.

Tuesday, August 31, 2010

BPO பயிற்சியும்.. வேலையும்.. அதன் அரசியலும்..

BPO வேலைகளுக்கு எப்படி இண்டர்வியூ நடக்குதுன்னு முந்தைய பதிவுல சொன்னேன்.. ஆஃபர் வாங்கியாச்சு.. அடுத்து..

ஜாய்னிங் டே..

கொஞ்சம் பெரிய கம்பெனிகள்ல நாம ஆஃபர் வாங்கியிருந்தோம்னா.. அன்னைக்கு முழுக்க இண்டக்சன் புரோகிராம் நடக்கும்.. கத்தை கத்தையா பேப்பரக் குடுத்து எல்லாத்தையும் ஃபில் பண்ணச் சொல்வாங்க.. நாமளும் வீரமாவும், பெருமிதமாகவும் ஃபில் பண்ணிக்கொடுப்போம்..

நெக்ஸ்ட் ட்ரைனிங்..

நாம செய்யப்போற வேலைக்கு ஏத்தமாதிரி ஒருமாசமோ அல்லது ஒருவாரமோ ட்ரைனிங் தருவாங்க.. ரொம்ப ஜாலியாப் போகும் அந்த புரோகிராம்.. பெரும்பாலும் வர்ற ட்ரைனர்ஸ் அப்படியே நம்ம மனசுல நின்னுடுவாங்க.. சிரிக்க சிரிக்க பேசி.. விளையாட்டு காமிச்சு ட்ரைனிங்கை ரொம்ப நல்லா கொண்டு போவாங்க.. அந்தக் கம்பெனியில நாம ரொம்ப மகிழ்ச்சியா இருந்த தருணம் அதுமட்டும்தான்னு பின்னாடி தெரிஞ்சுக்குவோம்..

நெக்ஸ்ட் புரொடெக்சன் ஃப்ளோர்..

புரொடெக்சன் ஃப்ளோருக்குள்ள வர்ற ஒவ்வொருத்தருக்கும் சொல்றேன்.. கரெக்டா ஆறுமாசம் பாருங்க.. உங்களுக்கு அங்க ஏதாவது முன்னேற்றம் இருக்கான்னு அதுக்குள்ள தெரிஞ்சுடும்.. அப்படி ஏதும் இல்லைங்கற பட்சத்துல அடுத்த வேலைக்கு அதைவிட நல்ல சம்பளத்துல ஜம்ப் ஆயிடறது நல்லது.. பரவாயில்லை அப்படிங்கற நினைப்பை உங்க மனசுல விதைச்சிட்டிங்கன்னா அது ஒரு போதைப் பழக்கத்துக்கு நீங்க அடிமையான மாதிரிதான்.. செய்ற வேலையே மறுபடியும் மறுபடியும் செய்து செய்து உங்க மூளை அப்படியே மழுங்கன மாதிரி ஆயிடும்..

ஓகே.. நம்ம மேட்டருக்கு வருவோம்.. உங்களுக்குன்னு ஒரு டீம் பிரிச்சு.. உங்க டீம் லீடர், பிராஜெக்ட் மேனேஜர்.. எல்லாரையும் அறிமுகப்படுத்தி வேலையில உக்கார வைச்சிடுவாங்க.. ட்ரைனிங்லயே நீங்க ப்ளோர்ல எப்படி நடந்துக்கனும்.. அங்க என்ன என்ன டைமிங், ரூல்ஸ் ஃபாலோ பண்றாங்க.. புரொடக்சன் ஃப்ளோருங்கறது ட்ரைனிங் மாதிரி இருக்காது அப்படி இப்படின்னு ட்ரைனர் அடிக்கடி நம்மளை பயமுறுத்தி வைச்சிருப்பார்.. அதுனால ஒரு பயத்தோடவே வேலையை ஆரம்பிப்போம்..

