.

Wednesday, August 11, 2010

ட்விலைட் சாகா - திரைவிமர்சனம்


ட்விலைட் தொடர்நாவல்களை தழுவி எடுக்கப்பட்ட காதல் கற்பனைத் திரைப்படங்கள் தான் The Twilight Saga.. இந்தத் திரைப்படத்தொடர் இதுவரை Twilight, The Twilight Saga: New Moon, Twilight Saga: Eclipse அப்படின்னு மூணு படங்களா வெளிவந்திருக்கு. இதுல வந்த ஒவ்வொரு படமும் பயங்கர ஹிட்.. சரி இப்ப அந்தப் படங்களப் பத்தி கொஞ்சம் பார்ப்போம்..

நம்ம படத்தோட கதாநாயகி இசபெல்லா.. தன்னோட அம்மா இன்னொரு ஆள கல்யாணம் பண்ணிக்கறதால தன்னோட அப்பா இருக்கற ஊருக்கு வந்து தங்கறாங்க.. தன்னோட படிப்பை கண்டினியூ பன்றதுக்கு அந்த ஊர்ல இருக்கற ஒரு காலேஜ்லயும் ஜாயின் பண்றாங்க.. அங்க அவரோட கிளாஸ்ல படிக்கிற எட்வர்ட் கல்லன் அப்படிங்கறவர தன்னையும் அறியாம காதலிக்க ஆரம்பிக்கிறார்.. ஆனா எட்வர்ட் ஆரம்பத்துல இருந்து அவங்ககிட்ட இருந்து விலகி விலகி போறார்.. அப்புறம் கொஞ்ச நாள்ல எட்வர்ட் ஒரு வேம்பயர்கிறது இசபெல்லாவுக்கு தெரிஞ்சுபோயிடுது.. ஆனா எட்வர்ட் பேமிலில இருக்கறவங்க மனுசங்க இரத்தத்தை குடிக்காம விலங்குகள் இரத்தத்தை மட்டுமே குடிக்கிற நல்ல வேம்பயருங்க.. ஆனாலும் இசபெல்லா தொடந்து எட்வர்ட் மேல பிரியம் வைச்சிருக்காங்க.. அப்புறம் எட்வர்டும் இசபெல்லாவும் லவ் பண்ண ஆரம்பிச்சடறாங்க..

இந்த சமயத்துல இன்னொரு வேம்பயர் டீம்ல இருக்கற ஜேம்ஸ் அப்படிங்கறவர் இசபெல்லா ஒரு மனுசிங்கறதத் தெரிஞ்சுகிட்டு அவர வேட்டையாட நினைக்கிறார்.. இசபெல்லாவக் கொல்லனுங்கற அவரோட திட்டத்தை முறியடிச்சு ஜேம்ஸை அழிச்சிடறாங்க எட்வர்ட் குடும்பத்தை சேர்ந்தவங்க..

