.

Monday, March 14, 2011

தனிமைச் சிறகுகள் - பெங்களூர் பயணம்

"தனிமைச் சிறகுகள் - முதல் பயணம்" அப்படிங்கற தலைப்பில.. என்னுடைய சென்னை அனுபவங்களைப் பற்றி சுருக்கமாக எழுதியிருந்தேன்..

என்னுடைய அண்ணனுக்கு பெங்களூர்ல வேலை கெடைச்சதால.. நானும் அவர்கூடவே வந்துட்டேன்.. அப்படிங்கறதோட அந்தப் பதிவை முடிச்சிருந்தேன்.. முதல் பாகத்தைப் படிக்காதவங்களும் இந்தப் பதிவைத் தொடரலாம்.. உங்களுக்கு புரிதல் சிரமமாக இருக்காதுன்னு நினைக்கிறேன்..

பெங்களூர் வரும்போது மனசு முழுக்க ஏதோ எதிர்பார்ப்பு.. டூர் போறமாதிரி ஞாபகத்துலயே வந்துட்டேன்..

அண்ணன்.. இங்கே எலக்ட்ரானிக் சிட்டிங்கற ஏரியால தங்கியிருந்தார்.. வந்து ஒரு 2 நாள்.. என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியல.. சும்மா வீட்ல உட்கார்ந்து இருக்கறதுக்கு.. ஏதாவது பஸ்ல ஏறி.. எங்கேயாவது போயி சுத்திட்டு வாப்பான்னு சொன்னார் அண்ணன்.. இங்கே ஆட்டோ டிரைவர்ல இருந்து எல்லாரும் இங்கிலீஷ்தான் பேசுவாங்க.. அதனால யார்கிட்ட என்ன விசாரிச்சாலும் இங்கிலீஷ்லயே பேசு அப்படின்னார்.. பேசலாம்.. ஆனா எனக்கு இங்கிலீஷ் தெரியாதே.. :-)

"இந்த இடத்துக்கு எப்படிப் போறதுன்னு" இங்கிலீஷ்ல எப்படிக் கேக்கறதுன்னு மனப்பாடம் பண்ணிக்கிட்டேன்.. அன்னைக்கு முழுவதும் ஒரே ("இந்த இடத்துக்கு எப்படிப் போறது") இங்கிலீஷ்தான்.. :-)

நெக்ஸ்ட்.. வேலை தேடனும்ல.. சென்னையில் BPOல வேலை பார்த்ததால.. அதுல தேடலாம்னு முடிவு..

இங்கே இருக்கற கம்பெனிகளோட வெளித்தோற்றமே என்னை மிரட்டுச்சு.. உள்ளே இருக்கறவங்க கடிச்சு தின்னுடுவாங்களோன்னு பயம்.. எனக்குத் தெரிஞ்சு புதுசா வேலை தேடற பலருக்கு இந்த பயம் இருக்குன்னு நினைக்கிறேன்.. அதனால நியூஸ் பேப்பர்ல வர்ற பெரிய பெட்டி விளம்பரங்களை எல்லாம் பார்க்கவே மாட்டேன்.. சின்ன சின்னப் பெட்டிகள் எங்கேயிருக்குன்னு பார்த்து அங்கே போய் இன்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டே இருந்தேன்.. எங்கே போனாலும் சரி.. அண்ணன் சொல்லிக்கொடுத்து மக்கப் பண்ணின.. செல்ஃப் இன்ட்ரோடக்சன் மறந்து போய்.. பாதில பே பேன்னு பார்ப்பேன்..

பெங்களூர்ல எனக்குக் கிடைச்ச முதல் வேலைப் பற்றிக் கண்டிப்பா சொல்லியாகனும்.. :-)

ஒரு நாள் எப்பவும் போல ஒரு கம்பெனிக்கு இன்ட்டர்வியூ போனா.. நான் சென்னையில் பார்த்திட்டு இருந்த அதே வேலையைத்தான் டெஸ்டா வைச்சாங்க.. புதுக் கம்பெனி.. அப்போதான் ஆள் எடுத்துட்டு இருந்தாங்க..

