.

Wednesday, August 25, 2010

பதிவுலகில் நான் - தொடர் பதிவு


இதுவரைக்கும் இந்த தொடருக்கு ஓட்டு மட்டுமே போட்டுட்டு இருந்த என்னைத் தொடரக்கூப்பிட்ட நண்பர்.. பிரியமுடன் ரமேஷ் மற்றும் அதை படிச்சுட்டு இருக்கற நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..
 

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பதிவுலகில் பாபுன்னு வைச்சிருக்கேங்க..

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பேருதாங்க.. நண்பர்கள் என்னைப் பெரும்பாலும் அப்துல்காதர்னு கூப்பிடுவாங்க.. வீட்ல என்ன பாபுன்னு கூப்பிடுவாங்க.. ஏனோ என்னை பாபுன்னு கூப்பிட்டா ரொம்ப பிடிக்கும்.. அதுக்காக அப்துல்காதர்னு கூப்பிட்டா பிடிக்காதான்னு மடக்காதீங்க..

ஆக்சுவலா "பதிவுலகில் நான்" அப்படின்னுதான் என்னோட வலைப்பதிவுக்கு பேர் யோசிச்சு வச்சிருந்தேங்க.. சரி எதுக்கும் வேற யாராவது இந்தப் பெயரை வைச்சிருக்காங்களான்னு கூகுள்ல சர்ச் பண்ணினா இதே பெயர்ல நிறைய தொடர் பதிவுகள்.. அதனால இப்ப இருக்கற பெயரைத் தேர்வு செய்துட்டேன்.. நல்லாயிருக்குள்ள..

இப்போ அதே தொடர்ல நானும் எழுதறது இன்னும் சந்தோசமா இருக்கு..

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி?

வலைப்பதிவுகளைப் படிக்கறதுக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஆனா நானே இந்தப் வலைப்பதிவு எல்லாம் எழுதுவேன்னு நினைச்சே பார்க்கலைங்க.. என்னோட நண்பர் ரமேஷ்தான் எனக்கு ஊக்கம் கொடுத்தார்.....சோ எழுதிட்டேன்...

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எல்லாரும் செய்ற மாதிரி இன்ட்லி, தமிழ் 10, இனியதமிழ் இப்படி எல்லா தளங்களையும் பயன்படுத்திக்கறேன்.. ஆனா இன்னும் பிரபலம் எல்லாம் ஆகலைங்க..

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ம்ம்ம்.. ஆமாங்க நிறைய பகிர்ந்துக்கறேங்க.. நமக்கு பிடிச்ச.. நம்ம மனசுல நிக்கற விசயங்களை நம்ம நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கறதுல உண்மையிலயே ரொம்ப சந்தோசமா இருக்குங்க..

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

முதல்ல ஒரு பொழுதுபோக்குக்காகத்தாங்க பிளாக் படிக்கவே ஆரம்பிச்சேன்.. ஆனா எழுதறப்போ அப்படி ஃபீல் ஆகலை.. ஏதாவது நல்ல தகவல்களைத் தரமுடியுமான்னு முயற்சி பண்ணீட்டு இருக்கேன்..

7)  நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஓ.. இப்படி வேற செய்யலாமா.. ஏற்கனவே டமிழ்ல ஒரு வலைப்பதிவு எழுதிட்டு இருக்கேன்னு உங்களுக்கே தெரியும்.. தங்கிழிஷ்ல இனி ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்..

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

அப்படி குறிப்பிட்டு சொல்ற மாதிரி எல்லாம் இல்லைங்க.. ஆனா இங்க சில பேர் பிரபலமாகறதுக்காக பொய்யான தகவல்களைக் கொடுக்கறாங்க.. நாமளும் நம்ம இனம்தானேன்னு அப்படியே நம்பிடறோம்.. அதுமட்டும் தாங்க இங்க ஒரே குறையா நினைக்கிறேன்..

9) உங்கள் பதிவைப் பற்றி முதன் முதலில் உங்களை தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

ம்ம்ம்.. கண்டிப்பா முதல் பதிவுக்கு கிடைச்ச பாராட்டுகள் ரொம்ப சந்தோசமா இருந்ததுங்க.. அதுவும் முதல் பதிவாக.. என்னைப் பற்றி சுருக்கமா ஒரு அறிமுகம் குடுத்தேன் அவ்லோதான்.. அதையும் பாராட்டி என்னை ஊக்குவித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..

