.

Friday, August 20, 2010

பெங்களூரு ஜீவனா..

 தினமும் இப்படி டிராஃபிக் இருந்தா எப்படி ஆபிஸ் போறது!!
பெங்களூர் வாழ்க்கை அப்படிங்கறதுதான் இந்தப் பதிவோட தலைப்பு..

ஆக்சுவலா இந்த பதிவு.. இங்க எவ்வளவு இடங்கள் சுத்திப் பார்க்க இருக்கு.. அப்படிங்கறதைப் பத்தி இல்ல.. இங்க இருக்கறவங்க எதை விரும்பறாங்க.. இங்க இருக்கும் போது நமக்கு என்னென்ன அனுபவங்கள் கிடைக்கும் அப்படிங்கறதைத் தான் சொல்ல முயற்சி பண்றேங்க..

பெங்களூருக்கு முதன் முதலா வர்றவங்களுக்கு எந்த அனுபவம் கிடைக்குதோ இல்லையோ டிராஃபிக் அனுபவம் கண்டிப்பா கிடைக்கும்.. பஸ்ல டிராவல் பண்றப்போ ஒரு ஸ்டாப்பிங்ல இருந்து அடுத்த ஸ்டாப்பிங் போறதுக்கே 1 மணி நேரம் எல்லாம் ஆயிருக்கு.. அதனால இங்க வேலைக்குப் போறவங்களுக்கு பைக் இருந்தாதான் ரொம்ப செளகரியமா இருக்கும்.. பெங்களூர்ல பைக் ஓட்டிட்டா நீங்க எந்த நகரத்துக்கு வேணாலும் போய் வண்டி ஓட்டலாம்னு.. எல்லாரும் சொல்ற மாதிரி நானும் சொல்லலை.. ஆனால் நீங்க ஒரு தேர்ந்த பைக்கர் ஆயிடுவிங்க..

டிராஃபிக்குக்கு பயந்து பைக் வாங்கிட்டோம்.. அப்போ அடுத்த ஸ்பெசல் இங்க இருக்கற டிராஃபிக் போலீஸ்தான்..

அந்நியன் படத்துல வர்ற விக்ரம் மாதிரி என்னதான் டிராஃபிக் ரூல்ஸ் மீறாம இங்க வண்டி ஓட்டினாலும்.. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல சின்னதா ரூல்ஸ் மீற வேண்டிய சந்தர்ப்பம் வரும்.. உதாரணமா நமக்கு முன்னாடி இருக்கற பஸ்சைக் கடந்துட்டோம்னா ஃப்ரீ லெஃப்ட்டுல நீங்க போயிடற மாதிரி இருக்கும்.. ஆனா நீண்ட நேரமா அதே இடத்துல டிராஃபிக் காரணமா நின்னுட்டே இருப்போம்.. நமக்கு பின்னாடி வர்றவங்க எல்லாம் பக்கத்துல இருக்கற ஃபிளாட்பாம்ல லைட்டா ஏறி அந்த பஸ்சைக் கடந்து ஃப்ரீ லெஃப்ட் எடுத்து போயிட்டே இருப்பாங்க.. நாமளும் எவ்வளவு நேரம்தான் பொறுமையா பார்த்துட்டே இருக்கறது.. சரி நாமலும் செஞ்சுதான் பார்ப்போமே அப்படின்னு அவ்வழியே கடைபிடிப்போம்.. நாளடைவில் இது பழக்கமாயிடும்..