ஒரு 2 கேள்வி குடுத்து 30 நிமிசம் டைம் கொடுத்தாங்க.. அந்த ரெண்டையும் செய்ய மொத்தமே 5 நிமிசம்தான் ஆகும்.. செய்து முடிச்சுட்டு காமிச்சா.. என்னை நம்பாம திரும்பவும் செய்துகாட்டுன்னு சொல்ல.. நானும் இன்னும் வேகவேகமா செய்து காட்டிட்டேன்.. அப்புறம் ஒரு நாலு பேர் ஒன்னாக்கூடி நின்னு பேசிட்டு.. என்னை ஒரு ரூமுக்கு அழைச்சிட்டுப் போயிட்டு.. எதுவுமே என்னைப் பற்றிக்கேக்காம.. நாங்க உன்னை செலக்ட் பண்ணிட்டோம்.. உனக்கு டீம்லீட் பொசிசன் தர்றோம்.. அப்படின்னுட்டாங்க.. எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு..

ரியலி.. நோ.. ஹவ்.. அப்படின்னேன்.. அதாவது.. எனக்கு இங்கிலீஷ் சரியா பேசவராதே.. நான் எப்படி டீமை மெயின்டெயின் பண்றதுன்னு கேக்க வந்தேன்.. :-).. அவங்களும்.. நான் என்ன கேக்க வந்தேன்னு தெளிவா புரிஞ்சுக்கிட்டாங்க.. அப்போ நான் கரெக்டாதான் பேசியிருக்கேன்.. :-).. கவலைப்படாதே.. உனக்கு நாங்க அசைன் பண்ற 8 பொண்ணுங்களுக்கும் தமிழ் தெரியும்.. நீ இப்போவே ஜாயின் பண்ணீடுன்னு சொல்லிட்டாங்க.. ரைட்டு.. அப்படியே.. ஒரு டீம் லீடரா புளோருக்குள்ள வந்தேன்.. :-)

எனக்கு தெரிஞ்ச விசயங்களை எல்லாம் சொல்லிக்கொடுத்து.. அந்தப் பொண்ணுங்க எல்லாம் நல்லாவே ஒர்க் பண்ணினாங்க.. ஆனால் அந்தக் கம்பெனியோட பியூச்சர் பத்தி எனக்கு கொஞ்ச நாள்லயே தெரிஞ்சுடுச்சு.. இங்கே ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லனும்.. நான் சென்னையில் குவாலிட்டி கண்ட்ரோலராக ஒர்க் பண்ணிட்டிருந்த கம்பெனியில் என்னுடைய முக்கிய வேலை என்னன்னா.. எங்ககிட்ட இருந்து வேலை வாங்கிப் பண்ற கம்பெனிகள்.. அனுப்புற எல்லா பைல்லையும் 6 தப்பு கண்டுபிடிக்கனும்.. அப்படி கண்டுபிடிக்கற பைல்ஸ் எல்லாம் ரிஜெக்ட் ஆகி.. அந்தக் கம்பெனிகளுக்கு பணம் கிடைக்காது..

இங்கே பெங்களூர் கம்பெனியும் அங்கேதான் இந்த வேலையை வாங்கியிருக்கறது தெரிஞ்சதுமே.. அவங்ககிட்ட போய் எச்சரிச்சேன்.. என்னை அவங்க நம்பல.. ரைட்.. நான் சொன்ன மாதிரியே நடந்துச்சு.. என்னுடைய டீம் பொண்ணுங்க எல்லாம் ஒரு இடத்துல வேலை வாங்கிட்டோம் சார்.. நீங்களும் வந்து அட்டெண்ட் பண்ணுங்கன்னு போன் பண்ணுச்சுங்க.. என்னக் கொடுமை சார் இது.. அங்கே என்னை செலக்ட் பண்ணல.. :-)..

நெக்ஸ்ட் சில கம்பெனிகள்ல வேலை செய்ததுக்கு அப்புறம்.. "Indicomm Global Services" அப்படிங்கற கம்பெனியில் வேலை கிடைச்சது.. இந்தக் கம்பெனியோட பெருமை என்னன்னா.. தமிழ்நாட்டுல இருந்து புதுசா வர்றவங்க எல்லாரும் வேலை கொடுத்து.. வேலை பெண்டை நிமித்திடுவாங்க.. ஆனால் புதுசா வர்றவங்க.. தாராளமா இங்கே வரலாம்.. கண்டிப்பா வேலை உண்டு..

மீதிக்கதையை அடுத்த பாகத்தோட முடிச்சுக்கறேங்க.. வர்றேன்.. :-)
35 comments:

 1. நல்லதுக்கு காலம் இல்லையே

  ReplyDelete
 2. வாழ்க்கை பயணம் தொடரட்டும்.....

  ReplyDelete
 3. பாபுக்கு மச்சம் தான்.. ஏகப்பட்ட ஃபிகர் சுத்தி இருக்கு போல...

