன் நேரா கேப்டன்கிட்ட போய்.. கைல் விமானத்தை ஹைஜாக் பண்ணிட்டதாகவும்.. குழந்தை காணாமப் போனதாக நாடகமாடி.. விமானத்துக்குள்ள வெடிகுண்டை செட் பண்ணிட்டான்னும்.. அவள் கேக்கற தொகையை அவ அக்கெளண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணீட்டா எல்லாரையும் விட்டிறதாக சொல்றான்னு சொல்ல.. கேப்டனும் அதை நம்பிடறார்..

பணம் டிரான்ஸ்ஃபர் பண்ணப்படுது.. விமானத்தை உண்மையாகக் கடத்தினது யாரு?.. கைல் தன்னோட மகளை எப்படி மீட்கிறார்னு மீதித் திரைக்கதையில ரொம்ப விறுவிறுப்பாக சொல்லியிருப்பாங்க..

உண்மையிலயே கைல்லோட மகள் தொலைஞ்சுதான் போச்சா.. இல்லையான்னு.. பாதிப்படம் நகர்ற வரைக்குமே நம்மால டிசைட் பண்ண முடியாது.. ஆனால் படம் தொடக்கத்துல இருந்து.. மகளைத் தேடறேன்னு அவர் செய்ற வேலைகள் எல்லாமே ரொம்ப பரபரப்பாக இருக்கும்..

கைலோட மகளைக் கடத்தி.. விமானத்தை கார்சன்தான் ஹைஜாக் பண்ணினார்னு நமக்குத் தெரிய வந்தாலும்.. கடைசி வரைக்குமே விறுவிறுப்பு குறையாம நகருது திரைக்கதை..

கைல்தான் விமானத்தைக் கடத்திட்டார்னு வெளியே எல்லாரும் நம்பிக்கிட்டிருக்க.. கார்சன்தான் கடத்தினதுன்னு கைல்லுக்கு மட்டுமே தெரிய.. தன் மகளையும் காப்பாற்றி.. தன்னை லூசுன்னு நினைச்சுட்டு இருக்கற மத்தவங்கிட்டயும்.. உண்மையைக் கடைசியில் விளங்க வைக்கிறார்..

தன் மகளைக் காப்பாற்றி.. விமானத்துக்கு வெளியே அவர் நடந்துவரும் போது.. எல்லாரும் கைல்லை ஆச்சரியமாகவும்.. ஒருவிதமான குற்ற உணர்ச்சியோடவும் பார்க்கற சீன் அற்புதம்..

ஒருத்தருமே தன்னை நம்பலைன்னாலும்.. இருக்கற குழந்தையை செத்ததாக சொல்லி.. அவரை நம்ப வைச்சதுக்கப்புறமும்.. விடாமப் போறாடி குழந்தையை மீட்கிறார் கைல்.. அற்புதம்.. அருமையான திரில்லர் மூவி..


42 comments:

 1. @பாரத்... பாரதி...

  வாங்க நண்பா.. வணக்கம்.. :-)

  ReplyDelete
 2. கதையில சைக்காலஜி ரொம்ப விளையாடியிருக்கு..
  சவால் விடும் திறமையோடுதான் கார்சன் வில்லத்தனம் பண்ணுறாரு..
  இந்த கதையை குழப்பாமா திரையில் காட்டுவது என்பது சவாலான விஷயம் தான்..

  ReplyDelete
 3. விருவிருப்பா இருக்கும் போல இருக்கே

  ReplyDelete
 4. ரொம்ப விறுவிறுப்பான திரைப்படம். நல்ல விமர்சனம்.

  ReplyDelete
 5. எப்டி பாஸ் இப்படி அருமையான படமா பிடிக்கிறீங்க. படிக்கும் போதே பாக்க தோணுது.

  ReplyDelete
 6. இந்த படம் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ரொம்ப விறுவிறுப்பா இருக்கும்!

  ReplyDelete
 7. செம செம, படம் பாத்த ஃபீலிங் அப்படியே வருதுங்க...... சூப்பர்ப் விமர்சனம்

  ReplyDelete
 8. இது போன்ற படங்கள் தமிழில் எப்போ வரும்..?இப்போதான் பயணம் ஆரம்பிச்சாங்க நம்மாளுங்க குப்புற தள்ளிட்டாங்க

  ReplyDelete
 9. விமர்சனம் அருமை

  ReplyDelete
 10. பாரத்... பாரதி... said...