ஆனா அந்த சமயத்துல உங்களுக்கு நல்ல நேரம் இருக்கணும்.. ஏன்னா இங்க இருக்கற டிராஃபிக் போலிஸ் எல்லாரும் ரோட்ல நின்னு டிராஃபிக்கை கிளியர் பண்ண மாட்டாங்க.. அப்படி அவங்க வேலையைப் பார்த்துட்டு இருந்தாங்கன்னா நமக்கு இந்த மாதிரி சூழ்நிலையே வராது.. ஆனா அவங்க ஏதாவது மரத்துக்குப் பின்னாடி அவங்க பைக்கைப் பார்க் பண்ணி மறைஞ்சு உக்காந்துக்கிட்டு இப்படி எவனாவது ரூல்ஸ் பிரேக் பண்ரானான்னு பார்த்துட்டே உக்காந்துருப்பாங்க.. சில இடங்கள்ல பார்த்தோம்னா ரோட்ல ரெண்டு சைடுலயுமே மறைஞ்சு உக்காந்துருப்பாங்க.. யாரும் தப்பிடக்கூடாது பாருங்க அதான்.. அன்னைக்கு நீங்க பலிகடான்னா திடீர்னு ஓடிவந்து கண்ணிமைக்கிற நேரத்துல உங்க பைக் சாவியை எடுத்துட்டு போயி அவங்க பைக்ல உக்காந்துடுவாங்க.. நாம மறுபேச்சு பேசாம 100 ரூபாய் கொடுத்தாதான் சாவி கொடுப்பாங்க.. என்ன செய்றது.. மனசு வலிக்க காசக்கொடுத்திட்டு சாவியை வாங்கி வரவேண்டியிருக்கும்.. இப்படி மாட்டிட்டோம்னா.. ச்சே.. கரெக்டா ரூல்ஸைக் கடைபிடிச்சிருந்தா இப்படி ஆயிருக்குமான்னு நம்மளைத் திட்டிக்குவோம்.. ஆனா என்ன பண்றதுங்க.. ஆபிஸ் போற அவசரம்.. அப்படி.. இப்படின்னு ஆயிரம் காரணங்களால இப்படி நடந்துடுது..

அப்புறம் இங்க இருக்கற பெரிய பிரச்சினை பார்க்கிங்.. ஒவ்வொரு ஏரியாவிலும் பார்க்கிங்க்கு ஒரு பகுதியை அலாட் பண்ணியிருந்தாங்கன்னா பிரச்சினையே இல்ல.. அப்படி ஏதும் இல்லாததால கிடைக்கிற இடத்துல பைக்கை நிப்பாட்டிட்டு பயந்துட்டே நம்ம வேலையைப் பார்க்க போவோம்.. இதுல ஏதாவது தப்பான இடத்துல நிப்பாட்டிடோம்னா.. போலிஸ்காரங்க.. ஒரு லாரியை எடுத்துட்டு வந்து.. கிடைக்கிற வண்டிகளை எல்லாம் அப்படியே தூக்கிட்டு போயிடுவாங்க.. அதுவும் அவங்க தூக்கற ஸ்டைல் இருக்கே.. பைக் வைச்சிருக்கவங்க பார்த்தா கண்ணுல தண்ணி வந்துடுங்க.. முன்சக்கரத்தை ஒரு சங்கலில கோத்து நாய் கழுத்தைப் பிடிச்சு தூக்கற மாதிரி அப்படியே தூக்குவாங்க.. இப்படி வேற ஒருத்தர் வண்டிகளைத் தூக்கறதைப் பார்க்கறதுக்கே பகீர்னு இருக்கும்.. நம்ம வண்டி கண்ணுல ஃப்ளாஷ் அடிக்கும்..

இங்க பைக் எங்காவது மிஸ் ஆயிருந்தா.. திருடு போக சான்ஸ் ரொம்ப கம்மிதான்.. இங்க இருக்கற போலிஸ்காரங்கதான் தூக்கியிருப்பாங்க.. அங்க போனா.. வண்டியை தூக்க அவங்க வச்சிருக்கற ஆளுங்ககிட்ட தான் போய் பேசணும்.. அங்க இன்சார்ஜா இருக்கறவர்.. ஒரு ஓரமா நின்னு பார்த்துட்டு இருப்பார்.. அவங்க டீலுக்கு ஒத்து வந்தா.. தூக்கறவங்களுக்கு 100 ரூபாய்.. இன்சார்ஜுக்கு 200 ரூபாய்.. அப்புறம் என்ன கண்டிப்பா அவங்க டீலுக்கு ஒத்து வந்தே ஆகணும்..