இசபெல்லா உயிருக்கு இப்படி ஆபத்து வர்றதால அந்த ஊரைவிட்டே போயிடறாங்க எட்வர்ட்டும் அவரு குடும்பமும்.. அவரு போயிட்டாலும் அவரோட நினைப்பிலேயே எப்பவும் இசபெல்லா இருக்காங்க.. அந்த சமயத்துல ஜேக்கப் அப்படிங்கறவர் கூட பிரண்ட்ஷிப் வைச்சிக்கறாங்க.. அந்த ஜேக்கப் யாருனா ஓநாயா மாற்ற மனுசன்.. ஏற்கனவே ஜேம்ஸ்னு ஒருத்தர எட்வர்டு குடும்பத்து ஆளுங்க கொலை பண்ணாங்க இல்லையா.. அந்த ஜேம்ஸோட டீம்ல இருந்த விக்டோரியா.. இசபெல்லாவ பழி வாங்கறதுக்காக அந்த ஊருக்கு வர்றாங்க.. அவங்ககிட்டயிருந்து ஜேம்ஸும் அவரோட ஆளுங்களும் இசபெல்லாவுக்கு பாதுகாப்புத் தர்றாங்க.. ஆனா நம்ம எட்வர்ட் இசபெல்லா இறந்துட்டதா தப்பா நினைச்சிட்டு தற்கொலைக்கு முயற்சி பண்றார்.. அதுக்குள்ள இசபெல்லா அவரக் காப்பாத்திடறாங்க..  அதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேரும் எட்வர்ட விட பெரிய வேம்பயருங்க கிட்ட மாட்டிக்கறாங்க.. வருங்காலத்துல இசபெல்லா வேம்பயர் ஆயிடுவாங்கன்னு அந்த பெரிய வேம்பயர் தன்னோட பவர் மூலமா தெரிஞ்சுக்கிறதால அவங்க ரெண்டு பேரையும் விட்டுடறார்.. எட்வர்ட்டும், இசபெல்லாவும் அவங்க ஊருக்கு ஒன்னா திரும்ப வந்திடறாங்க..

விக்டோரியா ஞாபகம் இருக்கு இல்லையா.. அவங்க எட்வர்ட் குடும்பத்தோட சண்டை போடறதுக்கும் இசபெல்லாவ பழிவாங்கவும் ஒரு பெரிய வேம்பயர் படையையே திரட்டறாங்க.. இதுக்குள்ள இசபெல்லாவ எட்வர்ட், ஜேக்கப் இரண்டு பேருமே லவ் பண்றதால இவங்கள்ல ஒருத்தர அவங்க சூஸ் பண்ணனும்ங்கற கட்டாயத்துக்கு தள்ளப்படறாங்க.. ஆனாலும் அதையெல்லாம் மனசுல வைச்சுக்காம எட்வர்ட்டோட வேம்பயர் குரூப்பும், ஜேக்கப்போட ஓநாய் குரூப்பும் சேர்ந்து விக்டோரியாவோட டீமை அழிக்கறாங்க.. இப்போ முடிவுல எட்வர்ட்தான் எனக்குப் பிடிச்சிருக்குன்னு அவர கல்யாணம் பண்ணிக்க இசபெல்லா சம்மதிக்கறாங்க.. அவ்லோதான்..

இந்த மூணு படங்கள்ல நான் முதல்ல ரெண்டாவது படம் நியூமூனத்தான் முதல்ல பார்த்தேன்.. அதுல எட்வர்ட்டும், இசபெல்லாவும் ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கறதே ரொம்ப அழகா இருக்கும்.. ரொம்ப இளமையான காதல் ஜோடியா இருப்பாங்க ரெண்டு பேருமே.. இந்தப் படம் பிடிச்சதாலயே தொடர்ந்து முதல் பார்ட்டையும், இப்போ ரீசண்டா வெளியான கடைசி பார்ட்டையும் பார்த்தேன்..

இந்த ரெண்டு பாகங்களும் என்னப் பொருத்தவரையில நியூமூன் மாதிரி இல்லைன்னுதான் சொல்வேன்.. முதல் பாகம் ட்விலைட் ரொம்ப நீளமா இருக்கற மாதிரி ஃபீல் ஆனது.. இப்போ வெளியான எக்லிப்ஸ் கொஞ்சம் சொதசொதன்னு போறமாதிரி ஃபீல் ஆகும்.. இருந்தாலும் ட்விலைட் சாகா பார்க்கவேண்டிய தொடர்தான்..

குறிப்பு - இந்தப்பதிவுல மூனுபடத்தப் பத்தியும் சொல்லியிருக்கறதால ஒவ்வொரு பாகத்தையும் வித்தியாசப்படுத்த கலர் கொடுத்திருக்கேன்.. ஓகேவா..

2 comments:

  1. விமர்சனம் நன்றாக உள்ளது!
    நன்றிகளும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  2. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எஸ்.கே..

    ReplyDelete