ஒரு பதிவருக்கு கிடைக்கிற பாராட்டுகள்தான் அவரது பதிவுகளை மேம்படுத்தும்னு அப்போ நல்லா புரிஞ்சது.. அதுலயிருந்து நல்ல பதிவுகளை நானும் பாராட்டவும் ஓட்டு போடவும் மிஸ் பண்றதே இல்ல..

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

இந்த வலைப்பதிவு முழுக்க நான் என்னைப்பத்தி தாங்க எழுதி வச்சிருக்கேன்.. நேரம் கிடைக்கறப்போ படிச்சுப்பாருங்க..

இந்த தொடரை எழுத வாய்ப்பளித்த, படித்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள்..


16 comments:

 1. பாராட்டுக்கள் ...

  ReplyDelete
 2. உங்கள் சுய பேட்டி நன்றாக இருந்தது...ஆனால் கேள்விகள் வேறு ஒரு தளத்தில் படித்து போல இருந்தது...அதை பற்றி ஒன்றும் இல்லை... ஓட்டுகளை கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்... வெற்றி நிச்சயம்...

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்,இன்னும் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 4. நல்ல கேள்வி பதில்கள்ங்க... நெறைய எழுதுங்க...

  ReplyDelete
 5. மனத்தின் பிரதிபலிப்பு! நல்ல பதில்கள்

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் நண்பா..நீங்க தொடரை முடிச்சி வச்சுடீங்க போல!!!!

  ReplyDelete
 7. // ஏதாவது நல்ல தகவல்களைத் தரமுடியுமான்னு முயற்சி பண்ணீட்டு இருக்கேன்.. //

  கண்டிப்பா... :)

  ReplyDelete
 8. @கே.ஆர்.பி.செந்தில்..
  பாராட்டுக்கு நன்றிங்க..

  @ராசராசசோழன்..
  உங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

  @காயலாங்கடை காதர்..
  ரொம்ப நன்றிங்க.. உங்களைப் போன்ற நண்பர்கள் இருக்கையில் எனக்கு கவலையில்லை..

  @அப்பாவி தங்கமணி..
  முதன்முறையாக என்னுடைய வலைப்பதிவிற்கு வந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி.. கண்டிப்பா நிறைய எழுதறேங்க.. நன்றி..

  @ப்ரியமுடன் வசந்த்..
  வருகைக்கு நன்றிங்க வசந்த்..

  @padaipali..
  ஹா ஹா ஹா.. தொடர் முடியவெல்லாம் இல்லங்க.. தொடரும்..

  @மகேஷ் : ரசிகன்..
  வருகைக்கு நன்றிங்க மகேஷ்..

  ReplyDelete
 9. எளிமையான பதில்களில் உங்களை அருமையாக அடையாளம் காட்டி இருக்கீங்க..... தொடர்ந்து அசத்த, வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. பதிவுலகில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. பாபு..
  பதில்கள் எல்லாம் படித்தேன்.. நல்லா இருக்குங்க..

  //அதனால இப்ப இருக்கற பெயரைத் தேர்வு செய்துட்டேன்.. நல்லாயிருக்குள்ள//

  ஆமா... நல்லா இருக்கு.. :-))

  ReplyDelete
 11. @சித்ரா..
  உங்களைப் போல நண்பர்கள் தொடர்ந்து எனக்கு ஊக்கம் கொடுத்துட்டு வர்றது எனக்கு ரொம்ப சந்தோசங்க..

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க..

  @ஆனந்தி..
  உங்களது வாழ்த்துக்கள் எனக்கு அதிகமான உற்சாகத்தை அளிக்குது.. நன்றி..

  ReplyDelete
 12. ரொம்ப நல்லா பதிவுலக தொடரை எழுதி அசத்திட்டிங்க.

  www.vijisvegkitchen.blogspot.com

  ReplyDelete
 13. நன்றி எம் அப்துல் காதர்..

  நன்றி Vijiskitchen..

  ReplyDelete
 14. கொடுத்துள்ள எல்லா பதில்களும் அருமை!!

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. @ஆமினா..
  நன்றிங்க..

  ReplyDelete