சரிங்க இந்தக்கதை போதும்.. வேற என்ன சொல்லலாம்.. ம்ம்ம்...

இங்க இருக்கற ஹோட்டல்ல முதல் தடவை சாப்பிட்டோம்னா.. அட.. அட.. அட.. சூப்பரா இருக்கும் போங்க.. ரொம்ப புகழரேன்னு நினைக்காதிங்க.. இங்க சாம்பார்ல இனிப்பு போடாறாங்களாம்.. அதனால சாம்பார் ஊத்தி சாப்பிட்டா இனிப்பா இருக்கும்.. வேற என்ன செய்றது.. சாப்பிட வேண்டியதுதான்.. நோ அதர் ஆப்சன்..

சரிங்க.. உங்களை ஃபோர் அடிக்காம இத்தோட முடிச்சுக்கறேன்..

பெங்களூரைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா இதையும் படிங்க..
8 comments:

 1. பெங்களூரு டிராபிக் படு மோசம்.. மற்றபடி போலிஸ் வண்டிய தூக்குறது இன்காயம் நடக்குது..

  ReplyDelete
 2. அப்துல் காதர் (எ) பாபு,
  பரவாயில்லை, ஆரம்பிச்சு 20 நாள்ல 12 பதிவு போட்டுட்டீங்க. பதிவுகள் நல்லா இருக்கு. மேலும் வளர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நம்ம ஊர் போல தான் இருக்கு

  ReplyDelete
 4. பெங்களுருக்கு சின்ன வயசுல ஒரு 3 தடவை போயிருக்கேன். அப்ப, எனக்கு ரொம்ப பிடிச்ச ஊருதான்... ஆனா, இப்ப உங்க பதிவை படிச்சதுக்கப்புறம், தலைவச்சி படுக்க கூடாதுன்னு நினைக்கிறேன்த. நல்ல நடை... பகிர்வுக்கு நன்றி..!

  -
  DREAMER

  ReplyDelete
 5. பதிவுகள் படங்கள் அருமை!!

  ReplyDelete
 6. இங்க இருக்கற ஹோட்டல்ல முதல் தடவை சாப்பிட்டோம்னா.. அட.. அட.. அட.. சூப்பரா இருக்கும் போங்க.. ரொம்ப புகழரேன்னு நினைக்காதிங்க.. இங்க சாம்பார்ல இனிப்பு போடாறாங்களாம்.. அதனால சாம்பார் ஊத்தி சாப்பிட்டா இனிப்பா இருக்கும்.. வேற என்ன செய்றது.. சாப்பிட வேண்டியதுதான்.. நோ அதர் ஆப்சன்..


  .......... ஆமா..... அய்யோ, மசாலா தோசையில் கூட, உருளை மசாலாவில் இனிப்பு - சாம்பார் இனிப்பு.... சாப்பிட வித்தியாசமாக (கஷ்டமாக) இருந்தது.
  Traffic jam - nightmare!!!

  ReplyDelete
 7. பெங்களுரை பற்றி நிறைய தெரிந்து கொண்டோம்.இன்னும் தொடருங்கள்.

  ReplyDelete
 8. @கே.ஆர்.பி.செந்தில்..

  வருகைக்கு நன்றிங்க..

  @DrPKandaswamyPhD..

  உங்களது முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி..

  @சௌந்தர்..
  வருகைக்கு நன்றிங்க..

  @DREAMER..

  டிரீமர் நீங்க என்னோட வலைப்பதிவுக்கு வந்ததுக்கு ரொம்ப சந்தோசம்..

  @எம் அப்துல் காதர்..
  நன்றிங்க..

  @சித்ரா..
  ஹா ஹா ஹா.. நீங்களும் அந்தக் கொடுமைய அனுபவிச்சிருக்கீங்களா..
  வருகைக்கு நன்றி..

  @காயலாங்கடை காதர்..
  நன்றிங்க.. கண்டிப்பா தொடர்றேங்க..

  ReplyDelete