  ReplyDelete
 4. நல்லாப் போகுது, அப்புறம் எப்படியாவது ஒரு வேலை வேணும்னு பெங்களுரு போறவங்களுக்கு ஒரு வழிய காட்டிட்டீங்க...!

  ReplyDelete
 5. // ஃபிகர் சுத்தி இருக்கு போல.//
  அதுதான் 'பெண்களூர்' ஆச்சே.
  பாபு, மீ ஆல்ஸோ பாவம் , ஸேம் ப்ளட் :))

  ReplyDelete
 6. பாபு அந்த டீம் மெம்பர்ஸ் எல்லாம் எந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாங்க.. சும்மா ஒரு டீட்டெல்ஸ்க்காகத்தான் ஹ ஹ ஹ ஹா

  ReplyDelete
 7. இப்ப அந்த எட்டு பொண்ணுங்களும் எங்க வேலை பார்க்குதுங்க பாபு? :))

  ReplyDelete
 8. கலக்குறிங்க பாபு, புது வேலை, புது பிகருங்க. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. adada!!! vadai poche!! naan andha ettu ponnungala sonnen!!!

  ReplyDelete
 10. நல்லா சொல்லி இருக்கீங்க, ஏன் பாதில நிறுத்திட்டீங்க, முழுசாவே சொல்லி இருக்கலாம்

  ReplyDelete
 11. எல் கே said...

  நல்லதுக்கு காலம் இல்லையே////

  வாங்க எல்.கே.. சரியாக சொன்னீங்க நல்லதுக்கு ஏது காலம்..

  ReplyDelete
 12. MANO நாஞ்சில் மனோ said...

  வாழ்க்கை பயணம் தொடரட்டும்.....////

  நன்றிங்க..

  ReplyDelete
 13. சி.பி.செந்தில்குமார் said...

  பாபுக்கு மச்சம் தான்.. ஏகப்பட்ட ஃபிகர் சுத்தி இருக்கு போல...////

  ஹா ஹா ஹா.. அதான் உடனே கம்பெனியை மூடிட்டாங்களே.. :-(

  ReplyDelete
 14. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நல்லாப் போகுது, அப்புறம் எப்படியாவது ஒரு வேலை வேணும்னு பெங்களுரு போறவங்களுக்கு ஒரு வழிய காட்டிட்டீங்க...!////

  நன்றிங்க நண்பா..

  ReplyDelete
 15. அரபுத்தமிழன் said...

  // ஃபிகர் சுத்தி இருக்கு போல.//
  அதுதான் 'பெண்களூர்' ஆச்சே.
  பாபு, மீ ஆல்ஸோ பாவம் , ஸேம் ப்ளட் :))////

  நல்லது நண்பா.. நீங்களும் நம்மளை மாறித்தானா.. :-)

  ReplyDelete
 16. @VELU.G said...

  பாபு அந்த டீம் மெம்பர்ஸ் எல்லாம் எந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாங்க.. சும்மா ஒரு டீட்டெல்ஸ்க்காகத்தான் ஹ ஹ ஹ ஹா////

  வைகை said...

  இப்ப அந்த எட்டு பொண்ணுங்களும் எங்க வேலை பார்க்குதுங்க பாபு? :))////

  ஹா ஹா ஹா.. இப்போ ஞாபகம் இல்லைங்களே.. :-)

  ReplyDelete
 17. N.H.பிரசாத் said...

  கலக்குறிங்க பாபு, புது வேலை, புது பிகருங்க. வாழ்த்துக்கள்.////

  இது பழைய வேலை, பழைய பிகருங்க பிரசாத்.. :-)

  வாழ்த்துக்களுக்கு நன்றிங்க..

  ReplyDelete
 18. Madurai pandi said...

  adada!!! vadai poche!! naan andha ettu ponnungala sonnen!!!////

  ஷேம் ஃபீலிங் நண்பா.. வடை போச்சே.. :-)

  ReplyDelete
 19. இரவு வானம் said...

  நல்லா சொல்லி இருக்கீங்க, ஏன் பாதில நிறுத்திட்டீங்க, முழுசாவே சொல்லி இருக்கலாம் ////

  ம்ம்ம்... பதிவு ரொம்ப லெந்தியாயிடும்னு தோனுச்சுங்க நண்பா.. அதான் நிறுத்திட்டேன்.. நன்றிங்க..

  ReplyDelete
 20. //ஆனா எனக்கு இங்கிலீஷ் தெரியாதே.. //

  but உலகத்திரைப்படங்களின்
  விமர்சனங்களில் கலக்குறீங்களே எப்படி # ட்வுட்.