இந்த நிறுவனங்கள்ல உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கற நேரம் எப்பவுமே ரெண்டுங்கெட்டான் நேரமாத்தான் இருக்கும்.. ஏன்னா நாம பிராஜெக்ட்டுக்கு ஏத்தமாதிரி யூ.எஸ்., யூ.கே., ஆஸ்திரேலியா., நேரத்துல வேலை செய்யனுமாம்..

இதுல ரொம்ப கொடுமை ஆஸ்திரேலிய நேரத்துல வேலை செய்றதுதாங்க.. காலையில 4 மணிக்கு பிக்-அப்புக்கு வண்டி அனுப்புவாங்க.. யூ.எஸ் நேரத்துல சிக்கிட்டீங்கன்னா அப்புறம் நீங்க பகலைப் பார்க்கவே முடியாது.. தூங்கிட்டே இருக்க வேண்டியதுதான்..
 யூ.கே டைமிங்னா நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி.. மதியத்துல இருந்து நைட் வரைக்கும் வேலை பார்ப்போம்..

சரி இப்போ வேலையைப் பார்க்க ஆரம்பிப்போம்.. ஒவ்வொரு டீம் லீடருக்கும் எடுபிடி வேலையா.. அதாவது அசிஸ்டெண்டா ஒருத்தர் இருப்பார்.. அவர்தான் நமக்கு வேலை எல்லாம் அசைன் பண்ணுவார்.. கம்பெனியோட C.E.O கூட அமைதியா இருப்பார்.. இந்தப் பசங்க இருக்காங்களே பயங்கர லொல்லு பண்ணுவாங்க.. நாமதான் புதுசாச்சே ஒன்னும் புரியாததால அமைதியா வேலை பார்க்க வேண்டியதுதான்..

நம்ம செய்ற வேலையைப் பத்தின ஃபீட்பேக் அடிக்கடி கிளையண்டுங்க கிட்டயிருந்து வரும்.. நாமலும் பயங்கர சின்சியரா வேலை பார்த்துட்டு இருப்போம்.. ஆனாலும் வாரம் ஒருமுறையாவது மொத்தமா எல்லாத்தையும் ஒரு சின்ன ரூம்ல நிக்கவைச்சு.. நீங்கல்லாம் சரியா வேலை செய்றதில்லை.. ஆச்சா..போச்சான்னு.. நம்ம டீம் லீடர் கத்துவார்.. இதுல நல்லா வேலை செய்த நம்ம பேரைச் சொல்லாம.. சிலபேர் மட்டும் நல்லா வேலைப் பார்க்கறாங்கன்னு பொத்தாம்பொதுவா சொல்வார்.. இதுல என்னன்னா நல்லா வேலை செய்தவங்களுக்கு சரியான அங்கிகாரம் கிடைக்கறதில்லை.. நல்லா வேலை செய்யாதவங்க.. ஓஓஓ.. அப்ப நம்மளைத் திட்டலை போலன்னு போயிட்டே இருப்பாங்க..

அடுத்த ரெண்டு நாள்லயே திரும்பவும் அந்த சின்ன அறைக்கு கூப்பிட்டு போவாங்க.. நாமலும் போச்சுடா இன்னைக்கும் வாங்கப்போறோம்னு நினைச்சிட்டே போய் நிப்போம்.. நம்ம டீம் லீடர் வந்து.. நீங்கெல்லாம் சூப்பரா வேலை செய்றிங்கன்னு கிளையண்ட் கிட்டயிருந்து மெயில் வந்திருக்கு.. உங்களை மாதிரி ஒரு டீமை இதுவரை நான் ஹேண்டில் பண்ணினதில்லை.. நீங்கள்லாம் அப்படி..இப்படின்னு புகழோ புகழ்ன்னு புகழுவார்.. இப்பவும் நல்லா வேலை செய்த நாம.. பேபேன்னு பார்த்துட்டு நிப்போம்..