  கதையில சைக்காலஜி ரொம்ப விளையாடியிருக்கு..
  சவால் விடும் திறமையோடுதான் கார்சன் வில்லத்தனம் பண்ணுறாரு..
  இந்த கதையை குழப்பாமா திரையில் காட்டுவது என்பது சவாலான விஷயம் தான்..////

  உண்மைதாங்க.. ரொம்ப குழப்பமான கதைதான்.. ஆனால் எந்த இடத்துலயும் லாஜிக் மீறலே இருக்காது.. அருமையான படம்..

  ReplyDelete
 11. எல் கே said...

  விருவிருப்பா இருக்கும் போல இருக்கே///

  வாங்க எல்.கே..

  ReplyDelete
 12. மைதீன் said...

  ரொம்ப விறுவிறுப்பான திரைப்படம். நல்ல விமர்சனம்.////

  நன்றிங்க மைதீன்..

  ReplyDelete
 13. பலே பிரபு said...

  எப்டி பாஸ் இப்படி அருமையான படமா பிடிக்கிறீங்க. படிக்கும் போதே பாக்க தோணுது.///

  :-).. பாராட்டுக்கு நன்றிங்க நண்பா..

  ReplyDelete
 14. எஸ்.கே said...

  இந்த படம் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ரொம்ப விறுவிறுப்பா இருக்கும்!///

  வாங்க எஸ்.கே..

  ReplyDelete
 15. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  செம செம, படம் பாத்த ஃபீலிங் அப்படியே வருதுங்க...... சூப்பர்ப் விமர்சனம் ///

  :-).. பாராட்டுக்கு நன்றிங்க நண்பா..

  ReplyDelete
 16. ஆர்.கே.சதீஷ்குமார் said...

  இது போன்ற படங்கள் தமிழில் எப்போ வரும்..?இப்போதான் பயணம் ஆரம்பிச்சாங்க நம்மாளுங்க குப்புற தள்ளிட்டாங்க ////

  பயணம்.. தமிழ் திரையுலகில் ரொம்ப நல்ல முயற்சி.. அருமையான படங்க.. தியேட்டர்ல போய் இரண்டு முறை பார்த்தேன்..

  நன்றிங்க சதீஷ்குமார்..

  ReplyDelete
 17. விமர்சனம் அருமை பாபு. சான்ஸ் கிடைத்தால் இந்த படத்த கண்டிப்பா பார்பேன்.

  ReplyDelete
 18. N.H.பிரசாத் said...

  விமர்சனம் அருமை பாபு. சான்ஸ் கிடைத்தால் இந்த படத்த கண்டிப்பா பார்பேன். ////

  பாராட்டுக்கு நன்றிங்க பிரசாத்..

  ReplyDelete
 19. அருமையான விமர்சனம். ஜன்னல் கண்ணாடியில் வரைந்திருக்கும் ஒரு சின்ன படத்தை பார்த்து அவர் சுறுசுறுப்பாவரே..இந்த படம் பார்த்துட்டு Judie Foster படமாய் தேடி தேடி பார்த்தேன்.

  ReplyDelete
 20. பாபு, தற்செயலாக நம் இருவருக்கும் இடைவெளி விழுந்துவிட்டது. மன்னிக்கவும். பிளைட் ப்ளான் என் பேவரிட் படம். பார்த்துவிட்டேன்.

  ReplyDelete
 21. படம் பார்க்கணும்ங்கிற எண்ணத்தை தூண்டி விட்டீர்கள்...பார்த்து விடுகிறேன் பாஸ்...

  ReplyDelete
 22. சினிமா விமர்சனத்தில் நேரில் பார்ப்பது போன்ற உணர்வை தருகின்றன உங்களுடைய+ உண்மைத்தமிழனுடைய விமர்சனங்கள்.. பாராட்டுக்கள் பாபு

  ReplyDelete
 23. பாபு.. தமிழ்மண ஓட்டு விழலை.. என்னன்னு பாருங்க

  ReplyDelete
 24. அருமையான அறிமுகம்.இந்தப் படம் பார்த்ததில்லை ஆனால் ஏற்கெனவே கேள்விப் பட்டிருக்கேன்.
  //"அவரை நம்ப வைச்சதுக்கப்புறமும்.. விடாமப் "போறாடி" குழந்தையை மீட்கிறார் கைல்"//

  கடுமையான போராட்டம் போலும்!

  ReplyDelete
 25. அமுதா கிருஷ்ணா said...

  அருமையான விமர்சனம். ஜன்னல் கண்ணாடியில் வரைந்திருக்கும் ஒரு சின்ன படத்தை பார்த்து அவர் சுறுசுறுப்பாவரே..இந்த படம் பார்த்துட்டு Judie Foster படமாய் தேடி தேடி பார்த்தேன்.////

  பாராட்டுக்கு நன்றிங்க.. அந்த ஜன்னல் கண்ணாடியைப் பார்த்து அவர் மட்டுமில்லாம.. நமக்கும் ஜுர்ர்ன்னு இருக்கும்.. செம சீன்..

