.

Monday, August 16, 2010

மேல ஒருத்தன் இருக்கான்..


ஒன் பிட்ச் கேட்ச் தெரியுமா உங்களுக்கு?..

நாம கிரிக்கெட்ட மைதானத்துல விளையாடறதுக்குப் பதிலா.. நமக்கு ஏத்தமாதிரி விதிகளை எல்லாம் மாத்திக்கிட்டு ஏதாவது சின்ன அறையில விளையாடுவோம்.. நிறைய பேர் இந்த மாதிரி விளையாண்டிருப்போம்.. அதுல ஒருவகைதான் ஒன் பிட்ச் கேட்ச்.. அதாவது பந்து தரையில ஒரே ஒரு தடவை மோதின உடனே கேட்ச் பிடிச்சா அவுட்..

நான் 11வது படிச்சிட்டிருந்த நேரம்..

எங்க கிளாஸுக்கு வாத்தியார் வராத நேரத்துல எல்லாம் ஒரு கட்டைய வைச்சிக்கிட்டு கிளாஸ்ல இருக்கற 14 பேரும் விளையாடுவோம்.. எங்களோட கிளாஸ் ஒரு ஓட்டு வீடு டைப்ல இருந்ததால ஓட்டைத் தாங்கறதுக்கு விட்டம் எல்லாம் இருக்கும்..

எங்க 14 பேருல ஒருத்தன் மட்டும் ரொம்ப சுட்டி.. ஜாக்கிசான் ரசிகன்.. அதனால நான் பீல்டிங் விட்டத்துல இருந்துதான் பண்ணுவேன்னு அடம் பிடிப்பான்.. பேட்ஸ்மேன் பந்தை அடிச்சு எட்ஜ் ஆயி மேல போனா... விட்டத்துல இருந்து விழுந்திடாம லாவகமா.. வர்ற பந்தையும் கேட்ச் பண்ணுவான்.. நாங்கள்லாம் எங்களுக்கு தகுந்த மாதிரி பென்ச் மேல நின்னு ஃபீல்டிங் பண்ணுவோம்..

ஒருநாள் எங்க வகுப்புக்கு வாத்தியார் வரல.. நான் சொன்ன விதத்துல ஃபீல்டிங் செட் பண்ணி விளையாடிட்டு இருந்தோம்.. அன்னைக்கும் என்னோட பிரண்ட் விட்டத்துல இருந்துக்கிட்டு ஃபீல்டிங் பண்ணிட்டு இருந்தான்.. நாங்களும் மும்முரமா விளையாடிட்டு இருந்தோம்.. அப்ப திடீர்னு நாங்க எதிர்பார்க்காத நேரத்துல எங்க வாத்தி வந்துட்டார்.. எல்லாரும் அப்படியே அரெஸ்ட்.. பேட்டிங் பண்றவனுக்கு நான் தூக்கி எறிஞ்ச பந்து வாத்தி மேல பட்டு எகிறிட்டு இருந்தது..

அப்புறம் என்ன.. எங்களப் புடிச்சு விளாசு விளாசுன்னு விளாசினார்.. அப்புறம் அமைதியாகி பாடம் நடத்த ஆரம்பிச்சிட்டார்.. எங்களுக்கு திடீர்னு ஒருத்தன மட்டும் காணோமேன்னு ஞாபகம் வந்தது.. எங்க அவன்னு தேடனா.. இன்னும் விட்டத்துலயே உக்காந்துருக்கான்.. எங்க எல்லாத்துக்கும் எப்படி சஸ்பென்சா இருந்திருக்கும் பாருங்க.. வாத்தியாரும் அதுவரை அவன் மேல இருக்கறதை நோட் பண்ணல.. எங்களுக்கு அவன் சிக்குவானா இல்லையான்னு அவ்வளவு ஆர்வம்.. ஒரு திகில் படம் பார்க்கற மாதிரி ஒவ்வொருத்தர் வயித்திலயும் ஒருமாதிரி இம்சை.. வாத்தியார் போர்டைப் பார்த்து கிளாஸ் எடுத்துட்டு இருக்கப்ப நாங்க ஒவ்வொருத்தரும் மேல இருக்கற அவனப்பார்த்து சிரிச்சுட்டே இருந்தோம்.. அவன்னா ஒரு பல்லி மாதிரி மேலயே ஒட்டியிருந்தான்..

கிளாஸ் முடிஞ்சது.. எப்பவும் போல வாத்தி எங்களை எல்லாம் எச்சரிக்கை செஞ்சுட்டு போனார்.. கடைசி வரைக்கும் விட்டத்துல இருந்தவன பார்க்கவே இல்ல அவர்.. 2.30 மணிநேரம் விட்டத்துல இருந்துட்டு கீழே இறங்கின அவன எல்லாரும் தூக்கி வைச்சி கொண்டாடினோம்.. இந்த மாதிரி பல சேட்டைகள் நடந்திருக்கு.. அதெல்லாம் அப்புறம் சொல்றேன்..

13 comments:

  1. பள்ளிப்பருவம் மறக்க முடியாத ஒண்று, ,, பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பள்ளி நாட்களை எண்ணி எண்ணிப் பார்த்து மகிழும் நேரமிது அசத்துங்க பாஸ். வாழ்த்துகள்!!

    ReplyDelete
  3. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... கலக்கல் அனுபவங்கள்! தொடர்ந்து எழுதுங்க.... நல்லா இருக்குங்க!

    ReplyDelete
  4. கண்டிப்பாங்க.. பள்ளி நாட்கள் ஒவ்வொருத்தர் மனசுலயும் நிலைச்சிருக்கும் விசயம் இல்லையா..

    வருகைக்கு நன்றி மதுரை சரவணன்..

    வருகைக்கு நன்றி எம் அப்துல் காதர்..

    ReplyDelete
  5. நன்றி சித்ரா..

    முதல் முறையா என்னுடைய வலைத்தளத்திற்கு வந்திருக்கீங்க..

    உங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  6. ஹாஹ்ஹா..சுவார‌ஸ்ய‌ம்தான்!

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி ரகு..

    ReplyDelete
  8. சுவாரசியமாக இருக்குங்க! பள்ளியில் இந்த மாதிரி விளையாண்டு மாட்டிகிட்டுதெல்லாம் மறக்க முடியுமா? :-)

    ReplyDelete
  9. @எஸ்.கே..

    இருக்காதுங்களா பின்ன.. அதுவும் கிளாஸ் நேரத்துல வாத்தியார் வந்துடுவாரோன்னு பயந்துட்டே பண்ணின சேட்டைகள் எல்லாம் இப்ப நினைச்சாலும் சாந்தோசமா இருக்கும்..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எஸ்.கே..

    ReplyDelete
  10. அருமையான மலரும் நினைவு!!!பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. You write really good and the way you narrate things is entertaining.

    But.. which class goes for 150 minutes. When I was in school, it used to be max of 60 minutes. May be a typo..

    ReplyDelete
  12. @காயலாங்கடை காதர்..
    நன்றிங்க..

    ReplyDelete
  13. @Outofthezoo..
    ///
    You write really good and the way you narrate things is entertaining.

    But.. which class goes for 150 minutes. When I was in school, it used to be max of 60 minutes. May be a typo.. ///

    நன்றிங்க..
    உங்களுடைய சந்தேகம் கரெக்டுதான்.. நான் படிச்ச ஸ்கூல்ல ரெண்டு மூனு சப்ஜெக்ட்டை ஒருத்தரே எடுப்பார்.. அவ்லோதான்.. :-))

    ReplyDelete