ஆக்சுவலா அவங்களோட சூழ்ச்சி என்னன்னா.. பாகுபாடு பார்க்காம எல்லாருக்கும் ஒருமாதிரியான மெண்டல் பிரசர் குடுத்துட்டே இருக்கனும்.. அப்போதான் எல்லாரும் பயத்தோட வேலைப் பார்ப்பாங்க இல்லையா.. அதனால திட்டறதும், புகழ்றதும் ரொட்டீனா நடந்துட்டே இருக்கும்..

சரி.. இந்தப்பதிவு கொஞ்சம் நீளமாயிட்டதால.. நம்மள்ல நல்லா வேலைப் பார்த்தவங்களை டீம் லீடர் ஆக்கிடலாம்..

அடுத்த பதிவுல டீம் லீடரோட பார்வையில இருந்து நம்ம டீமை வழிநடத்தப் போறோம்.. என்ன சொல்றீங்க..

பாகம் 3 - இங்கே கிளிக் பண்ணுங்க

11 comments:

 1. புதியவர்களுக்கு உபயோகம்..

  ReplyDelete
 2. //ஆறுமாசம் பாருங்க.. ஏதாவது முன்னேற்றம் இருக்கான்னு இல்லைங்கற பட்சத்துல அடுத்த வேலைக்கு அதைவிட நல்ல சம்பளத்துல ஜம்ப் ஆயிடறது நல்லது.. பரவாயில்லை அப்படிங்கற நினைப்பை உங்க மனசுல விதைச்சிட்டிங்கன்னா உங்க மூளை அப்படியே மழுங்கன மாதிரி ஆயிடும்..//

  ஆஹா சின்ன புள்ளையா இருந்தாலும் கருத்தா பேசுறீங்க பாஸ் வெல்டன்

  ReplyDelete
 3. @எம் அப்துல் காதர்..
  உங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

  @அஹமது இர்ஷாத்..
  வருகைக்கு நன்றி..

  @கக்கு - மாணிக்கம்
  வருகைக்கு நன்றி..

  ReplyDelete
 4. ஆக்சுவலா அவங்களோட சூழ்ச்சி என்னன்னா.. பாகுபாடு பார்க்காம எல்லாருக்கும் ஒருமாதிரியான மெண்டல் பிரசர் குடுத்துட்டே இருக்கனும்.. அப்போதான் எல்லாரும் பயத்தோட வேலைப் பார்ப்பாங்க இல்லையா.. அதனால திட்டறதும், புகழ்றதும் ரொட்டீனா நடந்துட்டே இருக்கும்..


  ......இது என்ன கலாட்டா?

  ReplyDelete
 5. பயனுள்ள பதிவு. நன்றி.\

  ReplyDelete
 6. இதைப் பற்றி தெரிஞ்சுக்கனும்னு ரொம்ப நாளா ஆசை! நன்றி!

  ReplyDelete
 7. வேலையை பத்தி சொல்றத கூட ஒரு வித ஜோவியலா சொல்வது மிக பிடித்து இருக்கிறது. நல்ல தகவல்கள்....வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 8. BPO எல்லாம் கொஞ்ச நாளைக்குதான்... அப்புறம் எல்லாம் KPO தான்...

  ReplyDelete
 9. @சித்ரா..
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

  @அன்பரசன்..
  நன்றிங்க அன்பரசன்..

  @karthickeyan..
  வருகைக்கு நன்றிங்க..

  @எஸ்.கே..
  உங்களுக்கு உபயோகமான தகவலை அளித்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்..
  நன்றிங்க..

  @Kousalya..
  வருகைக்கு நன்றிங்க கெளசல்யா.. தொடர்ந்து என்னுடைய பதிவுகளுக்கு பின்னூட்டம் அளிப்பதற்கும் நன்றி..

  @சிவராம்குமார்..
  கருத்துக்களுக்கு நன்றிங்க..

  ReplyDelete