  ReplyDelete
 26. டக்கால்டி said...

  படம் பார்க்கணும்ங்கிற எண்ணத்தை தூண்டி விட்டீர்கள்...பார்த்து விடுகிறேன் பாஸ்...////

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 27. சி.பி.செந்தில்குமார் said...

  சினிமா விமர்சனத்தில் நேரில் பார்ப்பது போன்ற உணர்வை தருகின்றன உங்களுடைய+ உண்மைத்தமிழனுடைய விமர்சனங்கள்.. பாராட்டுக்கள் பாபு////

  சினிமா விமர்சன ஸ்பெசலிஸ்ட்.. நீங்க என்னை வாழ்த்தும்போது ரொம்ப சந்தோசமா இருக்குங்க.. சி.பி. ரொம்ப நன்றி..

  ReplyDelete
 28. சி.பி.செந்தில்குமார் said...

  பாபு.. தமிழ்மண ஓட்டு விழலை.. என்னன்னு பாருங்க////

  நானும் செக் பண்ணிட்டேன் சி.பி. சர்வர் பிராப்ளமாக இருக்கும்னு நினைக்கிறேன்.. அறிவுறுத்தியதற்கு நன்றிங்க..

  ReplyDelete
 29. ஸ்ரீராம். said...

  அருமையான அறிமுகம்.இந்தப் படம் பார்த்ததில்லை ஆனால் ஏற்கெனவே கேள்விப் பட்டிருக்கேன்.
  //"அவரை நம்ப வைச்சதுக்கப்புறமும்.. விடாமப் "போறாடி" குழந்தையை மீட்கிறார் கைல்"//

  கடுமையான போராட்டம் போலும்! ////

  வாங்க ஸ்ரீராம்.. ரொம்பக் கடுமையான போராட்டம்தான்.. நன்றிங்க..

  ReplyDelete
 30. யோவ்...இந்த படத்தை போன வாரம் தான்யா பாத்தேன்..இங்க ஒரு லோக்கல் டிவில போட்டாங்க...அருமையான படம்

  ReplyDelete
 31. செமதனமான விமர்சனம் படத்தை விட உங்க விமர்சனம் அருமை...

  ReplyDelete
 32. நண்பா சூப்பர் விமர்சனம் ,படத்த பாத்துடுறேன்

  ReplyDelete
 33. விமர்சனம் சூப்பர்.உங்கள் வலைப்பூவின் நேர்த்தி அருமை.

  ReplyDelete
 34. இந்த படத்த நானும் பார்த்திருக்கேன், அருமையா இருக்கும், உங்க விமர்சனம் நேரில் மீண்டும் பார்த்த உணர்வை தருகிறது, நல்ல எழுத்துநடை பாபு...

  ReplyDelete
 35. மைந்தன் சிவா said...

  யோவ்...இந்த படத்தை போன வாரம் தான்யா பாத்தேன்..இங்க ஒரு லோக்கல் டிவில போட்டாங்க...அருமையான படம்///

  வாங்க மைந்தன் சிவா..

  ReplyDelete
 36. MANO நாஞ்சில் மனோ said...

  செமதனமான விமர்சனம் படத்தை விட உங்க விமர்சனம் அருமை...////

  நன்றிங்க மனோ...

  ReplyDelete
 37. நா.மணிவண்ணன் said...

  நண்பா சூப்பர் விமர்சனம் ,படத்த பாத்துடுறேன்////

  வாங்க நண்பா.. பாராட்டுக்கு நன்றிங்க..

  ReplyDelete
 38. malgudi said...

  விமர்சனம் சூப்பர்.உங்கள் வலைப்பூவின் நேர்த்தி அருமை.///

  நன்றிங்க..

  ReplyDelete
 39. இரவு வானம் said...

  இந்த படத்த நானும் பார்த்திருக்கேன், அருமையா இருக்கும், உங்க விமர்சனம் நேரில் மீண்டும் பார்த்த உணர்வை தருகிறது, நல்ல எழுத்துநடை பாபு... ///

  பாராட்டுக்கு நன்றிங்க நண்பா..

  ReplyDelete
 40. அன்பு நண்பர்களே...
  எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
  எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி,
  டக்கால்டி.

  ReplyDelete
 41. wow. roma arumaiyaana kathai polirukke. next showkku reserve senjirren, hi hi :))

  ReplyDelete