  ReplyDelete
 21. நல்ல விறு விறுப்பா போகுதுங்க...

  வேலை கிடைச்சதுக்கு எப்போ விருந்து ???

  ReplyDelete
 22. எப்படியோ கஷ்டப்பட்டு வேலை கிடைச்சிடுச்சு! அடுத்த பாகம் எதிர் பார்க்கிறேன்!:-)

  ReplyDelete
 23. //Indicomm Global Services" அப்படிங்கற கம்பெனியில் வேலை கிடைச்சது.. இந்தக் கம்பெனியோட பெருமை என்னன்னா.. தமிழ்நாட்டுல இருந்து புதுசா வர்றவங்க எல்லாரும் வேலை கொடுத்து.. வேலை பெண்டை நிமித்திடுவாங்க..//

  வேலை கிடைக்கும் ஓகே. பெண்டை நிமித்திடுவாங்கனா என்ன வேலை?

  ReplyDelete
 24. வெளிப்படையான மன வெளிப்பாடுகளில் எழுத்துக்கள். சுவாரஸ்யம்..

  ReplyDelete
 25. பாரத்... பாரதி... said...

  //ஆனா எனக்கு இங்கிலீஷ் தெரியாதே.. //

  but உலகத்திரைப்படங்களின்
  விமர்சனங்களில் கலக்குறீங்களே எப்படி # ட்வுட்.////

  சப்டைட்டில் யூஸ்பண்ணித்தான்... :-)..

  ReplyDelete
 26. அரசன் said...

  நல்ல விறு விறுப்பா போகுதுங்க...

  வேலை கிடைச்சதுக்கு எப்போ விருந்து ???///

  நன்றிங்க அரசன்.. இது ரொம்ப பழைய வேலை ஆச்சே.. புது வேலைக்குப் போகும்போது கொடுக்கறேங்க.. :-)

  ReplyDelete
 27. எஸ்.கே said...

  எப்படியோ கஷ்டப்பட்டு வேலை கிடைச்சிடுச்சு! அடுத்த பாகம் எதிர் பார்க்கிறேன்!:-)////

  நன்றிங்க எஸ்.கே..

  ReplyDelete
 28. பலே பிரபு said...

  //Indicomm Global Services" அப்படிங்கற கம்பெனியில் வேலை கிடைச்சது.. இந்தக் கம்பெனியோட பெருமை என்னன்னா.. தமிழ்நாட்டுல இருந்து புதுசா வர்றவங்க எல்லாரும் வேலை கொடுத்து.. வேலை பெண்டை நிமித்திடுவாங்க..//

  வேலை கிடைக்கும் ஓகே. பெண்டை நிமித்திடுவாங்கனா என்ன வேலை?////

  ரொட்டின் ஷிஃப்ட்ல போடுவாங்க.. ஒருவாரத்து 3 நாளாவது தொடர்ந்து 15 மணிநேரம் ஒர்க் பண்ண விடுவாங்க.. ஆனால் வேலை நாம போற டீமைப் பொருத்ததுதான்..

  ReplyDelete
 29. ஸ்ரீராம். said...

  வெளிப்படையான மன வெளிப்பாடுகளில் எழுத்துக்கள். சுவாரஸ்யம்.. ////

  நன்றிங்க ஸ்ரீராம்..

  ReplyDelete
 30. நண்பா உனக்கு மச்சம் அதிகம் தான்

  ReplyDelete
 31. FARHAN said...

  நண்பா உனக்கு மச்சம் அதிகம் தான் ////

  அப்படிங்கற... :-)...

  வருகைக்கு நன்றி நண்பா..

  ReplyDelete
 32. நானும் கூட நேற்று resume அனுப்பி உள்ளேன். தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 33. பெண்டு நிமித்த அவுங்க என்ன ஆள் இன் ஆள் அழகுராஜவா பாஸ்...எங்க போனாலும் சும்மா கலந்து கட்டி ஆடுங்க..

  ReplyDelete
 34. சென்னை பற்றி எழுதியதை நான் வாசித்திருக்கிறேன்.இதுவும் நல்ல சுவாரசியமாக இருக்கு.தொடருங்க சகோ.

  ReplyDelete
 35. sorry for the latecoming hi hi... namma english!!!

  //முதல் பாகத்தைப் படிக்காதவங்களும் இந்தப் பதிவைத் தொடரலாம்.. உங்களுக்கு புரிதல் சிரமமாக இருக்காதுன்னு நினைக்கிறேன்..//

  ithenna ponniyin selvanaa...aanaalumm 2222222222222222 much ;)))

  ReplyDelete